முதன்மை செய்திகள்


திமுக தலைவர் மு.கருணாநிதி மொழிப் போர்த் தியாகிகள் நினைவு நாள் – வீர வணக்க நாள் – அந்த நாளை, கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடித்து வருகிறோம். அந்த நாளில் தமிழகத்தின் ஒவ்வொரு நகரிலும், கழகப் பேச்சாளர்கள் கலந்து கொண்டு, மொழிப்போரிலே கழகம் ஈடுபட்ட வரலாற்றை நினைவுபடுத்தி வருகிறார்கள். அது போல இந்த ஆண்டும் தமிழகம் முழு வதிலும் வீர வணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. பேச்சாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ள கழக மாணவரணிச் செயலாளர், தம்பி இள…. Read More ›

இந்தியா வந்தார் ஒபாமா!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று அதிகாலை மூன்று நாள் பயணமாக டெல்லி வந்தடைந்தார்.  ஒபாமாவுடன் அவரது மனைவி மிசேல் ஒபாமாவும் வந்தார். இவர்கள் இருவரையும் பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். ஒபாமாவின் வருகையையொட்டி தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவரின் வருகையால் தலைநகர் டெல்லி போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநகரம் முழுவதும் 15 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் போலீசார்… Read More ›

விமான எரிபொருள் ரூ.57.45, பெட்ரோல் ரூ.61.38!

இந்திய வரலாற்றில் முதன்முறையாக  விமான எரிபொருளை விட பெட்ரோல் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்த உலகிலும் இப்படி ஒரு பொருளாதார நிலைப்பாட்டை எந்த ஒரு அரசும் மேற்கொண்டிருக்குமா என்பது ஐயமே?  என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வரும் நிலையில் அதற்கு இணையாக உள்நாட்டில் எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால்… Read More ›

த மு எ க ச தொடர்ந்த வழக்கில் பெருமாள் முருகனையும் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு

‘மாதொருபாகன்’ நாவல் விவகாரத்தில் அமைதிக் குழு கூட்டத்தின் முடிவை எதிர்த்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தலைவர் ச.தமிழ் செல்வன்  தொடர்ந்த  வழக்கில் எழுத்தாளர் பெருமாள் முருகனையும் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சுந்தரேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்கவே அமைதிக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது…. Read More ›

மாதொருபாகன் சர்ச்சை: வருவாய் அலுவலர் நடத்திய பேச்சுவார்த்தை முடிவை ரத்து செய்யக் கோரி வழக்கு

மாதொருபாகன் நூலாசிரியர் பெருமாள் முருகனை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வைத்து வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் தமிழில் எண்ணற்ற கதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். கடந்த 2010-ஆம் ஆண்டு மாதொருபாகன் என்ற நாவலை… Read More ›

‘பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது’: ஜெயா – ஜேட்லி சந்திப்பு குறித்து கருணாநிதி அறிக்கை

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி சந்தித்து குறித்து சந்தேகத்தை உறுதிப்படுத்தும் சந்திப்பு என திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த அறிக்கையில், ‘சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் நான்காண்டுகள் சிறைத் தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட குற்றவாளியான ஜெயலலிதாவை அவருடைய வீட்டிற்கே சென்று மத்திய நிதியமைச்சர், திரு.அருண் ஜேட்லி நேற்றைய தினம் நாற்பது நிமிட நேரம் சந்தித்துப் பேசியிருக்கிறார். தந்தை பெரியார் அவர்கள் தான் அடிக்கடி… Read More ›

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்: ஜெ.அனுதாபம் வளர்மதிக்கு வெற்றியைத் தருமா?

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதை அடுத்து, முதலமைச்சர் பதவியையும், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ பதவியையும் ஜெயலலிதா இழந்தார். இதையடுத்து, ஸ்ரீரங்கம் தொகுதிக்கு மிகுந்த இழுபறிக்கிடையில் இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். இன்று தொடங்கும் வேட்புமனுத் தாக்கல் வரும் 27-ம் தேதியோடு முடிகிறது.  29ந் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. மனுக்களை திரும்பப் பெற 30-ம் தேதி கடைசி நாளாகும். இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 13-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 16-ம் தேதியும் நடைபெறுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தி.மு.க மற்றும்… Read More ›

குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு நாம் செய்ய வேண்டியதும்; செய்யக்கூடாததும்!

செல்வ களஞ்சியமே – 81 ரஞ்சனி நாராயணன் எடுஸ்போர்ட்ஸ் (EduSports) என்ற அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சி 23 மாநிலங்களில் 85 நகரங்களில் 287 பள்ளிகளில் 1,15,559 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்டது. சாதாரண உடற்பயிற்சி, உடலின் நெகிழ்வுத்தன்மை, கீழ் மற்றும் மேல் உடலின் வலிமை, உடல்நிறைக் குறியீட்டெண் (BMI) ஆகியவற்றில் இக்குழந்தைகளின் ஆரோக்கியம் பரிசோதிக்கப்பட்டது. ஆண் குழந்தைகளின் உடல்நிறை குறியீட்டெண் 59% ஆகவும் பெண்குழந்தைகளின் உடல்நிறை குறியீட்டெண் 65% ஆகவும் இருந்தது. இந்த அளவீட்டில் பெண்குழந்தைகள் அதிக மதிப்பெண்… Read More ›

தோற்றது ராஜபக்சே மட்டும் அல்ல… பிரதமர் மோடியும்தான்!

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேயின் வீழ்ச்சி குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில்,  சீமான் கூறியிருப்பதாவது: இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்ததன் மூலமாக இலங்கையின் நிரந்தர மகுடாதிபதியாக நீடித்துவிடலாம் என கனவு கண்ட ராஜபக்சேயை அந்நாட்டு மக்களே தேர்தலில் தூக்கி வீசியிருக்கிறார்கள். இனவெறி அரசியல், அராஜக நடவடிக்கைகள், குடும்பத் தலையீடு என நேர்மையற்ற அரசியலை மட்டுமே நிர்வாகத் தகுதியாகக் கொண்ட ராஜபக்சேயை வரலாறு காறி உமிழ்ந்திருக்கிறது. அறுபது ஆண்டுகால சுதந்திரப் போராட்டத்தை நசுக்கிவிட்டதாகச்… Read More ›

முடிவுக்கு வரும் எழுத்தாளர் பெருமாள்முருகனின் மாதொருபாகன் சர்ச்சை!

எழுத்தாளர் பெருமாள்முருகன், மாதொருபாகன் நாவலில் சர்ச்சைக்குரிய விதத்தில் எழுதியதாக இந்து அமைப்புகளால் கடும் ஆட்சேபத்துக்கு உள்ளானார். இதை முடித்து வைக்கும்விதமாக பெருமாள் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகச் சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை ஆகியவற்றை எழுதி வருகிறேன். என் நூல்கள் பல்வேறு விமர்சகர்களாலும் எழுத்தாளர்களாலும் வாசகர்களாலும் நல்லவிதமாக மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றன. இலக்கியத்திற்கு என வழங்கப்படும் பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றிருக்கிறேன். கொங்குப் பகுதியில் வழங்கும் சொற்களைத் தனி ஒருவனாகத் தொகுத்துக் ‘கொங்கு வட்டாரச் சொல்லகராதி’யை… Read More ›

குழந்தைகளின் வயதுக்கு மீறிய பருமன் எதனால்?

செல்வ களஞ்சியமே – 80 ரஞ்சனி நாராயணன் இன்றைக்கு செய்தித்தாளில் ஒரு செய்தி. ரொம்பவும் யோசிக்க வைத்து விட்டது. அதாவது இந்த சாமர்த்திய-யுகத்தை சேர்ந்த குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில் நேரம் செலவழிப்பதை விட வீடியோ விளையாட்டுக்களில் அதிக நேரம் கழிப்பது அவர்களது ஆரோக்கியத்தை பெருமளவில் பாதிக்கிறது; இவர்களைவிட, கிராமத்தில் அல்லது வசதிகள் குறைந்த இடத்தில் வசிக்கும் குழந்தைகள் அதிக ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள் என்பதுதான் இந்தச் செய்தியின் சுருக்கம். உடல் ஆரோக்கியம் மட்டுமில்லாமல் அதிக போஷாக்கான உணவுகளை உட்கொள்ளுவதிலும்… Read More ›

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படமாகிறது!

வரலாற்று நாவல்களில் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதைக்கு நட்சத்திர தகுதி உண்டு. நாட்டுடைமையாக்கப்பட்ட அக்கதை இன்றும் பல்வேறு பதிப்புகளாக விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. இவ்வளவு செல்வாக்கு பெற்ற அந்தப்படைப்பை அடுத்த பரிமாணத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படமாகிறது. இரண்டரை மணிநேரம் ஓடக் கூடிய படமாக இது உருவாக இருக்கிறது. இதை தயாரிக்க இருப்பவர் பொ. சரவணராஜா. அவரைச் சந்தித்த போது … இத்தனை நாவல்கள் இருக்கும் போது குறிப்பாக பொன்னியின் செல்வனை… Read More ›

கூட்டணியில் இருந்து விலகிய வைகோ; ரொம்ப நல்லது சொன்ன எச்.ராஜா

இலங்கை உடனான ராஜ்ஜிய உறவு குறித்த விஷயத்தில் இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் அவற்றின் நிலைப்பாடு ஒரேமாதிரியானதுதான்!காங்கிரஸ், பாஜக ஐக்கியமாகும் விஷயங்களில் இலங்கை விவகாரத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். இது நேற்று கட்சியில் சேர்ந்த சாதாரண அரசியல் கட்சித் தொண்டனுக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் பல வரலாற்று சிறப்பு மிக்க அரசியல் காட்சிகளை தன் வாழ்நாளில் கண்ட வைகோவுக்கு தெரியாமல் போய்விட்டது! இலங்கை தமிழரின், தமிழக மீனவர்களின் நலனுக்காக பாஜக கூட்டணிக்கு ஓட்டளிங்கள் என்று  மக்களவைத் தேர்தலில், பாஜக கூட்டணியில் தமிழகத்தில் முதலில்… Read More ›

பூப்பெய்தும் குழந்தைகளை கையாள்வது எப்படி?

