இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான உணவு, செல்வ களஞ்சியமே

தேர்வு நேர உணவுகள்!

செல்வ களஞ்சியமே- 90

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

என் பெண்ணிடம் ஒரு விசித்திரமான பழக்கம் உண்டு: தேர்வுக்கு முதல் நாள் ‘நான் படித்ததெல்லாம் மறந்து விட்டது….!’ என்று சொல்லிவிட்டு ‘ஓ!’ என்று அழுவாள். இது ஒவ்வொருமுறை தேர்விற்கு முன்னும் நடக்கும். வழக்கமான ஒன்று என்பதால் நானும் பேசாமல் அவள் அழுது ஓயட்டும் என்று விட்டுவிடுவேன். அழுது முடித்தவுடன் ‘பளிச்சென்று’ என்று ஆகிவிடும் அவள் முகம்! மனதும் லேசாகிவிடும். தேர்வுக்கு முன் வரும் மனஅழுத்தம் போயே போச்!

பல மாணவ மாணவிகளுக்கும் படித்தது மறந்துவிடுமோ என்ற சந்தேகம் தோன்றிக்கொண்டே இருக்கும். இது இயல்பான ஒன்று தான். ஆரோக்கியமான உணவு, தேவையான அளவு உடற்பயிற்சி அல்லது விளையாட்டு இவையே நல்ல நினைவாற்றலையும் வளர்க்கும். ஒரு ஆரோக்கியமான உடலில் தான் ஆரோக்கியமான மனம் இருக்க முடியும். தினசரி உண்ணும் உணவிலேயே குழந்தைகளுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்படி பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சென்ற வாரம் சொன்னதுபோல செயற்கையாக குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க செய்யாமல் நாம் உண்ணும் உணவில் சற்று கவனம் செலுத்தினால் போதும். இயற்கையாக அவர்களது நினைவுத்திறனை வளர்க்கலாம். தேர்வு சமயத்திலாவது குழந்தைகளுக்கு ஜங்க் உணவுகள் கொடுக்காமல் சத்துள்ள உணவுகள் கொடுக்க வேண்டும்.

காலைச் சிற்றுண்டியை தவிர்க்கக் கூடாது. தினசரி உடலுக்குத் தேவையான சக்தியை நாம் உண்ணும் காலைச் சிற்றுண்டி தான் கொடுக்கும். அதனால் நல்ல முழுமையான உணவாக அது அமைவது மிகவும் முக்கியம். மூன்று வேளை சாப்பாடு என்னும் பழைய வழக்கம் நம்மை சற்று சோம்பேறிகள் ஆக்குகிறது. அதற்கு பதிலாக சிறிய அளவில் ஐந்து அல்லது ஆறுமுறை எளிய உணவு எடுத்துக் கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். தேர்வு சமயத்தில் குழந்தைகளுக்கு இதுபோல சிறிய அளவில் அடிக்கடி சாப்பிடக் கொடுப்பது அவர்கள் விரைவில் சோர்வு அடையாமல் தடுக்கும். சாப்பிடும்போது கிடைக்கும் ஓய்வும் அவர்களுக்கு பிடிக்கும்.

கொடுக்க வேண்டிய உணவுகள்:

 • நார்சத்து நிறைந்த உணவுப்பொருட்களான ஓட்ஸ், பார்லி ஆகியவற்றை குழந்தைகளின் உணவில் சேருங்கள்.
 • நிறைய காய்கறிகள், பழங்கள் கொடுப்பதால் அதிக சக்தி கிடைக்கும். சீக்கிரம் களைத்துப் போகாமல் இருப்பார்கள்.
 • புரதம் நிறைந்த தானியங்கள், முளைகட்டிய தானியங்கள், பால் சம்பந்தப்பட்ட உணவுகள், முட்டை ஆகியவற்றை தினமும் உணவில் சேர்க்கவும்.
 • குப்பை உணவுகள், செயற்கையான சக்தி கொடுக்கும் பானங்கள், கார்பன் சேர்க்கப்பட்ட பானங்கள் அருந்துவதை தவிர்க்கவும். இந்த உணவுகள் அதிக கலோரிகளைக் கொண்டவை. பருகியபின் நமக்கு ஒருவித அலுப்பை உண்டு பண்ணுபவை. உடலை சோம்பலுக்கு உள்ளாக்குபவை.
 • உலர்ந்த பழங்கள். கொட்டைகள் என்று சொல்லப்படும் பாதாம், வால்நட், பிஸ்தா, flax (ஆளி விதைகள்) ஆகியவற்றை கொடுக்கலாம். ஆளிவிதைகளில் ஒமேகா – 3 மற்றும் zinc ஆகிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இந்த ஒமேகா – 3 நினைவுத்திறனை பெருக்கும்.
 • நிறைய நீர் குடிக்க வேண்டும். உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

