நிதி ஆலோசனை
தங்கத்தின் மேல் நமக்கு இருக்கும் ப்ரியம் அலாதியானது. நமக்குத் தெரிந்து தங்கத்தை வாங்குவதுதான் ஒரே முதலீடு. ஆனால் இப்படி சேமிப்பு அனைத்தையும் தங்கத்திலேயே முதலீடு செய்வது ஆபத்தானது என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். ஒருவர் தன் எதிர்கால சேமிப்புக்கென வைத்திருக்கும் 100 ரூபாயில் ரூ. 20ஐ மட்டும் தங்கத்தில் முதலீடு செய்தால் போதும் என்பது நிதி ஆலோசகர்களின் பரிந்துரை. மீதியை வங்கி டெபாசிட்களிலும் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் சம பங்காகப் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். அப்படி செய்யும்போது ஒன்றில் திடீரென வீழ்ச்சி ஏற்பட்டால்கூட மற்றவை கைகொடுத்து காப்பாற்றும். சமமாக பிரித்து முதலீடு செய்யப்படுவதால் ஒன்றில் ஏற்படும் வீழ்ச்சி அதிக அளவில் நம்முடைய சேமிப்பில் பாதிப்பை ஏற்படுத்தாது.