செல்வ களஞ்சியம் – 79 ரஞ்சனி நாராயணன் செல்வ களஞ்சியமே இந்த வாரம் கொஞ்சம் வேறு வழியில் போகிறது. அடுத்த வாரத்திலிருந்து வழக்கம்போல தொடரும். சென்ற வாரம் நண்பரின் மகள் பெரியவளாகிவிட்டாள் என்ற செய்தி தெரிந்தது. அந்தப் பெண்ணின் தாயாரிடம் தொலைபேசியில் என் சந்தோஷத்தைத் தெரிவித்தேன். எனக்கு நன்றி கூறியவரின் குரலில் என்னளவு சந்தோஷம் தொனிக்கவில்லை. ‘இன்னும் வயசே ஆகலைங்க அதுக்குள்ள…’ என்றார். ஒரு அம்மாவிற்கே உரிய கவலையுடன். உண்மைதான். நம்மூரில் பெண் குழந்தை பிறக்கும்போதே கவலையும்… Read More ›

சிறுசேரி பெண் என்ஜினியர் கொலை வழக்கில் பாலியல் பாலத்கார குற்றத்தை நிரூபிக்கத் தவறிய அரசு தரப்பு

சென்னை சிறுசேரியில் மென்பொருள் பெண் பொறியாளர் கொலை வழக்கில் வடமாநில இளைஞர்கள் 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. உமாமகேஸ்வரியின் உடல் அழுகிய நிலையில் கைப்பற்றப்பட்டதால் பிரேதப் பரிசோதனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பதை நிரூபிக்க முடியாததால் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை மட்டும் தள்ளுபடி செய்து, வழிமறித்து கொலை செய்த குற்றத்துக்காக 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். ரூ.5… Read More ›

முதலமைச்சர் “பினாமி”யாக இருந்தாலும் நிதானமும் பண்பாடும் தேவை: பன்னீர்செல்வத்திற்கு கருணாநிதி பதிலடி

தைரியம் இருந்தால் சட்டமன்றத்திற்கு வந்து பேசுங்கள் என்று முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்த கருத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி காரசாரமாக பதில் அளித்துள்ளார். முதலமைச்சர் பதவியிலே இருப்பதற்கு ஒரு கண்ணியம் வேண்டும். அது எந்தக் கடையிலே விற்கும் என்று கேட்பவர்களை அங்கே உட்கார வைத்தால், அவர்கள் தங்கள் குணத்தைக் காட்டத் தான் செய்வார்கள். ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூவாக வாய்த்திருக்கும் பன்னீர்செல்வம், சட்டசபையில் தி.மு.க.வினர் அராஜகம் செய்ததாக நேற்றைய அறிக்கையில் கூறியிருக்கிறார். 1957ஆம் ஆண்டு… Read More ›

பிரெஞ்சு படத்தில் தமிழ்ப் பெண்!

கலைகளின் ரசிகர்கள் நிறைந்த பாரீசில் தமிழ்ப் பெண் ஜானகி நடித்த சோன் ஈபூஸ் (Son Epouse – அவனுடைய மனைவி) என்ற பிரெஞ்சு சினிமா  வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது தமிழ்ப்புதுமுக நடிகை ஜானகியின் நடிப்பாற்றல் வலுவானதாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் வெளிப்பட்டுள்ளது என புகழாரம் சூட்டியிருக்கிர்றார்கள் மேற்குலக விமர்சகர்கள். சைக்கோ திரில்லரான இந்தப்படத்தில் முதன்மையான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஜானகி. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் என்ற மேற்குதொடர்ச்சிமலை கிராமத்தில் பிறந்த ஜானகி சினிமாவுக்கு வந்த பின்னணி இதோ… ‘’அப்பா செங்கல் சூளையில… Read More ›

பெற்றோரின் சண்டையில் இருந்தும் குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள்!

செல்வ களஞ்சியமே – 78 ரஞ்சனி நாராயணன் ‘நாங்கள் சண்டையே போடமாட்டோம்’ என்று சொல்லும் தம்பதிகள் இல்லாத காலம் இது. ஊடல், கூடல் இருந்தால் தானே தாம்பத்தியம் ரசிக்கும்? குழந்தைகள் எதிரில் சண்டை போட்டால் சரியில்லை. ஆனால் தாம்பத்தியம் சண்டை வந்தால் என்ன செய்வது? சரியான விஷயத்திற்கு சரியான விதத்தில் சண்டை போட வேண்டும். எப்படி? இதோ சில நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள். உங்களுடைய அடிப்படை நாகரீகத்தை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பேசும் வார்த்தைகள் கவனிக்கப்படுகின்றன… Read More ›

குழந்தைகள் முன்பு பெற்றோர் சண்டையிடுவது சரியா?

செல்வ களஞ்சியமே – 77 ரஞ்சனி நாராயணன் மூன்று வயது, 6 வயது குழந்தைகள் பள்ளியில் வன்முறைக்கு ஆளாகின்றார்கள் என்று கேள்விப்படும் போது பெற்றோர்களின் மனக்கவலைக்கு அளவேது? வீட்டிற்கு அடுத்தபடியாக பாதுகாப்பான இடம் என்றால் பள்ளிக்கூடம் தான் என்றிருந்த நிலை இன்று மாறி, அங்கும் வன்முறையாளர்கள் பரவி இருக்கும் நிலையில் நம் குழந்தைகளுக்கு குழந்தைப்பருவம் என்னும் பரிசினைக் கொடுக்க முடியமா? இந்த உலகத்தை திருத்துவது என்பது நம்மால் இயலாத காரியம். நம்மால் செய்ய முடிந்ததை, நம் எல்லைக்குள்… Read More ›

அமலாக்கத் துறை வழக்கு : ராசா ஆஜர்; ஆஜராகாத கனிமொழிக்கு நீதிபதிகள் எச்சரிக்கை

கலைஞர் தொலைக்காட்சிக்கு சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடந்தது தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டு அடிப்படையில் இன்று விசாரணை துவங்கியது. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது, முன்னாள் மத்திய அமைச்சர் அ. ராசா மற்றும் அமிர்தம் ஆகியோர் நேரில் ஆஜராகினர். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கனிமொழி உள்ளிட்ட சிலர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அடுத்த வழக்கு விசாரணைக்கு கனிமொழி உள்ளிட்டோர் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும்… Read More ›

கொடியவர்களிடமிருந்து குழந்தைகளை எப்படிப் பாதுகாப்பது?

செல்வக் களஞ்சியமே – 76 ரஞ்சனி நாராயணன் ‘நாங்கள் தாயின் கருப்பையிலும் பாதுகாப்பாக இல்லை; வெளியிலும் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை’ சமீபத்தில் பெங்களூரில் ஒரு ஆறு வயது சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமைக்குப் பிறகு பொங்கி எழுந்த கல்லூரி மாணவிகளின் கூட்டத்தில் ஒரு மாணவி கையில் பிடித்திருந்த அட்டையில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் இவை. படிக்கும்போதே மனது பதறுகிறது. நம் குழந்தைகளுக்கு நாம் வாழும் சூழ்நிலை பாதுகாப்பானதாக இல்லை என்கிற விஷயம் நம்மை தலை குனிய வைக்கிறது, இல்லையா?… Read More ›

ஜெயமோகனின் வெண்முரசு: இளையராஜாவின் புகழாரமும் ஞாநியின் விமர்சனமும்

மகாபாரத்தை நாவல் வடிவில் எழுதுவதன் மூலம், திரைத் துறையில் நானும், கமல்ஹாசனும் செய்ய முடியாததை எழுத்துத் துறையில் ஜெயமோகன் சாதித்துக் காட்டி உள்ளார் என்று இசையமைப்பாளர் இளையராஜா புகழாரம் சூட்டியுள்ள நிலையில் விமர்சகர் ஞாநி நாவல் குறித்து முரண்பட்ட கருத்தை வெளியிட்டிருக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் “வெண்முரசு’ எனும் பெயரில் மகாபாரதத்தை நாவல் வடிவில் எழுதி வருகிறார். மொத்தம் 30 ஆயிரம் பக்கங்களில், 30 நாவல்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய நாவல் வரிசையாக “வெண்முரசு’ எதிர்காலத்தில் விளங்க வேண்டும்… Read More ›

2ஜி முறைகேடான உரிமங்களை மன்மோகன் சிங் ரத்து செய்திருக்க வேண்டும்: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் எழுதியுள்ள “இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்திய தேர்தல்: 2014′ என்ற நூல் வெளியீட்டு விழா டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ப.சிதம்பரம், பத்திரிகையாளர் கரண் தாப்பர் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் ப. சிதம்பரம் பேசியது ‘2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் உரிமம் வழங்கும் விவகாரத்தை வேறு விதமாக கையாண்டிருக்க முடியும். அதில், முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தவுடன், அலைக்கற்றை உரிமங்களையும் ரத்து செய்யுமாறு… Read More ›

குழந்தைகளை தெரிந்துகொள்ள நேரம் ஒதுக்குங்கள்!

செல்வ களஞ்சியமே – 75 ரஞ்சனி நாராயணன் ஒரே சமயத்தில் ஒரு டஜன் விளக்குகளை எரிய வைக்கும் சக்தி கொண்ட  மூளையை உடைய குழந்தையை எப்படி சமாளிப்பது? குழந்தையுடன் பேசுங்கள் நீங்கள் உங்கள் அலுவலகத்தில் மிகப்பெரிய  பதவியில் இருக்கலாம்; உங்கள் ஆணைக்கு பலர் காத்திருக்கலாம்; பலர் நிறைவேற்றலாம். ஆனால் உங்கள் குழந்தையின் முன்பு நீங்கள் ஒரு அம்மா அல்லது அப்பா. இதை முதலில் நினைவு வைத்துக்கொள்ளுங்கள். குழந்தையிடம் பேசுவதற்கு முன் உங்கள் அலுவலக முகமூடியை கழற்றி வைத்து… Read More ›

’எளிய மனிதர்களின் வாழ்க்கை எனக்கு மதிப்புக்குரியதாக இருக்கிறது’:ராமலக்ஷ்மி நேர்காணல்

இந்த மாத புத்தகமாக புகைப்படக் கலைஞரும் எழுத்தாளருமான  ராமலக்ஷ்மி எழுதிய இலைகள் பழுக்காத உலகம் கவிதைத் தொகுப்பை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இணையத்தில் வலைத்தள பதிவராக நன்கு அறியப்பட்டவர் ராமலக்ஷ்மி. வீட்டுப் பொறுப்புகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் பெண்கள் ராமலக்ஷ்மியை மிகச் சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.  தன்னுடைய இளவயது புகைப்பட ஆர்வத்தை அப்படியே புதைத்துக் கொள்ளாமல் தன்னுடைய மத்திம வயதில் கைகளில் கேமராவுடன் களமிறங்கிய பெண்..! இன்று அறியப்பட்ட பெண் புகைப்படக் கலைஞராக வளர்ந்திருக்கிறார். அதுபோலவே இவருடைய எழுத்துப் பயணமும் குறிப்பிடத் தகுந்தது. எழுத்தாளர்… Read More ›

ஜி.கே.வாசன் புதுக்கட்சி அறிவிப்பு: அப்பாவின் வழி கைக் கொடுக்குமா?