உணவில் கவனம் செலுத்துவது போலவே குழந்தைகளுக்கு படிக்கும் சமயத்தில் அவ்வப்போது ஓய்வு தேவை. சாயங்கால வேலைகளில் சிறிய நடைப்பயிற்சி செய்யலாம். மனதை அலைக்கழிக்காத வகையில் புத்தகங்கள் படிக்கலாம். சிறிது நேரம் தொலைக்காட்சி பார்க்கலாம். இங்கும் மனதை பாதிக்காத நிகழ்ச்சிகளைப் பார்க்க வேண்டும். குழந்தைகளிடம் பாடும் திறன் இருந்தால் படிப்பிற்கு நடுவில் சற்று நேரம் பாடலாம். ஓவியம் வரையலாம். கைவேலைகள் செய்யலாம். ஒன்றும் இல்லையென்றால் அம்மாவிற்கு வீட்டு வேலைகளில் சற்று நேரம் உதவலாம். தோட்டவேலை செய்யலாம். பூத்தொடுக்கலாம். பாத்திரங்களை அடுக்கலாம். கோலம் போடலாம். இந்த வேலைகள் மனதிற்கு அமைதி அளிப்பதுடன் எப்போதுமே படித்துக் கொண்டிருப்பதிலிருந்து சற்று விடுதலையும் அளிக்கும்.

இதைப்போன்ற ஏதாவது ஒருவகை உடலுழைப்பில் ஈடுபடும் குழந்தைகள் மற்ற குழந்தைகளைவிட படிப்பில் சுட்டியாக இருப்பதாக ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. அவர்களது மனமும் எப்போதும் மகிழ்ச்சியாகவும், இலேசாகவும் இருக்கிறதாம். தேர்வு என்றாலே ஏற்படும் மனஅழுத்தம் குறைய இந்த மாதிரியான சின்னச்சின்ன வேலைகள் மிகவும் உதவிகரமாக இருக்கின்றனவாம்.

இவை மட்டுமின்றி உடற்பயிற்சி செய்வதனால் உண்டாகும் பலன்கள்:

 • உடலுக்கும், மூளைக்கும் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரித்து சுறுசுறுப்பும் அதிகரிக்கிறது. நினைவாற்றலும் அதிகரிக்கிறது.
 • உடலின் ஒருங்கிணைப்பு மற்றும் அனிச்சை செயல்கள் நல்லவிதத்தில் நடைபெறுகின்றன.
 • நல்ல தூக்கம் வருகிறது. காலை எழுந்திருக்கும்போது மனமும் உடலும் தளர்வான நிலையில் உற்சாகத்துடன் இருக்கிறது.
 • நமது உடலில் feel-good ஹார்மோன்கள் சுரக்க உடற்பயிற்சி உதவுகிறது.

தினசரி வாழ்க்கையில் நமக்கு தேவையானவை நல்ல உணவு, நல்ல தூக்கம், சரியான உடற்பயிற்சி. தேர்வு சமயங்களில் இவை நமக்குப் பலவகைகளில் உதவுகின்றன. ஆரோக்கியமான மனநிலையில் இருக்கும் மாணவர்கள் தோல்விகளைக் கண்டு மனம் உடைந்து போவதில்லை. தோல்வியும் அவர்களை நெருங்குவதில்லை.

தேர்வு சமயத்தில் படிப்பில் மட்டுமில்லாமல் உடல், மன ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். ஆரோக்கியமான சாப்பாடு, வேண்டிய அளவிற்கு தூக்கம், தேவையான உடற்பயிற்சி இவை குழந்தைகளுக்கு தேவையான தன்னம்பிக்கையை கொடுக்கின்றன. இந்தத் தன்னம்பிக்கையை குழந்தைகளிடம் வளர்ப்பது பெற்றோர்களின் கடமையாகும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் இவர்களின் ஒத்துழைப்புடன் ஒவ்வொரு மாணவரும் நிச்சயம் தேர்வுகளை நல்லமுறையில் எழுதி வெற்றி பெற முடியும்.

தேர்வு எழுதும் எல்லா மாணவர்களுக்கும் நமது நல்வாழ்த்துக்கள்.

“தேர்வு நேர உணவுகள்!” இல் ஒரு கருத்து உள்ளது

 1. அடுக்கடுக்காக எவ்வளவு யோசனைகள். பிள்ளைகளின் அந்த நிமிஷ பிரச்சினைகள். நல்ல வார்த்தை சொல்லி அவர்கள் நல்லபடி தேர்வு எழுதிவரும் வரை தாய்மார்களின் பிரச்சினையும், பொருப்புகளும். டியூஷனுக்கு அனுப்பி விட்டால் போதும் என்ற நிலை மாறி ஒவ்வொரு பெற்றவர்களும் கடைபிடிக்க நல்ல முறைகள். நல்ல பதிவு ரஞ்ஜனி. அன்புடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.