இயற்கை, கோடை பராமரிப்பு, தொட்டிச் செடி வளர்ப்பு, தொட்டிச் செடிகள், வீட்டுத் தோட்டம்

கோடையில் மாடித்தோட்ட பராமரிப்பு!

கோடைபருவ பராமரிப்பு

தமிழகம் எங்கும் இன்று நூறு டிகிரி பாரன்ஹீட்டைத் தொட்ட வெயிலிருந்து நாம் மட்டுமல்ல நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்களும் தப்பிப்பது கடினம். முக்கியமாக வீட்டுத்தோட்டத்தில் உள்ள செடிகள், செடிகளை நம்பியிருக்கும் காக்கை, குருவிகளுக்கு நம்மால் இயன்ற தப்பிக்கும் வழிமுறைகளை செய்து கொடுக்க வேண்டும். சில உபயோகமான குறிப்புகள் இதோ உங்களுக்காக…

DSCN2986
மாடித்தோட்டத்தில் கொடி வகை செடிகள்

 

 • வீட்டுத்தோட்டத்திற்கு நீர் ஊற்ற சரியான நேரம் காலையில் 8 மணிக்கு முன்பு,  மாலையில் 5 மணிக்கு மேல்.
 • ஒரு நாளைக்கு இருவேளையும் நிச்சயமாக செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
 • பணிக்குச் செல்பவராக இருந்தால் பிளாஸ்டிக் கவரிலோ, அல்லது பிளாஸ்டிக் புட்டியிலோ தண்ணீர் நிரப்பி லேசாக சொட்டும்படியாக தொட்டிச் செடிகளுக்குள் வைத்துவிட வேண்டும்.
  இதைச் செய்வதற்கு முன் காலை அல்லது மாலை ஏதோ ஒரு வேளை நிச்சயம் தொட்டிச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். இரண்டு வேளையும் தண்ணீர் விட முடியாதவர்களுக்கு இந்த ஏற்பாடு.
DSCN2987
கொடிகள் படர்ந்திருக்கும் தட்டை செடிகள்

 

 • சுட்டெரிக்கும் வெயில் பசுமையான செடிகளைக்கூட வாடச் செய்துவிடும். தண்ணீர் விடுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் சரியான அளவு மண்ணும் உரமும் இட்டு அவற்றை பாதுகாப்பதும் முக்கியம்.
 • சில செடிகள் வளர்ந்து வேர், தொட்டி முழுவதும் பரவி தொடர்ந்து வளர முடியாமல் சுணங்கிப் போயிருக்கும். இந்தச் செடிகளை சற்றே பெரிய தொட்டிகளுக்கு மாற்றி நல்ல மண்ணும் உரமும் இட்டு வளப்படுத்தலாம். உதாரணத்துக்கு மல்லிகை பூச் செடிகள், ரோஜா செடிகள், செம்பருத்தி செடிகள் போன்றவை. இவற்றை ஒரு முறை நட்டால் காலகாலத்துக்கும் பயன்தரக்கூடியவை.
 • நாம் என்னதான் இருவேளை தண்ணீர் ஊற்றினாலும் கத்திரி வெயிலை செடிகள் தாங்காது. இதற்கு மெல்லிய கொசு வலையில் செடிகளின் மேல் நிழல்போல பசுமைக்குடிலை அமைத்து கொடுக்கவும். இது அதிகம் செலவு பிடிக்காத வழிமுறை.
 • தோட்டச் செடிகளுக்கு அருகில், சின்ன சின்ன கிண்ணங்களில் நீரும் தானியங்களும் வைத்தால் காக்கை, குருவிகள் உணவுக்காக வெயிலில் அலைந்து திரியும் வேலை குறைந்து செடிகளிம் நிழலில் சற்று இளைப்பாரி செல்லும்.

DSCN2997

பால்கனி, கூரைகள், மாடிகளில் தொட்டிச் செடி குறித்து அறிந்துகொள்ள இந்த நூல் உதவும் : Container Gardening: Design Ideas for Rooftops, Balconies, Terraces, and More

“கோடையில் மாடித்தோட்ட பராமரிப்பு!” இல் 2 கருத்துகள் உள்ளன

 1. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  http://www.Nikandu.com
  நிகண்டு.காம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.