நீண்ட நாட்களாக சத்யமூர்த்தி பவனை சுற்றிக் கொண்டிருந்த வதந்திக்கு இன்று முற்றுப்புள்ளி கிடைத்திருக்கிறது! காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கப் போவதாக ஜி.கே.வாசன் அறிவித்திருக்கிறார். புதிய கட்சி தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ள ஜி.கே. வாசன், கட்சியின் பெயர் மற்றும் கொடியை திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் அறிவிக்க உள்ளதாகக் கூறியிருக்கிறார். முன்பு தமிழ் மாநில காங்கிரஸில் இருந்த ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட தலைவர்களும் வாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 18 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் கட்சிக்கு தனது தந்தை… Read More ›

பகீர் குற்றச்சாட்டுகளுடன் விலகிய ஞானதேசிகன், அடுத்த நாளே பதவி பெற்ற இளங்கோவன்!

மாநிலத் தலைவர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் உரிய மதிப்பும், அதிகாரமும் அளிப்பதில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து பி.எஸ். ஞானதேசிகன் பகீர் குற்றம்சாட்டுகளுடன் விலகியிருக்கிறார். மக்களவை தேர்தலிலும் அதையடுத்து நடந்த மாநில தேர்தல்களிலும் பதவியை இழந்ததோடு படுதோல்வியை சந்தித்து வருகிறது காங்கிரஸ். காங்கிரஸ் மேலிடத்தின் நிலைமை குறித்து பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சித் தலைவர்கள் முனுமுனுப்புகளை முன்வைத்தபடி இருக்கின்றனர். இந்நிலையில் கோஷ்டி பூசல்களுக்கு பெயர்போன தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தனது ராஜினாமா மூலம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்… Read More ›

கனிமவள முறைகேடு விசாரணை: சகாயத்துக்குத் தேவையான வசதிகளை 4 நாள்களுக்குள் செய்து தர நீதிமன்றம் ஆணை

கனிமவள முறைகேடு தொடர்பாக விசாரித்து ஆய்வு செய்ய, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கோரும் அனைத்து வசதிகளையும் 4 நாள்களுக்குள் செய்து தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனிமவள முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நியமித்து பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தும் உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சமூக சேவகர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல… Read More ›

கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களின் முழு பட்டியல் இன்று வெளியாகிறது!

வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களின் முழு பட்டியலை இன்று தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையில் தவறு தெரிய வராமல், எல்லா விவரங்களையும் அளிப்பது நாடுகள் இடையே ரகசியத்தன்மையை பாதிக்கும் என்ற அரசின் கருத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. இதையடுத்து, வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் விவரம் இன்று வெளியாகும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கறுப்புப் பணம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தாக்கல் செய்த பொதுநல… Read More ›

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்!

பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் திங்கட்கிழமை இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90. உடல் நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டுவந்த அவர், சென்னை போரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார். சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவர் காலமானார். எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி செலுத்தியுள்ளது. இது தொடர்பாக, அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் முன்னோடி பெண் எழுத்தாளரும் முற்போக்குச் சிந்தனையாளருமான ராஜம் கிருஷ்ணன் காலமான செய்தியறிந்து மார்க்சிஸ்ட்… Read More ›

கத்தி படத்துக்கு எதிர்ப்பு: சத்யம் தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

நாளை தீபாவளியன்று கத்தி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் கத்தி படத்திற்கான முன்பதிவு நேற்று இரவு தொடங்கியது. அப்போது சத்யம் திரையரங்கு பகுதிக்கு வந்த 30க்கும் மேற்பட்டோர், கத்தி படத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர். அங்குவைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழிந்தெறிந்துடன்,  மூன்று பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிவிட்டனர். தியேட்டரின் முன்பகுதியில் தீபிடித்தது. இதனை தியேட்டர் ஊழியர்கள் போராடி அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதுதொடர்பாக தந்தை பெரியார்… Read More ›

ஜெயலலிதா விடுதலை!

ஜாமினில் விடுவிப்பதற்கான உத்தரவு நகல் அளிக்கப்பட்டுள்ளத்தையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரகார சிறைச்சாலையில் இருந்து  அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யப்பட்டுள்ளார். பெங்களூரில் இருந்து விமானம் மூலம் இன்று மாலைக்குள் ஜெயலலிதா சென்னை வந்தடைகிறார். அவரை வரவேற்க முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சர்கள், மேயர்கள், கட்சி தொண்டர்கள் என சிறை வாசலில்  கூடியுள்ளனர். பெங்களூருவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து இறங்கியதும் ஜெயலலிதாவை வரவேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் வந்து குவிந்துள்ளனர். சென்னை… Read More ›

மேல்முறையீட்டில் எனக்கு நிச்சயம் வெற்றி கிட்டும்: ஜெயலலிதா நம்பிக்கை

தன் மீதான வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்தோ, நீதிபதி பற்றியோ யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று கட்சியினருக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், அண்ணா வழியில், எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நான், அந்த இருவரின் வழியில் பொதுவாழ்வில் ஈடுபட்டு வருகிறேன். எனது வழக்கு தொடர்பாக இன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் விவரம் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. என் மீதுள்ள பாசம், பற்று, அன்பின்… Read More ›

ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட 4 பேருக்கும் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும், சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு தண்டனையையையும் நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்  தண்டனை விதிக்கப்பட்டதை நிறுத்தி வைக்கவும், ஜாமீன் வழங்கக் கோரியும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உட்பட… Read More ›

ஆந்திரத்தைப் புரட்டிபோட்ட ஹுட்ஹுட் புயல்: ஒரு தொகுப்பு

வங்கக் கடலில் உருவான ஹுட்ஹுட் புயல் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஆந்திரத்தின் விசாகப்பட்டினம், ஒடிஸாவின் கோபால்பூர் இடையே கரையைக் கடந்தது. இந்த புயலால் ஆந்திரம், ஒடிஸா மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.  ஆந்திரத்தில் புயல் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. ஒடிஸாவில் 3 பேர் புயலுக்கு உயிரிழந்தனர். புயல் காரணமாக, ஆந்திரத்தின் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், விஜயநகரம் ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகள் பலத்த சேதமடைந்தன. குடிநீர்… Read More ›

காங்கிரஸ் – பாஜகவுக்கு மீண்டும் ஒரு சோதனை!

மகாராஷ்ட்ராவிலும், ஹரியானாவிலும்  சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவையும், பாரதிய ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பையும் தந்த மாநிலங்கள் இவை. உள்ளூர் அரசியலையும் தாண்டி, நரேந்திர மோடியின் ஆட்சி மீதான மக்களின் மன நிலையை உணர்த்தும் தேர்தலாகவும் இது கருதப்படுவதால் மிகுந்த முக்கியத்தும் பெற்றுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற… Read More ›

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு குறைந்தபட்ச தண்டனைகள்கூட இங்கே வழங்கப்படுவதில்லை: கைலாஷ் சத்யார்த்தி

2014ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றதன் மூலம் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் நடக்கும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றி உலகின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார் சமூக செயல்பாட்டாளர் கைலாஷ் சத்யார்த்தி. 1980 லிருந்து குழந்தைகளுக்கான இயக்கத்தில் செயல்பட்டுவருகிறார். ‘குழந்தைகள் உரிமை தொடர்பான செயல்பாடுகளில் சிறுவயதில் இருந்தே ஆர்வம் எனக்கு. ஒருகட்டத்தில் இது ஒருவரால் மட்டுமே செய்யக்கூடிய பணியல்ல, என்பதை அறிந்து ஒத்த சிந்தனை உள்ளவர்களுடன் இணைந்து குழந்தைகளுக்கான பாதுகாப்பை வலியுறுத்தும் இந்த இயக்கத்தைத் தொடங்கினேன்…. Read More ›

சகாயம் குழு விசாரணைக்கு முட்டுக்கட்டை : ஊழலை மூடிமறைக்க தமிழக அரசு முயற்சி

சகாயம் குழு விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவது தாது, மணல் ஊழலை மூடிமறைக்க செய்யும் முயற்சியாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் கிரானைட், தாது மணல், ஆற்றுமணல் ஆகிய இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப் பட்டதால் அரசுக்கு ரூ.4.5 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக உத்தேச மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த கொள்ளைகள் குறித்து விசாரணை நடத்த முயன்ற அதிகாரிகள் அனைவரும்  உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்களே,… Read More ›

ஜெயலலிதா ஜாமின் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு!

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜாமின் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தனக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு தடை கோரியும், ஜாமின் அளிக்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா ஒரு பெண் என்றும், அவரது வயதையும் அவரது உடல் நலனையும் கருத்தில் கொண்டு அவருக்கு பிணை வழங்கப்பட வேண்டும் என்றும்… Read More ›

ஜெயலலிதாவை ஜாமினில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? பவானி சிங் விளக்கம்

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதா கடந்த மாதம் 29- ம் தேதி ஜாமின் மனு தாக்கல் செய்தார். அப்போது அவருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்று அரசு வழக்கறிஞர் பவானி சிங் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருந்தார். ஆனால் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, ஜெயலலிதா தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, தண்டனை நிறுத்தி வைக்க வலியுறுத்தவில்லை என்றும் ஜாமின் வழங்கினால்… Read More ›

ஜெயலலிதாவுக்கு ஜாமின் மறுப்பு!

