குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

எல்லா சமையலுக்கும் உபயோகமாகும் புதினா பொடி : எளிய செய்முறை

எளிய சமையல்

1. புதினா பொடி

நந்தினி சண்முகசுந்தரம்

வேலைக்குச் செல்பவர்களாக இருந்தாலும் வீடு நிர்வாகத்தை கவனித்துக் கொண்டாலும் இன்றைக்கு நேரம் போதாவில்லை என்பதைத்தான் பெரும்பாலும் சொல்கிறார்கள். எல்லோருக்குமே இப்போது வேலைகள் அதிமாகிவிட்டதே காரணம். சரியாக திட்டமிட்டால் தவிர, இந்தப் பிரச்னையைத் தீர்க்க வழியில்லை. வேலைகளை சமமாகப் பகிர்வது, முன் தயாரிப்புகள் போன்றவை தீர்வுக்கான சில வழிகள். முன் தயாரிப்புகளில் சமையலுக்குத் தேவையான பொடிகளை தயாரித்துக் கொள்வதும் அடங்கும். தேவையை, பொருளின் தன்மையைப் பொறுத்து வாரம், 15 நாட்கள், 1 மாதம், 3 மாதம், 6 மாதம், 1 வருடத்துக்கென பொடி வகைகளை தயாரித்து வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் நமக்குக் கிடைக்கும் இன்னொரு முக்கியமான பயன், நாம் தேவையில்லாத பிரசர்வேடிவ்களை தவிர்க்கிறோம் என்பதும், அதன் மூலம் நம் உடலுக்கு நல்லதை செய்துகொள்கிறோம் என்பதும். சரி… இந்த பொடி வரிசையில் முதலில் நாம் புதினா பொடி எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம்…

தேவையானவை:
புதினா இலைகள் – ஒரு கப்
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – சிறிதளவு.

DSCN0196
எப்படி செய்வது?
புதினா இலைகளை ஆய்ந்து, கழுவி, ஒரு பேப்பரின் மேல் உலர்த்துவதுபோல் காய வைக்கவும். ஒரு சுத்தமான டவலால் புதினா இலைகளின் மேல் உள்ள நீரை ஒற்றி எடுக்கவும். இலைகளில் நீர் துளி இல்லாமல் இருக்க வேண்டும் அவ்வளவுதான்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, பெருங்காயத்தைப் போட்டு பொரிந்ததும் எடுத்து வைக்கவும். அந்த எண்ணெயிலேயே உளுத்தம்பருப்பு, மிளகு போட்டு, மிளகு வெடித்ததும் அவற்றை பெருங்காயம் வைத்திருக்கும் தட்டிலே கொட்டவும். அடுப்பை குறைந்த தணலில் வைத்து அதே வாணலியில், புதினாவைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு அடுப்பை அணைத்து ஆற வைக்கவும்.

மிக்ஸியின் சிறிய ஜாரில் முதலில் உளுத்தம்பருப்பு, மிளகு, பெருங்காயம் ஆகியவற்றை போட்டு அரைத்துக்கொண்டு, பிறகு, அதோடு புதினாவையும் போட்டு அரைக்கவும். இந்தப் பொடியை காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து வைத்துக் கொண்டால் ஒரு வாரம் வரைக்கும் பயன்படுத்தலாம். இந்தப் பொடியை சூடான சாதத்தில் போட்டு, நெய் அல்லது எண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். டிபன்களுக்கும் பயன்படுத்தலாம். ரசம் வைத்து இறக்கும்போது, ஒரு ஸ்பூன் புதினா பொடி போடலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.