சினிமா, விஜய் சேதுபதி

இயக்குநர் பாலா தயாரிப்பில் விஜய் சேதுபதி!

இயக்குனர் பாலா - பி ஸ்டுடியோஸ் சார்பில்,  தயாரிப்பாளர் சுரேஷ் களஞ்சியத்தின் ஸ்டுடியோ 9 புரொடக்ஷன்ஸுடன் இணைந்து மிகப் பிரம்மாண்டமான முறையில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். விஜய் சேதுபதி கதாநயாகனாக நடிக்கும் இப்படத்திற்கு ‘வசந்த குமாரன்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. பாலா – விஜய் சேதுபதி இணையும் முதல் படம் இது. சத்யராஜ், தேவயானி நடித்த ‘செம ரகளை’, ஸ்ரீகாந்த் நடித்த ‘எதிரி எண் 3’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய ஆனந்த் குமரேசன்… Continue reading இயக்குநர் பாலா தயாரிப்பில் விஜய் சேதுபதி!

சினிமா, நடிகர்கள், விஜய் சேதுபதி

எனக்கு நடிக்கவே வராது! விஜய் சேதுபதி ஓபன் டாக்

பண்ணையாரும் பத்மினியும் ரிலீஸ் பிஸியில் இருந்த நடிகர் விஜய் சேதுபதியிடன் ஒரு மினி பேட்டியைக் கேட்டோம். இவ்வளவு பெரிய ஸ்டார் ஆவோம் என்று நினைத்துப் பார்த்ததுண்டா என்று ஆரம்பித்தோம்... ’’சொந்த ஊர் ராஜபாளையம் என்றாலும் படித்தது எல்லாமே சென்னைதான். 2004ல் தான் சினிமா துறைக்கு வந்தேன். ஒரு சினிமா கம்பெனியில் அக்கவுண்டன்ட் வேலைக்குத்தான் சேர்ந்தேன். ஆனால் ஹீரோவாக நடிப்பேன். இவ்வளவு பெரிய மாஸ் கிடைக்கும். தமிழக ரசிகர்கள் என் முகத்தை ஏற்றுக்கொள்வார்கள் என கனவில் கூட நினைத்தது… Continue reading எனக்கு நடிக்கவே வராது! விஜய் சேதுபதி ஓபன் டாக்

இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா, விஜய் சேதுபதி

இந்த வார ரிலீஸ் படங்கள்!

இந்த வாரம் பண்ணையாரும் பத்மினியும், உ, புலிவால் ஆகிய மூன்று படங்கள் வெளியாகின்றன. விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா நடித்திருக்கும் பண்ணையாரும் பத்மினியும் கிராமத்து பின்னணியில் நடக்கும் கதை. பாடல்கள் ஹிட் ஆகி உள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. தம்பி ராமையா மற்றும் புதுமுக நடிகர் நடித்திருக்கும் உ நகைச்சுவை படமாக உருவாகியிருக்கிறது. ராதிகாவின் ராடன் மீடியாவின் இணை தயாரிப்பில் விமல், பிரசன்னா, ஓவியா, இனியா,சூரி, தம்பிராமையா நடித்திருக்கும் புலிவால் நகைச்சுவையுடன் த்ரில்லர் கலந்த படம்.

இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா, விஜய் சேதுபதி

இந்த வார ரிலீஸ் படங்கள்!

இந்த வாரம் ரம்மி, இங்க என்ன சொல்லுது, நினைத்தது யாரோ ஆகிய மூன்று படங்கள் வெளியாகின்றன். இதில் நினைத்தது யாரோ மற்றும் இங்க என்ன சொல்லுது இரண்டும் இன்று வெளியாகின்றன. ரம்மி நாளை வெளியாகிறது. ரம்மி முதல் படமான ‘தென்மேற்கு பருவகாற்று’ படத்திற்குப் பிறகு, விஜய் சேதுபதி மீண்டும் கிராமத்து கதையில் நடிக்கிறார். இன்னொரு கதாநாயகனாக இனிகோ பிரபாகர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநயாகிகளாக காயத்ரி, ஐஸ்வர்யா இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சூரி நடிக்கிறார். படத்தின்… Continue reading இந்த வார ரிலீஸ் படங்கள்!

சினிமா, விஜய் சேதுபதி

ஒரே நேரத்தில் 5 பெரிய பட்ஜெட் படங்களில் ஹீரோ!

சென்ற வருடம் வெளியான நீர்ப்பறவை படத்திற்குப் பிறகு இடைவெளி விட்டிருந்த நடிகர் விஷ்ணு விஷால், தற்போது 5 பெரிய பட்ஜெட் படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். எத்தன் பட இயக்குநர் சுரேஷ் அடுத்து இயக்கும் கலக்குற மாப்ளே படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடி பிந்துமாதவி. ராம் இயக்கும் முண்டாசு பட்டி படத்தில் அட்டகத்தி நந்திதா ஜோடி சேர்க்கிறார். சுசீந்திரன் அடுத்து இயக்கவிருக்கும் வீரதீர சூரன் படத்தில் விஷ்ணு கதாநாயகனாக நடிக்கிறார். சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இடம்பொருள் ஏவல் படத்தில் நடிக்கிறார்.… Continue reading ஒரே நேரத்தில் 5 பெரிய பட்ஜெட் படங்களில் ஹீரோ!