ஜெயலலிதாவுக்கான ஜாமின் மனுவை பெங்களூரு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்குவதற்கு எந்த வித முகாந்திரமும் இல்லை என்று நீதிபதி சந்திர சேகரன் தெரிவித்தார். ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட, தண்டனையைத் தடை செய்யும் மனுவும், ஜாமின் கேட்பு மனுவும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி சந்திரசேகரன் தனது தீர்ப்பில் கூறினார். முன்னதாக, ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டதாக நீதிமன்ற வளாகத்தில் இருந்து செய்தி வெளியானது. அதற்கு, மதியம் 2.30க்குப் பின்னர் நடைபெற்ற வாதத் தொடர்ச்சியின்போது, அரசுத் தரப்பில் இருந்து… Read More ›

ஜெ ஜாமீன் மனுவை முதல் மனுவாக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ஜாமீன் கேட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் மீது இன்று விசாரணை நடைபெற உள்ள நிலையில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, நீதிமன்றம் தொடங்கியவுடன் அவசரம் கருதி இந்த வழக்கை முதல் வழக்காக விசாரிக்க நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். இதற்கு மறுத்த நீதிபதி சந்திரசேகர் வரிசைப்படிதான் மனுவை விசாரிக்க முடியும் என்றார். ஜெ ஜாமீன் மனு 73வது மனுவாக… Read More ›

ஜெயலலிதா ஜாமின் மனு: கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. பகல் 12 மணியளவில் நீதிபதி சந்திரசேகர் முன், ஜாமின் மனு விசாரணைக்கு வருகிறது. அதனுடன் கீழ் நீதிமன்றத்தின் தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களும் விசாரிக்கப்பட உள்ளன. ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியும் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பவானி சிங்கும் ஆஜராகின்றனர்.

ஜெயலலிதாவுக்கு ஆதரவான போராட்டங்கள்: கருணாநிதி கடும் கண்டனம்

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் நடத்தி வரும் போராட்டங்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அ.தி.மு.க. வின் பொதுச் செயலாளர், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து தமிழகத்தில் அன்றாடம் ஒவ்வொரு பகுதியிலும் உண்ணாவிரதப் போராட்டம் என்றும், ஆர்ப்பாட்டம் என்றும், மனிதச் சங்கிலி என்றும் போட்டிப் போட்டுக் கொண்டு, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கக்… Read More ›

ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு: கருணாநிதி கருத்து

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கேள்வி – பதில் வடிவில் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:- கேள்வி: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக தாங்கள் எதுவுமே கூறவில்லையே? பதில்: இது நிச்சயம் மகத்தான தீர்ப்பு. நீதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. கே: முக்கியமான வழக்குகளை மாநிலம் விட்டு வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றிய சம்பவம் உண்டா?… Read More ›

நீதிக்கு தலைவணங்க வேண்டும் அதிமுகவுக்கு ராமதாஸ் கண்டனம்

நீதிக்கு தலைவணங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுகவினரின் முறையற்ற போராட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா காவிரி பிரச்னைக்காக போராட்டம் நடத்தியோ,  ஈழப்பிரச்னைக்காக போர்க்கொடி உயர்த்தியோ, மீனவர்கள் கைது மற்றும் மின்வெட்டு சிக்கலுக்காக குரல் கொடுத்தோ சிறைக்கு செல்லவில்லை. மாறாக, ஊழல்  செய்ததற்காகத் தான் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, அதுவும் காலம் கடந்து தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதி  தமிழகத்தைச் சேர்ந்தவர்… Read More ›

அரசு வழக்கறிஞர் பவானி சிங் கடும் எதிர்ப்பால் ஜெயலலிதா ஜாமீன் மனு மீண்டும் ஒத்துவைப்பு:

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா ஜாமீன் கேட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு. ஜெயலலிதாவை விடுவிக்க எதிப்பது ஏன என விளக்கி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ரத்னகலா ஜாமீன் மனு விசாரணை அக்டோபர் 7ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். தசரா விடுமுறை முடிந்து வழக்கான அமர்வு இந்த மனு… Read More ›

கர்நாடக கோயிலில் தலித் பெண்கள் அர்ச்சகர்களாக நியமனம்

கர்நாடக மாநிலத்தின் மங்களூருவிலுள்ள குத்ரோலி ஸ்ரீ கோகர்ண நாதேஸ்வரர் கோயிலில் கணவனை இழந்த தலித் பெண்கள் இருவர் அர்ச்சகர்களாக திங்கள்கிழமை நியமிக்கப்பட்டனர். நூறாண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் கோயிலில், கணவனை இழந்த எஸ்சி-எஸ்டி சமூகத்தைச் சேர்ந்த சந்திராவதியும், லட்சுமியும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை நுழைவு வாயிலில் வந்து வரவேற்ற கோயில் நிர்வாகத்தினர், பின்னர் கோயில் கருவறைக்குள் அழைத்துச் சென்றனர்.  பின்னர் இந்த 2 பெண்களும் பூஜைகள் நடத்தியதுடன், பிரசாதங்களும் வழங்கினர். முன்னதாக, இதேபோன்று கடந்த ஆண்டு கணவனை இழந்த… Read More ›

தமிழகத்தின் 24-ஆவது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்பு

தமிழக முதலமைச்சராக கண்ணீர் மல்க பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தமிழக ஆளுநர் ரோசையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பன்னீர்செல்வத்தை தொடர்ந்து 30 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். தமிழகத்தின் 24-வது முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பிறந்த ஓ.பன்னீர்செல்வம், பி.யூ.சி., வரை படித்துள்ளார். 1996 வரை பெரியகுளம் நகராட்சி தலைவர் பொறுப்பை வகித்தார். அதன்பிறகு, 2001-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அப்போது, டான்சி… Read More ›

’நகைகள் அணிந்துகொள்வது மட்டும் நாகரிகமாகிவிடாது!’

இன்றையப் பெண்கள், வெறும் அலங்காரத்தோடு திருப்தியடைந்து விடுகிறார்கள், அல்லது திருப்தி செய்யப்பட்டு விடுகிறார்கள். எனவே இவர்களுக்கு விடுதலை வேட்கை பிறப்பது அரிதாயிருக்கிறது. தங்களை நாகரிக நாரீமணிகள் என்று கருதிக் கொள்ளும் பெண்களெல்லாம்கூட நல்ல முறையில் ஆடை அலங்காரம் செய்துகொள்வதையும், நைசான நகைகள் போட்டுக்கொள்வதையும் சொகுசாகப் பவுடர் பூசிக் கொள்வதையும் தான் நாகரிகம் என்று கருதி வருகிறார்களே தவிர-ஆண்களுக்குச் சரிநிகர் சமானமாக வாழ்வதுதான் நாகரிகம் என்பதை உணர்ந்திருக்கவில்லை. கணவனின் அளவுக்கு மீறிய அன்பையும், ஏராளமான நகையிலும் புடவையிலும் ஆசையையும்,… Read More ›

ஐநாவில் ராஜபட்ச உரை: எதிர்ப்புத் தெரிவித்து செப்.25-இல் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்ற கருணாநிதி வேண்டுகோள்

இலங்கை அதிபர் ராஜபட்ச, ஐ.நா.வில் பேசும் செப்டம்பர் 25-ஆம் தேதியன்று, தமிழர்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் கருப்புக் கொடி ஏற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அதே தேதியில் கருப்புச் சட்டையோ, சட்டையில் கருப்புச் சின்னமோ தமிழர்கள் அணிய வேண்டும் என்றும் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: டெசோ கூட்டம் ஆகஸ்ட் 26-ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவினரையே… Read More ›

எழுத்தாளர்களுக்கு அரசியல் பார்வை இயல்பாக இருக்கவேண்டும்: ஆர். அபிலாஷ் நேர்காணல்

நாகர்கோவிலைச் சேர்ந்த ஆர். அபிலாஷ், ஆங்கில இலக்கியம் படித்தவர். நடக்க இயலாத மாற்றுத் திறனாளி பெண்ணைப் பற்றிய இவருடைய நாவலான ‘கால்கள்’ (உயிர்மை பதிப்பக வெளியீடு 2012) யுவபுரஸ்கார் விருதை இவருக்கு பெற்றுத் தந்திருக்கிறது. இன்றிரவு நிலவின் கீழ் என்ற ஹைக்கூ கவிதை தொகுப்பின் மூலம் தமிழ் இலக்கியத்துக்கு அறிமுகமான ஆர். அபிலாஷ்,  கட்டுரை, நாவல் என தன்னுடைய படைப்பு தளத்தை விரிவுபடுத்தியிருக்கிறார். குறிப்பாக பல்வேறு இதழ்களில் விளையாட்டுத் துறை தொடர்பான கட்டுரைகள் எழுதிவருகிறார். ’புரூஸ்லி… Read More ›

குழந்தை இறப்பு விபத்துகளை ஏற்படுத்துவோருக்கு 7 ஆண்டு சிறை : புதிய மோட்டார் வாகன மசோதா

குழந்தை இறப்புக்கு காரணமாகும் விபத்துகளை ஏற்படுத்துவோருக்கு ரூ.3 லட்சம் அபராதத்துடன், 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட “புதிய சாலை பாதுகாப்பு, போக்குவரத்து மசோதா-2014′ பல்வேறு தரப்பினரின் கருத்துகளை அறிந்து கொள்வதற்காக சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 5 லட்சம் சாலை விபத்துகள் நேரிடுகின்றன. இதில் 1.4 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். பலி எண்ணிக்கையை கட்டுப்படுத்தும்… Read More ›

டெல்லியில் ஆட்சியமைக்க குதிரை பேரத்தில் ஈடுபட்டது பா.ஜ.க: வீடியோ ஆதாரம் வெளியிட்டது ஆம் ஆத்மி

பா.ஜ.க.வுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுக்கலாம் என்று அம்மாநில ஆளுநர் நஜீப் ஜங் குடியரசு தலைவருக்கு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநரின் இம்முடிவுக்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும்   தங்கள் எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. விலைக்கு வாங்க குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஆம் ஆத்மி கட்சி கூறி வருகிறது. தற்போது பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபட்டதற்கான வீடியோ ஆதாரம் தங்களிடம் உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. இது தொடர்பான வீடியோவை நாளை உச்சநீதிமன்றத்தில் வழங்கப்போவதாகவும்… Read More ›

குழந்தை திருமணம் பாலியல் பலாத்காரத்தை விட மிகவும் மோசமானது: டெல்லி நீதிமன்றம்

குழந்தை திருமணம் பாலியல் பலாத்காரத்தை விட மிகவும் மோசமான செயல். இச்செயலை சமூதாயத்தில் இருந்து முற்றிலும் அகற்ற வேண்டும் என டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குழந்தை திருமணத்துக்கு எதிராக ஒரு பெற்றோர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் ஷிவானி சவுகான் இவ்வாறு தெரிவித்தார். இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில், வளர்ச்சியடைந்ததாக சொல்லப்படும் மாநிலங்களில் கூட குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன.

