சேமிப்பு- நிதி திட்டமிடல்
பாதுகாப்புக்குரிய முதலீடாக மக்களால் என்றும் நம்பிக்கைக்குரியவை வங்கிகள் வழங்கும் டெபாசிட் திட்டங்கள். வட்டி அதிகபட்சம்(300 நாட்களுக்கு மேல்) 9 சதவீதமே கிடைத்தாலும் இதில் சேமிப்பதை விரும்புகிறார்கள். இதில் சில வங்கிகள் ஒருசில சதவிகிதம் அதிக வட்டியைத் தருவதுண்டு.
மத்திய அரசின் கீழ் இயங்கும் வங்கியான யூகோ பேங்க் வைப்பு நிதிக்கு (டெபாசிட்) குறைந்தபட்சம் 200 நாட்களுக்கு 9.05 % வட்டியை அறிவித்திருக்கிறது. குறைந்தபட்ச தொகை ரூ.5000 அதிகபட்ச வரம்பு ரூ. 5 கோடி. குறுகிய காலத்துக்கு மட்டுமே இந்தச் சலுகையை வழங்குகிறது யூகோ வங்கி.