அறிவியல், இலக்கியம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தமிழ்மொழி, புத்தகம்

த மு எ க ச வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசை நீங்களும் வெல்லலாம்!

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக வழங்கப்படும் கீழ்க்கண்ட பரிசுகளுக்கான நூல்கள் /தகடுகள் வரவேற்கப்படுகின்றன. 2013இல் அச்சாகி வெளியான நூல்கள் ஒவ்வொரு பரிசுக்கும் இரண்டு பிரதிகள் அனுப்ப வேண்டும். குறும்பட ஆவணப்படங்களுக்கான பரிசுக்கும் 2013இல் வெளியான படங்களின் சிடி அல்லது டிவிடி இரு பிரதிகள் அனுப்ப வேண்டும். எழுத்தாளர்/இயக்குநர் மற்றும் பதிப்பாளர்/ படத் தயாரிப்பாளரின் முழு முகவரி தொலைபேசி எண்ணுடன் புத்தகங்களுடன்/தகடுகளுடன் எழுதி அனுப்பிட வேண்டுகிறோம்.

அனுப்ப வேண்டிய முகவரி:

பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
57-ஏ,மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டிடம்,
மதுரை-625001.
செல்- 9442462888.

வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 31-03-2014.

புத்தகம்/தகடுகளை திருப்பி அனுப்ப இயலாது. நடுவர் குழுக்களின் முடிவே இறுதியானது.

1.தோழர் கே.பி.பாலச்சந்தர் நினைவுப்பரிசு- சிறந்த நாவலுக்காக- ரூ.10000/-

2.புதுமைப்பித்தன் நினைவுப்பரிசு -சிறந்த சிறுகதை நூலுக்கு-ரூ 5000/-

3.குன்றக்குடி அடிகளார் நினைவுப்பரிசு-தமிழ் வளர்ச்சிக்கு உதவும் நூல்-ரூ.5000/-

4.அமரர் சேதுராமன் -அகிலா நினைவுப்பரிசு-சிறந்த குழந்தை இலக்கிய நூலுக்கு ரூ 5000/-

5.தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனார் நினைவுப்பரிசு-சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு-ரூ 5000/-

6.அமரர் செல்வன் கார்க்கி நினைவுப்பரிசு- சிறந்த கவிதை நூலுக்கு-ரூ5000/-

7. தோழர் பா.இராமச்சந்திரன் நினைவு விருது – சிறந்த ஒரு குறும்படம் மற்றும் சிறந்த ஒரு ஆவணப்படத்துக்கு-தலா ரூ 5000/-

8.அமரர் சு.சமுத்திரம் நினைவுப்பரிசு -ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய படைப்பு ஒன்றுக்கு(கதை,கவிதை,நாவல்,ஆய்வு,கட்டுரை எதுவாகவும் இருக்கலாம்)- ரூ. 10000/-

9.தோழர் மு.சி.கருப்பையா பாரதி –ஆனந்த சரஸ்வதி சார்பாக நாட்டுப்புறக்கலைச்சுடர் பட்டமும் ரூ.10000 விருதும்-ஒரு மூத்த நாட்டுப்புறக்கலைஞருக்கு –பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

10. புதுச்சேரி தோழர் நாகசுந்தரம் நினைவுப்பரிசு-கலை இலக்கிய ஆய்வு நூலுக்கு-ரூ.10,000

11.தோழர்.கே.முத்தையா நினைவுப் பரிசு –ரூ.20,000-தொன்மைசார் ஆய்வுகளுக்கு ( தொல்லியல், கல்வெட்டியல், மானுடவியல்,நாட்டுப்புறவியல் )

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.