திருட்டு வழக்கில் கைதான பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய காவல்துறையினர்

உடுமலைப்பேட்டையில் காவல்துறையினர் திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற பெண் கைதியை காவல்துறையினர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய சம்பவ, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடுமலைப்பேட்டையில் திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட சந்திரா என்ற பெண் காவல்துறையினரால் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சந்திராவின் மகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமசுப்பிரமணியன், பாதிக்கப்பட்ட பெண்ணை இன்று நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சந்திரா இன்று பிற்பகல்… Read More ›

கௌதம சித்தார்த்தன் சிறுகதை : தரிசனம்

தரிசனம் கௌதம சித்தார்த்தன் அவன் எனது பிஷப்பை வெட்டி ராஜாவுக்கு செக் வைத்தபோது கதவு தட்டப்பட்டது. எனது கணவராகத்தானிருக்கும். ஆட்டத்தின் சுவாரஸ்யம் சடுதியில் கலைய, நான் அவனைப் பார்த்தேன். அவன் சட்டென எழுந்துபோய் மறைந்து கொண்டான். சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்து போய் கதவைத் திறந்தேன். அவர் பதற்றத்துடன் உள்ளே நுழைந்து நாலாபுறமும் கண்களைச் சுழலவிட்டார். சமீப காலமாக என் கணவருடைய கண்களின் இடுக்கில் குரூரம் மின்ன ஆரம்பித்திருக்கிறது. நெற்றிச் சுருக்கங்களிலும், முகத்திலும் சந்தேக… Read More ›

சினிமா பின்னணி இல்லாமல் முன்னேறி இருக்கிறேன்: ப்ரியா ஆனந்த்

நடிகைகள் சினிமாவில் நடிப்பது, நீடிப்பது எல்லாம் தங்களுடைய பின்னணியைச் சார்ந்தே இருக்கிறது. ஆனால் ப்ரியா ஆனந்த் தன் சினிமா வாழ்க்கையை புரபஷனலாக வைத்திருக்கிறார். 30 வயதுகளில் இருக்கும் ப்ரியா,  கவுதம், அதர்வா, விக்ரம் பிரபு, சிவகார்த்திகேயன் என இளம் நாயகர்களுடன் நடிப்பது கோடம்பாக்கம் அதிசயம். அதேபோல ப்ரியாவின் கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் பெற்றவையாக இருக்கின்றன. சமீபத்தில் வெளியான இரும்பு குதிரை பட சந்திப்பின்போது இதுகுறித்து பேசிய ப்ரியா ஆனந்த், ‘மாடலிங் மூலமாகத்தான் சினிமாவுக்கு வந்தேன். இதுவரை 15 படங்களில் நடித்திருக்கிறேன். அவற்றில் 12 படங்கள் நான்… Read More ›

செய்து பாருங்கள்: பயன்படாத மரக்கட்டையில் கீ ஹோல்டர்!

தேவையில்லாத அல்லது பயன்படாத மரக்கட்டைகள் எல்லோருடைய வீடுகளிலும் இருக்கும். இந்த மரக்கட்டைகள் வீட்டுக்குத் தேவையான பொருட்களாக மாற்றுவதன் மூலம் மறுபடியும் பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு இந்த மரக்கட்டை கீ ஹோல்டர். நீங்கள் வாங்க வேண்டியது கொக்கிகள் மட்டுமே. ஒரு திருகு கொக்கியின் விலை 4 ரூபாய்தான். பயன்படுத்தி மீதமிருக்கும் பெயிண்டை கட்டையில் பூசலாம். அல்லது சிறிய பெயிண்ட் டப்பி ரூ. 25க்குள் கிடைக்கும்.  அடுத்து மரக்கடையில் உள்ள சொரசொரப்பை நீக்க உப்புக் காகிதம் வேண்டும். எப்படி செய்வது? எந்த நீளத்துக்குத் தேவையோ அதற்கேற்ற… Read More ›

நடிகைகளை ஏமாற்றும் அரசியல்வாரிசுகள்: மீண்டும் ஒரு சம்பவம்!

அரசியல்வாதிகளின் வாரிசுகள் பணம் மற்றும் செல்வாக்கை காரணம் காட்சி பிரபலமாக உள்ள நடிகைகளை ஏமாற்றுவது வாடிக்கியாக உள்ளது. அந்த காலத்து மைனர்களைப் போல இந்தக் காலத்தில் அரசியல் வாரிசுகள் பெண்களை ஏமாற்றுவதை அந்தஸ்துக்குரிய விஷயமாக  பார்க்கிறார்கள். அதை பெருமையாக நினைக்கிறார்கள். சமீபத்திய உதாரணம்… ரயில்வே அமைச்சரின் மகன் சதானந்தாவின் மகன் கார்த்திக். திருமணம் செய்து ஏமாற்றியதாக சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் மீது கன்னட நடிகை மைத்ரி குற்றம்சாட்டியுள்ளார். மங்களூரைச் சேர்ந்த மைத்ரி கவுடா, கடந்த ஆண்டு… Read More ›

அமெரிக்க ஊடகவியலாளர் ஜேம்ஸ் ஃபோலே கொலையில் பல மர்மங்கள்!

த.கலையரசன் ஒரு ISIS ஜிகாதிப் போராளி, ஜேம்ஸ் ஃபோலே இன் தலையை வெட்டிக் கொன்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தக் காட்சிகளை படமாக்கிய ISIS, வழமை போல அந்த வீடியோவையும் யூடியூப்பில் போட்டதாக கூறப்படுகின்றது. ஆனால், அதைப் பார்த்தவர்கள் மிக மிகக் குறைவு. கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான யூ ட்யூப், அந்த வீடியோவை உடனே அழித்து விட்டது. இன்னொரு விசித்திரமான சம்பவம் நடந்தது. ட்விட்டர் நிறுவனம், அந்த வீடியோவை அல்லது தலை வெட்டும் காட்சிகளை பகிர்ந்து கொள்வோரின் டிவிட்டர்… Read More ›

சங்கர ராமன் கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பே இறுதியானது: தலைமை வழக்கறிஞர் கருத்து

சங்கர ராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்டோரை விடுவித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்வது பயனற்றது என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு இதுதொடர்பான கடிதத்தை அனுப்பியுள்ள தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி குறிப்பிட்டுள்ளார். காஞ்சி சங்கர ராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட 24 பேரையும் கடந்த ஆண்டு புதுச்சேரி நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய புதுச்சேரியின் துணை நிலை… Read More ›

மத்திய அரசின் தொடர் நிர்பந்தம்: மகாராஷ்டிர ஆளுநர் பதவி விலகினார்!

மகாராஷ்ட்டிர மாநில ஆளுநராக பொறுப்பு வகித்து வந்த கே.சங்கரநாராயணனை மிசோரம் மாநிலத்திற்கு மாற்றி குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்றிரவு உத்தரவிட்டார். இது பற்றி சங்கரநாராயணன், ‘உத்தரவை திரும்பபெறாவிட்டால் நான் பதவி விலகுவேன்’ என்று அறிவித்திருந்தார். மத்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் சங்கரநாராயணன் ராஜினாமா செய்துள்ளார். பாஜக தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றதிலிருந்து காங்கிரஸ் அரசு நியமித்த ஆளுநர்களை பதவி நீக்குவதில் முனைப்போடு செயல்படுவது குறிப்பிடத்தகுந்தது.

எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்திக்கு அஞ்சலி

உலக புகழ்பெற்ற இந்திய எழுத்தாளரும் ஞானபீட விருது பெற்ற அரசிய‌ல் விமர்சகருமான‌ யூ.ஆர்.அனந்தமூர்த்தி (81) வெள்ளிக்கிழமை மாலை பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.அவரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, முன்னாள் பிரதமர் தேவ கவுடா, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவ‌ர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் தீர்த்தஹள்ளி அருகேயுள்ள மெலிகே கிராமத்தில் 1932 டிசம்பர் 1-ம் தேதி பிறந்த உடுப்பி ராஜகோபாலச்சார்ய அனந்த் மூர்த்தி, இந்துமத… Read More ›

புதிய தலைமுறை விருதுகளை புறக்கணிக்க மக்கள் கலை இலக்கியக் கழகம் வேண்டுகோள்!

தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் பற்றுக் கொண்ட அறிஞர்கள் புதிய தலைமுறை வழங்கும் தமிழன் விருதினைப் புறக்கணிக்க வேண்டுமென்று மக்கள் கலை இலக்கியக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து ம.க.இ.க. மாநில இணைப் பொதுச்செயலாளர் காளியப்பன் விடுத்துள்ள அறிக்கையில், ‘எஸ்.ஆர்.எம் எனப்படும் திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தின் 2014-ம் ஆண்டிற்கான தமிழ்ப் பேராய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழறிஞர்கள், படைப்பாளிகள் 11 பேருக்கு ரூ.1,50,000 ரூபாய் முதல் ஐந்து லட்ச ரூபாய் வரை பணமுடிப்புடன் வழங்கப்படும் விருது… Read More ›

சி.ஆர்.பி.எஃப். வீரர்களே வன்முறைக்கு காரணம்: அஸ்ஸாம் முதல்வர் பகிரங்க குற்றச்சாட்டு

கடந்த வாரம் நாகாலாந்தைச் சேர்ந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அசாமைச் சேர்ந்த 9 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகலாந்து எல்லையையொட்டியுள்ள அசாமின் கோலாகட் பகுதியில் 2வது நாளாக பொதுமக்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது, ரங்கோஜன் பகுதியில் காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்த பொதுமக்கள், காவல்துறையினருக்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறை போராட்டக்காரர்களை அடக்க கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைக்க முயற்சித்தது. போராட்டம் தொடரவே பொதுமக்கள்… Read More ›

காவல்துறை பிடியிலிருந்து இரோம் சர்மிளா விடுதலை!

