சமையல், சாம்பார் செய்வது எப்படி?, சாம்பார் பொடி, வெந்தயக் கீரை சாம்பார்

இன்றைய ஸ்பெஷல் – வெந்தயக் கீரை சாம்பார்

காமாட்சி
காமாட்சி

இது அவரைக்காயும் வெந்தயக்கீரையையும் சேர்த்து செய்யும் சாம்பார். அறைத்து விட்டு செய்யலாம்.

வேண்டியவைகள்:
சுத்தம் செய்து நறுக்கிய வெந்தயக்கீரை – 3 கப்
காம்பு நீக்கி இரண்டாக நறுக்கிய அவரைக்காய் – 10
பச்சை மிளகாய் – 2
வறுத்தரைக்க
தனியா – 2 டீஸ்பூன்
மிளகாய் – 4
கடலைப் பருப்பு–1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – அரை கப்
தாளிக்க
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு, பெருங்காயம்
ருசிக்கு உப்பு
துவரம் பருப்பு – முக்கால் கப்
மஞ்சள் பொடி – துளி
புளி –1 எலுமிச்சைஅளவு
தக்காளிப் பழம் –  2

செய்முறை:
பருப்பைக் களைந்து மஞ்சள் சேர்த்து திட்டமான தண்ணீருடன் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். புளியை ஊற வைக்கவும். வறுக்கக் கொடுத்த சாமான்களை 1 ஸ்பூன் எண்ணெயில் சிவக்க வறுத்து, தேங்காயையும் சேர்த்துப் பிறட்டி இறக்கவும். ஆறிய பின் மிக்ஸியிலிட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும். புளியைக் கரைத்து 3 கப் அளவிற்கு அதிகமாகவே சாறு பிழிந்த கொள்ளவும்.
குழம்புப் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து ,, பச்சைமிளகாயுடன் அலம்பிய கீரையைப் போட்டு வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி புளி கரைசலைச் சேர்க்கவும். அவரைக்காய், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். காய் வெந்து, புளி வாசனை போன பிறகு அரைத்த விழுதைக் கரைத்துக் கொட்டி நன்றாக கொதித்தபின், வெந்த பருப்பை மசித்துச் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். கொத்தமல்லி கறிவேப்பிலை சேர்க்கவும். கொதிக்கும்போது அடிக்கடி கிளறி அடி பிடிக்காமல் செய்வது அவசியம்.

p1010385

கீரை அவரைக்காய் ருசி பொருத்தமாக இருக்கும். அவசியமானால், பருப்பை அதிகம் சேர்த்து வேகவைக்கவும்.

“இன்றைய ஸ்பெஷல் – வெந்தயக் கீரை சாம்பார்” இல் 8 கருத்துகள் உள்ளன

    1. காரஸாரமாக அரைத்துவிட்டுச் செய்யும்போது,கசப்பு அடிபட்டுப் போகும். கர்நாடகா ஸாம்பார்மாதிரி யாருக்கும் தெரியாமல் துளி வெல்லம் சேர்த்துவிட்டால்ப் போகிறது.நன்றி உங்களுக்கு.

  1. எந்த சாம்பார் செய்தாலும் நான் அதில் வெந்தயக்கீரை சேர்த்து செய்வேன் உடம்புக்கு நல்லது அதோடு கீரையும் உடம்புக்கு சேருமே என்று இதையும் ஒரு முறை செய்து பார்க்கிறேன் நன்றி

    1. டிஸம்பர் ஸீஸனில் வெந்தயக்கீரைகள் இளஇள
      என்று மிகவும் நன்றாக இருக்கும். நல்ல அவரைக்காய் ஸீஸனும் அப்போது. அதனால்தானோ என்னவோ காம்பினேஷன் இப்படி சாப்பிட்டு பழக்கம். அதுவே குறிப்பாகவும்
      எனக்கு மாறிவிட்டது. எந்தக் காயோடும் ஒத்துப் போகிறது. உருளைக் கிழங்கோடு இன்னும் பிரஸித்தம். நன்றி உங்களுக்கு. அன்புடன்

  2. வெந்தயக் கீரையை சப்பாத்தி மாவில் போட்டுக் கலந்து சப்பாத்தி செய்வேன். இந்த சாம்பார் செய்ததில்லை. செய்து பார்க்கிறேன்.

    புகைப்படம் வழக்கம்போல கலர்புல்!

    1. மேத்தி பரோட்டா விசேஷமானது.அதான் நீங்களும் செய்கிறீர்கள். காய்ந்த வெந்தயக்கீரை
      கஸூரி மேதி என்று கடைகளில் கிடைக்கும்.
      அதைச் சேர்த்துக்கூட எல்லாம் செய்யலாம்.
      கலர் புல் எழுதியதற்கு மிகவும் நன்றி. அன்புடன்

  3. அம்மா… வெந்தயக்கீரை சாம்பாரா… ம் நன்றாக இருக்கும்போல் உள்ளதே..

    ஆனால் அதற்கு முன் நான் இங்கே வெந்தயக்கீரை உண்டுபண்ணனும்…:).
    மகி சொன்ன மெதேர்ட்டில் வளர்த்து அப்புறம் இந்த சாம்பாரை செய்கிறேன்மா!

    பகிர்விற்கு மிக்க நன்றிமா!

    1. கஸூரிமேதி என்று கடைகளில் கிடைக்கும். அதில் ஒரு ஸ்பூன் போட்டுக்கூட செய்யலாம்.
      வட இந்திய டால்,ஸப்ஜி வகைகளில் இதைச்
      சேர்ப்பார்கள்.வாஸனையையும்,ருசியையும்
      கூட்டுமிது. முயற்சித்துப் பார்.நன்றி உனக்குதான். கஸூரி மேதி பற்றி நான் குறிப்பிட
      காரணம். அன்புடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.