வட கிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து கடந்த 14 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வரும், மனித உரிமை ஆர்வலர் இரோம் ஷர்மிளாவை விடுதலை செய்யுமாறு மணிப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இம்பால் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.குணேஷ்வர் சர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது: ஷர்மிளா மீது தற்கொலைக்கு முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. அவர் மீது வேறு எந்த… Read More ›

இந்தியா ஏன் இவ்வளவு கோபம் கொள்கிறது?!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் இம்மாதம் 25ஆம் தேதி நடைபெறவிருந்த இரு நாடுகளின் வெளியுறவுத் துறைச் செயலர்கள் அளவிலான பேச்சுவார்த்தையை இந்தியா திங்கள்கிழமை ரத்து செய்தது. காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்த அதிரடி நடவடிக்கையை இந்தியா எடுத்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 160-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தைத்… Read More ›

நீதித் துறையில் அரசியல் தலையீடு கூடாது: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி

மத்திய சிறைகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமாகவும், மாவட்ட சிறைகளில் 72 சதவீதத்துக்கும் அதிகமாகவும் விசாரணைக் கைதிகள் இருக்கின்றனர். குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படாமல், வழக்கு விசாரணையின்போதே அதிக காலம் அவர்கள் சிறையில் இருப்பது முரண்பாடாக உள்ளது. நீதித் துறையின் செயல்பாடுகளில், அரசும், நாடாளுமன்றமும் தலையிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா வலியுறுத்தினார். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் தேர்வுக்குழு (கொலிஜியம்) முறைக்குப் பதிலாக நீதிபதிகள் நியமன ஆணையத்தை ஏற்படுத்துவது தொடர்பான… Read More ›

அரசியல் கட்சிகள் டிவி, பத்திரிகைகளை நடத்த அனுமதிக்கக் கூடாது: டிராய் வலியுறுத்தல்

கையூட்டுச் செய்திகள், பாரபட்சமான செய்திகளைத் தவிர்க்க வேண்டுமென்றால், அரசியல் கட்சிகள், மதச் சார்பு அமைப்புகள் மற்றும் மத்திய, மாநில அமைச்சகங்களால் ஊடக நிறுவனங்கள் நடத்தப்படுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வலியுறுத்தியுள்ளது. “ஊடக நிறுவனங்கள் உரிமம் தொடர்பான பிரச்னைகளை’ களைவது குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தில்லியில் டிராய் தலைவர் ராகுல் குல்லார் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொலைக்காட்சி, பத்திரிகை நிறுவனங்களை நடத்துவதற்கு அரசியல் கட்சிகள், மதச்சார்பு… Read More ›

நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா நிறைவேறுமா?

நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா மீது மக்களவையில் இன்று வாக்கெடுப்பு நடக்கிறது. தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா-2014 என்ற புதிய மசோதாவும், அதற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் சட்டத்திருத்த மசோதாவும் திங்கள் கிழமை தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார். இதையடுத்து, இந்த மசோதா மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது. நீதிபதிகள் நியமன மசோதாவிற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு… Read More ›

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 600 மத வன்முறைகள்: சோனியா காந்தி தாக்கு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, ஆட்சிக்கு வந்த பிறகு, நாட்டில் மத வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து விட்டன என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார். மக்களைவத் தேர்தலுக்குப் பிறகு, முதல் முறையாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு அவர் வந்தார். அங்கு நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு கூறினார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலங்களில் மிக அரிதாகவே சாதி, மத மோதல்கள் நடந்தன. ஆனால், புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய… Read More ›

மதுக் கோப்பைகளை கையில் ஏந்தும் பள்ளிச் சிறுவர்கள்… பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இன்று மதுக்கடை வரிசைகளில்!

சிறப்புக் கட்டுரை சம்பவம் 1:        இடம் – கோவை பேருந்து நிலையம். உடைகள் களைந்த நிலையில் நீண்ட நேரமாக மயங்கிக் கிடந்த ஒருவரை அங்கிருந்தவர்கள் அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் சேர்க்கின்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அதீத குடிப்பழக்கத்தால் அவர் மரணமடைந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு வயது 28. சம்பவம் 2:        இடம் – சென்னை கூவம் குடியிருப்பு. நள்ளிரவில் திடீரென்று ஒரு இளைஞர் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து கூவத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்…. Read More ›

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்கினார் ஜெயலலிதா

ஸ்காட்லாந்து கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசு பணத்தை வழங்கினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. பளுதூக்குதல் போட்டியில் 77 கிலோ உடல் எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதோடு, புதிய சாதனையும் புரிந்த சதீஷ்குமார் சிவலிங்கம், ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ஜோஷ்னா சின்னப்பா மற்றும் தீபிகா பல்லிகல் ஆகியோருக்கு தலா 50 லட்சம் ரூபாய்க்கான ஊக்கத் தொகையையும் மேசைப்பந்து ஆண்கள்… Read More ›

டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணை திறப்பு

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 8 கண் மதகு திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டபோது, ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர். முதல்கட்டமாக வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படும் என்றும், பாசனத்திற்காக வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதன் மூலம், காவிரி டெல்டா பகுதியில் உள்ள… Read More ›

உலக பேரழிவு நோய் எபோலா எப்படி பரவுகிறது?

1976ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான காங்கோவின் எபோலா நதிக்கரையோரம் மர்மமான நோய் மனிதர்களை தாக்கி பலிகொண்டது. அந்நோய்க்கு காரணமான வைரஸ் கிருமிக்கு எபோலா நதியின் பெயர் வைக்கப்பட்டது. ஆப்பிரிக்க காடுகளில் இருக்கும் பழந்திண்ணி வவ்வால்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவிய எபோலா நோய், இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் ‘எபோலா’ வைரஸ் உலகப் பேரழிவு நோயாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த நோய் பாதித்துள்ள லைபீரியா, கயானா, சியாரா உள்ளிட்ட மேற்கு… Read More ›

நீங்களே செய்யுங்கள்: ராஜஸ்தானி கீ ஹோல்டர் விடியோ செய்முறையுடன்

சிறு தொழில் வாய்ப்பு தரும் கைவினை வேலைப்பாடுகள் – 2 ராஜஸ்தானி கீ ஹோல்டர் கற்றுத் தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன்   வீட்டின் சாவிகள் தொலையும் பிரச்னை தீர்க்கும் கீ ஹோல்டரை நீங்களே செய்யப் போகிறீர்கள். அதிகமாக நுணுக்கங்களும் முதலீடு தேவைப்படாத ராஜஸ்தானி கீ ஹோல்டரை தயாரித்து நீங்கள் விற்கவும் செய்யலாம். மாதிரியை கற்றுக் கொள்ளுங்கள். இதிலே உங்கள் சொந்த புது முயற்சிகளைச் சேர்த்து வகை வகையான கீ ஹோல்டர்களை தயாரிக்கலாம். செய்முறை விளக்கத்துக்கு… Read More ›

திட்டக்குடியில் மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய கொடுமை: அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 8,9 ம் வகுப்பு படித்துவந்த 2 மாணவிகள் ஜூலை 11ம் தேதி காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களை பல இடங்களிலும் தேடினர். இந்நிலையில், இரு மாணவிகளும் வடலூரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வரும் சதீஷ்குமார் (வயது 28) என்பவரிடம் சிக்கி இருப்பதாகத் தெரியவந்ததையடுத்து போலீஸார் மாணவிகள் இருவரையும் மீட்டு, மகளிர் காப்பகத்தில் தங்க வைத்தனர். போலீஸார் மாணவிகளிடம் நடத்திய… Read More ›

சத்தமே இல்லாமல் சமையல் கேஸ் சிலிண்டர் மானியம் கட்: மோடி அரசின் அடுத்த வேட்டு!

சென்ற வாரம் சமையல் கேஸ் சிலிண்டர் உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. அதில் ‘நாட்டைக் கட்டமைக்க உதவுங்கள் என்ற பெயரில், விருப்பத்தின்பேரில் மானியத்தை கைவிடுங்கள் என்ற பிரசாரத்தை தொடங்கியிருக்கிறது இந்தியன் ஆயில் நிறுவனம். அதை ஏற்கும் வாடிக்கையாளர்களின் பெயரை வெளியிட்டு, உங்கள் நடவடிக்கையை பாராட்டுகிறோம் என்றும் உங்களது பங்களிப்பு மற்றவர்களையும் ஊக்குவிக்கும் என்றும் இணைய தளத்தில் இந்தியன் ஆயில் தெரிவித்து வருகிறது. இதுவரை 1,470 வாடிக்கையாளர்கள் சிலிண்டர் மீதான மானியம் வேண்டாம் என்று பதிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின்… Read More ›

காங்கிரஸை அச்சுறுத்தும் புத்தகங்கள்!

காங்கிரஸ் அரசின் முன்னாள் ஆலோசகர் சஞ்சய் பாரு மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் ஆகியோர் எழுதிய புத்தகங்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா மீது குற்றச்சாட்டுக்களை வைத்தன. இதனால் அரசியல் வட்டாரத்தில் பலத்த சர்ச்சைகள் எழுந்தன. தற்போது மன்மோகன் சிங்கின் மகள் தமன் சிங் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இந்தப் புத்தகம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,  என் தந்தை அரசியலுக்கு ஏற்றவர் அல்ல என்று ஒரு… Read More ›

இலங்கையை கண்டித்து தமிழ் திரைத்துறையினர் ஆர்ப்பாட்டம் : பிரத்யேக படங்கள்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் வகையில் இணையதளத்தில் செய்தி வெளியிட்ட இலங்கையை கண்டித்து தமிழ் திரைப்படத்துறையினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சரத்குமார், சிவக்குமார், விவேக், விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்றனர். விக்ரமன், ஆர்.கே. செல்வமணி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட இயக்குநர்களும், கே.ஆர், கலைப்புலி தாணு, எஸ்.ஏ.சந்திரசேகர், இப்ராஹிம் ராவுத்தர் உள்ளிட்ட தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டனர். மேலும்,திரைப்பட விநியோகஸ்தர்கள், தொழில் நுட்பக்கலைஞர்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழக முதலமைச்சரை கொச்சைப்படுத்திய இலங்கையை மத்திய… Read More ›

எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் குடியுரிமையை ரத்து செய்தது மத்திய அரசு

வங்கதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு 2004 முதல் வழங்கப்பட்டிருந்த குடியுரிமையை ரத்து செய்திருக்கிறது பாஜக தலைமையிலான இந்திய அரசு. இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் தஸ்லிமா, இதுகுறித்து தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து இதுகுறித்து பேசியபோது இந்தியாவில் தங்குவதற்கு 2 அல்லது 3 மாத விசா வழங்குவதாக உறுதியளித்ததாகவும் ஆனால் இதுவரை தனக்கு விசா கிடைக்கவில்லை எனவும் எழுதியிருக்கிறார். கொலை மிரட்டல் காரணமாக வங்கதேசத்திலிருந்து வெளியேறி அமெரிக்காவில் வசிக்கிறார்… Read More ›

மீனவர் பிரச்னை தொடர்பாக ஜெயலலிதா, மோடிக்கு எழுதும் கடிதங்கள் பற்றி சர்ச்சைக்குரிய தலைப்பில் கட்டுரை!

இலங்கை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சக இணையதளத்தில் ஷெனாலி வடுகே என்ற பத்திரிகையாளர் சர்ச்சைக்குரிய தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மீனவர் பிரச்னை தொடர்பாக மோடிக்கு ஜெயலலிதா எழுதும் காதல் கடிதங்கள் அர்த்தம் பொதிந்தவையா? என்பதே அந்தத் தலைப்பு. மீனவர்கள் வாழ்வாதார பிரச்னைக்கு தீர்வு காணும் வழியைத் தேடாமல் மோடி தலைமையிலான அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்காகவும் இலங்கை இந்தியாவுடனான நல்லுறவை கெடுப்பதற்காகவும் தொடர்ந்து கடிதம் எழுதிவருவதாக அந்தக் கட்டுரையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது…. Read More ›

ஜான் கெர்ரியின் மோடி புகழாரத்தின் பின்னணி!

ஒரு சொல் கேளீர் நந்தினி அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி நாளை இந்தியா வருகிறார். 3 நாள் பயணமாக இந்தியா வரும் அவர், இந்திய தலைவர்களுடன் இரு தரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலக பிரச்னைகள் குறித்து பேச உள்ளார். ஜான் கெர்ரியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடன் இணைந்து  பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் சந்திக்கும் போது பேச உள்ள விவகாரங்கள் குறித்து அலசுவார்கள் என்று தெரிகிறது…. Read More ›

நகராட்சி பள்ளியில் படித்த தமிழக வீரர் சதீஸ் சிவலிங்கம் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றார்!

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் 4 வது நாளில், 77 கிலோ எடைப்பிரிவு, பளுதூக்கும் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த சதீஸ் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதே எடைப்பிரிவில் இந்தியாவின் ரவி கட்லு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். 22 வயதான சதீஸ் சிவலிங்கம் 149 மற்றும் 179 ஆகிய எடைகளை தூக்கி முதலிடத்தைப் பிடித்தார். இவர் வேலூர் சத்துவாச்சாரியில் பின்புலம் எதுவும் இல்லாத எளிய குடும்பத்தில் பிறந்து நகராட்சிப் பள்ளியில்… Read More ›

ஆல் இந்தியா ரேடியோவில் தமிழில் செய்தி வாசிப்பு பணி!

புதுடெல்லியில் செயல்பட்டும் வரும் ஆல் இந்தியா ரேடியோ நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: செய்தி வாசிப்பு மற்றும் மொழிபெயர்ப்பு காலியிடங்கள்: 6 வயதுவரம்பு: 30.06.2014 தேதியின்படி 21 – 45க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 23,000 கல்வித் தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்ட பட்டப்படிப்புடன் தமிழ் மொழியில் தெளிவாக வாசிக்கும் குரல் வளம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் வீதம் தட்டச்சு செய்யும்… Read More ›

நெல் கொள்முதலுக்கு ஊக்கத் தொகை வழங்கினால் மானியம் கிடையாது: மத்திய அரசு அறிவிப்பு

நெல் கொள்முதலுக்கு மாநில அரசுகள் நீண்ட காலமாக வழங்கி வரும் ஊக்கத் தொகையை இனிமேல் வழங்கக் கூடாதென்றும், அப்படி ஊக்கத் தொகை வழங்கி கொள்முதல் செய்தால் மானியம் வழங்கப்பட மாட்டாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. நெல், கோதுமை போன்ற உணவு தானியங்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அறிவித்து வழங்கி வருகிறது. எனினும், தமிழகம் போன்ற சில மாநிலங்கள் மத்திய அரசு அறிவிக்கும் குறைந்த பட்ச ஆதரவு விலை விவசாயிகளை நிறைவு செய்யாது… Read More ›

தொடரும் விமான விபத்துகள் : அல்ஜீரிய விமானம் விழுந்து 116 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினோ ஃபாஸோவின் தலைநகர் ஓகடாகோவில் இருந்து அல்ஜீரிய விமானம் ஏஎச்5017 அல்ஜீயர்ஸ் நோக்கிச் சென்றது. இந்த விமானத்தில் 110 பயணிகள் 6 பணியாளர்கள் இருந்தனர். அது பர்கினோ ஃபாசோவில் இருந்து கிளம்பிய  50 நிமிடங்களில் அது ரேடாரின் கண்காணிப்பில் இருந்து  மறைந்து மாயமானது. இந்நிலையில் விமானம்  நைஜர் என்ற பகுதியில் விழுந்து விபத்துகுள்ளதாக சிசிடிவி செய்தி நிறுவனமும் அலிஜீரியா டிவியும் தெரிவித்துள்ளன. இதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தாகவும் கூறப்படுகிறது. இந்த விமானத்தில் பயணித்தவர்களில்… Read More ›

பேரறிவாளன் உள்ளிட்டோரின் மரண தண்டனைக் குறைப்பு அதிகாரங்கள்: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் தண்டனையைக் குறைத்து விடுதலை செய்வதற்கான அதிகாரம், மாநில அரசுகளுக்கு உள்ளதா என்று கேட்டு தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு நேற்று விசாரணையைத் தொடங்கியது. இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் விசாரணைக்காக 2 நாள் ஒதுக்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து மத்திய… Read More ›

கட்ஜுவின் நேர்மையற்ற கருத்து நீதியின் கழுத்தை நெரிக்கும்: கருணாநிதி அறிக்கை

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு வெளியிட்ட கருத்து குறித்து திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்… ‘நீதிபதி மார்கண்டேய கட்ஜு, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக, 2004ஆம் ஆண்டு நவம்பரில் பதவிக்கு வந்து, ஓராண்டு காலமே அந்தப் பதவியில் இருந்து, அதன் பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் சில காலம் இருந்து ஓய்வு பெற்றவர். உச்ச நீதிமன்ற நீதிபதி பொறுப் பிலேயிருந்து 2011 செப்டம்பரில் ஓய்வு பெற்ற பிறகு, இது நாள் வரை… Read More ›

மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போதிய ஆதாரங்கள் இருக்கிறது : அட்டர்னி ஜெனரல்

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போதிய ஆதாரங்கள் இருக்கிறது என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்து தெரிவித்துள்ளார். ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்திற்காக, தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது தயாநிதி மாறன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதிமாறன் உள்ளிட்டோர் மீது சிபிஐ, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்வது தொடர்பாக, சிபிஐ விசாரணை குழுவிற்கும்,… Read More ›

நீதிபதி லஹோதிக்கு 6 கேள்விகள்: சர்ச்சை முற்றுகிறது!

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முன்னர் ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கட்சியின் நிர்பந்தம் காரணமாக, குற்றச்சாட்டுக்கு ஆளான சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, புதிய பதிவை எழுதி சர்ச்சையை நீட்டித்திருக்கிறார். சர்ச்சைக்குரிய அந்தப் பதவி நீட்டிப்பை வழங்கத் துணைபோனவர்கள் என கட்ஜு குற்றம்சாட்டிய மூன்று நீதிபதிகளில் ஒருவரான,… Read More ›

முன்னாள் பிரதமரை மிரட்டினாரா திமுக எம்பி?! நீதிபதி கிளப்பிய புது சர்ச்சை

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது, ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நீதிபதி ஒருவரை பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக மன்மோகன் சிங்கை தமிழகத்தின் முக்கியக் கட்சி ஒன்று மிரட்டியதாக நீதிபதி மார்கண்டேய கட்ஜூ பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் மார்கண்டேய கட்ஜூ. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான மார்கண்டேய கட்ஜூ, தனது பதவி காலத்தில் பல்வேறு சிறப்பு மிக்க தீர்ப்புக்களை அளித்தவர். சென்னை உயர்… Read More ›

தொடரும் மணல் மாஃபியா கொலைகள்!

தமிழகத்தில் மணல் கடத்தலை தடுக்கும் அரசு அதிகாரிகள், காவலர்கள், மக்கள் அமைப்புகள், பொதுமக்கள் மீது மணல் மாஃபியா கும்பல் நடத்தும் கொலைவெறி தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. குறைந்தது மாதம் ஒரு கொலைவெறி தாக்குதல் சம்பவம் ஊடகங்களின் வெளிச்சத்துக்கு வருகிறது. ஆனால் அரசு நடவடிக்கை என்னவோ அறிக்கை அளவிலே முடங்கிப் போய்விடுகிறது. மாஃபியாக்கள் அரசியல்வாதிகளாகவோ, அரசியல்வாதிகளின் ஆசி பெற்றவர்களாகவோ இருப்பதுதான் இந்த பிரச்னை நீடிப்பதன் காரணம். தொடரும் இந்த மணல் மாஃபியாக்களின் வெறியாட்டத்தில் சமீபத்திய பலி,… Read More ›

6 வயது மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: குற்றவாளிகளை கைது செய்யாத அரசு

பெங்களூரு மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படிக்கும் 6 வயது மாணவியை, பள்ளி அலுவலர்கள் சிலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் பெங்களூருவின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகச் சென்றனர். பின்னர் ஹெச்.ஏ.எல். காவல் நிலையம் அருகே திரண்ட பெற்றோர், இச்சம்பவம் தொடர்பாக காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்…. Read More ›

உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம்: புதிய விடியோ ஆதாரம்

உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் தொடர்பாக ரஷ்யா ராணுவ அதிகாரி மற்றும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பேசிக் கொள்ளும் ஆடியோ பதிவை உக்ரைன் அரசு வெளியிட்டுள்ளது. விமான விபத்து குறித்து  கிளர்ச்சியாளர்கள் இருவரும் தொலைபேசியில் பேசிக் கொள்கின்றனர். அதில் கிளர்ச்சியாளர் ஒருவர், நாங்கள் தற்போது ஒரு விமானத்தை வீழ்த்தினோம். அதில் 200 பேர் பயணித்தனர் என்று கூறுகிறார். மேலும் இது நூறு சதவிகிதம் பயணிகள் விமானம் எனவும் எவ்வித ஆயுதங்களும் இதில் கிடைக்கவில்லை எனவும் கூறுகிறார்…. Read More ›

வாரணாசி வெற்றி: மோடிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட்டவரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான அஜய் ராய், வாரணாசி தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்துகொண்ட மோடியின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று அலாகாபாத் உயர்நீதிமன்றத்தி மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் அந்த மனுவில் மக்களவைத் தேர்தலின்போது, வாரணாசி தொகுதியில் மோடி தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது மனைவி யசோதா பென்னின் வருமானம், பான் கார்டு ஆகிய விவரங்களை பூர்த்தி செய்யவில்லை. இது உச்ச நீதிமன்ற வழிகாட்டு… Read More ›

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு: கர்நாடக விவசாயிகள் தீவிர போராட்டம்

கர்நாடகத்தில் கடந்த சில நாள்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது. இதனால் காவிரி நதிகளுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி அணைகள் வேகமாக நிரம்பிவருகின்றன. கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதற்கு கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மண்டியாவில் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று தெரிவித்தனர். கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பாத நிலையில், கால்வாய்கள் பழுதடைந்துள்ளதாக காரணம் காட்டி… Read More ›

பெருந்தன்மையாக நடந்துகொண்ட தலைவர் காமராஜர்: கருணாநிதி புகழாரம்

வெறுப்பை காட்டும் சூழல் ஏற்பட்டபோதும் பெருந்தன்மையாக நடந்துகொண்டவர் காமராஜர். அதனாலே அவர் பெருந்தலைவர் ஆனார் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. இன்று பெருந்தலைவர் காமராஜரின் 112-வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி திமுக தலைவர் விடுத்துள்ள செய்தியில், ‘‘இந்தியாவில் நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்டு, தலைவர்கள் எல்லாம் சிறையிலே வாடிய போது, சுதந்திர இந்தியாவில் ஜனநாயகம் வீழ்ச்சி யடைகிறது என்பதையும், தனது தேசிய சகாக்கள் சிறைவாசம் அனுபவிக்கிறார்கள் என்பதையும் தாங்கிக் கொள்ள முடியாத காமராசர் உடல் நலிவுற்றுப் படுத்த… Read More ›

குறைந்தபட்ச நேர்மையை கடைபிடியுங்கள் : ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

குறைந்தபட்ச பத்திரிகை அறத்தை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று கையூட்டுச் செய்திகள் விவகாரத்தில் ஊடகங்களை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் கடந்த 2009இல் நடைபெற்ற அந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அப்போது அவர் தனது தேர்தல் பிரசாரத்துக்கான சரியான செலவுக்கணக்கை சமர்ப்பிக்கத் தவறியதாகவும், மாநில செய்தித்தாள்களுக்கு அளித்த 25 விளம்பரங்களுக்கான செலவுக் கணக்கைக் குறிப்பிடவில்லை என்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதை விசாரித்த தேர்தல் ஆணையம் பிறப்பித்த… Read More ›

பட்ஜெட்டில் பெண்களுக்கான ஒதுக்கீடுகள்!

பட்ஜெட் 2014 -2015 பொது பட்ஜெட்டில் பெண்களுக்கென்று வருமான வரி உச்ச வரம்பு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை மத்திய அரசு செய்யவில்லை. நடுத்தர, ஏழை பெண்களோ, பணிபுரியும் பெண்களோ பயனடையும் வகையில் திட்டங்கள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மேம்போக்கான, நிதி ஒதுக்கீடு செய்து கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு சென்ற மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் நிர்பயா நிதி என்று 100 கோடி ஒதுக்கீடு… Read More ›

இளவரசன் நினைவு தினத்தையொட்டி கைதான 6 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது

தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் அருகேயுள்ள நத்தம் காலனியை சேர்ந்த கோபால் மகன் சங்கர் (35), சிவலிங்கம் மகன் அதியமான் (30), பாலிடெக்னிக் மாணவர் சி.சந்தோஷ் (19)இவர்கள் அனைவரும்… Read More ›

பணி விண்ணப்பப் படிவத்தில் மாதவிடாய் சுழற்சி பற்றி கேட்ட கனரா வங்கி

சமீபத்தில் கனரா வங்கி பணி நியமன விண்ணப்ப படிவத்தில் பெண்களின் மாதவிடாய் சுழற்சி காலம், கர்ப்பமாக இருக்கிறார்களா என்று உடல்நலன் … Read More ›

பட்ஜெட் : நடுத்தர தர வர்க்கத்தை திருப்திபடுத்தும் ஜரிகை வேலைகள்!

நடுத்தர தர வர்க்கத்தைச் சார்ந்து நிற்கும் வகையில் சில திருப்திபடுத்தும் ஜரிகை வேலைகள்தான் இந்த பட்ஜெட்டில் உள்ளன என்று கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் … Read More ›

பட்ஜெட் 2014: அந்நிய நேரடி முதலீட்டுக்கு சிவப்பு கம்பளம்!

தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் பெரிதாக எதிர்பார்க்க வேண்டாம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தன்னுடைய பட்ஜெட் உரையில் பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறை… Read More ›

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து… Read More ›

உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்யலாமா? கருணாநிதிக்கு ஜெயலலிதா பதிலடி

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக அறிக்கைவிட்டு உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்யலாமா என திமுக தலைவர் கருணாநிதிக்கு பதில் அறிக்கை விட்டிருக்கிறார்… Read More ›

இந்து முன்னணி பிரமுகர் கொலையில் ஊடகங்கள் சொன்ன கதைகள்!

ஒரு சொல் கேளீர் நந்தினி சண்முகசுந்தரம் விருதுநகர் மாவட்டம் சங்கரன்கோவிலில் இந்து முன்னணி நகரச் செயலாளர் ஜீவராஜ் என்பவர் நேற்று முந்தினம் கொலை செய்யப்பட்டார்… Read More ›

பெரிய நடிகர்களை வைத்து படமெடுக்கிற தயாரிப்பாளர் எச்சில் இலையில் சாப்பிடுபவர்போல! கேயார்

பெரிய நடிகர்களை ஜெயிக்கிறவர்களையே வைத்து தொடர்ந்து படமெடுப்பவர்கள் எச்சில் இலையில் சாப்பிடுகிறவர்கள் போன்றவர்கள் என்று படவிழாவில் “இங்கு தயாரிப்பாளர் சந்திரசேகர்… Read More ›

டீசல், பெட்ரோல்,வெங்காயம்,பீன்ஸ் எகிறும் விலைவாசி!

மத்திய அரசால் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட விலையேற்றங்களால் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஒவ்வொரு நாளும் கூடிக் கொண்டே செல்கிறது… Read More ›

மீனவர் பிரச்னை, விலைவாசி உயர்வு குறித்து பேச அனுமதி : சுமித்ரா மகாஜனிடம் வேண்டுகோள்

மக்களவையில் வரும் 8 ஆம் தேதி ரயில்வே பட்ஜெட்டையும், வரும் 10 தேதி , பொது பட்ஜெட்டையும் தாக்கல் செய்ய உள்ளது. இந்த கூட்டத்தொடரில் லோக் ஜனசக்தித் தலைவர் ராம்விலாஸ்… Read More ›

இராக்கிலிருந்து நர்ஸுகள் விடுவிக்கப்பட்ட பின்னணி…

இராக்கிலிருந்து  ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய செவிலியர்கள் 46 பேர், இந்திய அரசு ஏற்பாடு செய்திருந்த தனி விமானம் மூலம் கொச்சி வந்தனர்…

விண்ணப்பித்து 2 ஆண்டுகள் ஆகியும் அரசு கேபிளுக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கவில்லை: ஜெயலலிதா

விண்ணப்பித்து 2 ஆண்டுகள் ஆகியும் தமிழக அரசின் கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப்படவில்லை என்றும் உடனே அதை வழங்கவேண்டும்…

தமிழகத்தில் புதிய அணுஉலைகள்: அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் தகவல்

தமிழகத்தில் புதிய அணுஉலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் சேகர்பாசு தெரிவித்துள்ளார்.

பணிபுரியும் பெண்களுக்கு 300 ரூபாயில் ஹாஸ்டல்: ஜெ.திறந்து வைத்தார்

வெளியூரில் குறிப்பாக மாவட்டத் தலைமையிடங்கள் மற்றும் பெருநகரங்களில் தங்கி பணிக்குச் செல்லும் பெண்களுக்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான ஹாஸ்டல்கள் … Read More ›

60 பேரை பலி வாங்கிய சென்னை கட்டட விபத்து : 6 நாட்களாக தொடரும் மீட்புப்பணி

சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 11 அடுக்குக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி 6வது நாளாக தொடர்கிறது.

நெஸ் வாடியாவுக்கு நான் பண உதவி செய்தேன்! ப்ரீத்தி ஜிந்தா

‘நெஸ் வாடியாவிடம் பணம் பறிப்பதற்காக நான் புகார் செய்ததாகக் கூறப்படுவது சுத்தப்பொய். அவருக்குச்… Read More ›

சாஃப்ட் நடிகரின் கோர முகம்!

மார்க்ஸிய பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களை அனுப்புவேன் என்று வீர முழுக்கம் இட்டாரே அவரேதான்! நடிகராக 30 ஆண்டுகள் பொழுதுபோக்கிக்… Read More ›

கம்யூனிஸ்டுகள் கிறித்துவ தத்துவத்தை திருடிவிட்டார்கள்: போப் ஃபிரான்சிஸ்

ஏழைகளுடன் உங்கள் செல்வத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று பேசிவருகிறார் போப் ஃபிரான்சிஸ். ‘இதைச் சொல்லும்போது நீங்கள் பொதுவுடைமைவாதியா என்று கேட்கலாம். ஆமாம் இதைப்… Read More ›

புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் இலங்கை அகதி மரணம்: மருத்துவமனை மீது வழக்கு!

இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த சந்திரசேகரன் (எ) தீபன் (வயது 29) என்பவர் நெஞ்சு வலி காரணமாக ‘பிம்ஸ்’ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக காலை 6 மணிக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர். அப்போது அங்குப் பணியிலிருந்த மருத்துவர்… Read More ›

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.