ஃபிக்ஸட் டெபாசிட், சேமிப்பது எப்படி?, சேமிப்பு, நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம்

வீட்டுக்கடன் பெற வங்கிகளை அணுகுவது எப்படி?

நிதி ஆலோசனை – வீட்டுக்கடன்

நிதி ஆலோசகர் காயத்ரி

DSCN1156

நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பலரும் வீட்டை தங்களது ஐம்பதாவது வயதில்தான் கட்டினார்கள். ஆனால், இன்றோ இருபது வயதிலேயே வீடு வாங்குவது சகஜமாகிவிட்டது. அன்று பணத்தைச் சேர் த்து வைத்து வீடு கட்டினார்கள். இன்று வீட்டை கடனில் வாங்கி விட்டு, கடைசிக் காலம் வரை இ.எம்.ஐ-ஆக திரும்பச் செலுத்துகிறார்கள்!
எதற்கெடுத்தாலும் ஈஸியாக கடன் கிடைப்பது நல்லதுதான். அப்படி கிடைக்கும்போது அதை நாம் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டாமா? தனிநபர் ஒருவர் வாங்கும் பெரிய கடன் என்றால், அது வீட்டுக் கடன்தான். ஆகவே, வீட்டுக் கடனை வாங்குவதில் மட்டும் ஒருவர் பெரிய தவறேதும் செய்யவில்லை எனில், மற்ற கடன்களை எல்லாம் ஊதித் தள்ளி விடலாம்.

  1. வீட்டுக் கடன் வாங்க ஒரு வங்கியை நீங்கள் அணுகும்போது, அந்த வங்கியின் மேலாளர் உங்கள் கடன் விண்ணப்பப் படிவத்தை எந்தக் கோணத்தில் பார்ப்பார் என்பதை முதலில் புரிந்து கொள்வோம். வங்கி மேலாளர் முதலில் உங்களின் மாத, ஆண்டு வருமானம், கடந்த இரண்டு, மூன்று வருடங்களில் உங்களின் வருமானம், வீட்டிற்கு எடுத்துவரும் சம்பளம் எவ்வளவு என்கிற விஷயங்களை அலசி ஆராய்வார். நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் எந்தத் தொழிலில் உள்ளது என்றும் பார்ப்பார்.
  2. சினிமா, அரசியல் துறைகளில் இருப்பவர்களுக்கு வருமானம் நிலையாக இருக்காது என்பதால் வீட்டுக்கடன் தர யோசிப்பார்கள். சுய தொழிலில் ஈடுபட்டு, வருமான வரித் தாக்கல் செய்யாமல் இருப்பவர்களுக்கும் கடன் கிடைப்பது கடினமே. வேறு ஏதும் லோன் வாங்கி அதற்காக இ.எம்.ஐ. கட்டி வருகிறீர்களா என்றும் பார்ப்பார்கள்.
  3. கடன் வாங்குபவரைப் பற்றிய அலசல்தான் ஆரம்பத்தில் பெரிதாக இருக்கும். இதற்காக உங்களிடமிருந்து பல டாக்குமென்டுகளைக் கேட்பார்கள். இதனால் நீங்கள் பொறுமை இழந்து, கோபம்கூட அடையலாம். நான் வீட் டை அடமானமாக வாங்கித்தானே கடன் தரப்போகிறீர்கள்? பிறகு ஏன் இத்தனை விசாரிப்பு? என்றுகூட நீங்கள் கேட்பீர்கள்.
    ஆனால், வங்கிகள் உங்கள் வீட்டை விற்று தங்கள் கடனை செட்டில் செய்துகொள்ள விரும்புவதே இல்லை. அதனால் அவர்களுக்கு நஷ்டம்தான். எனவேதான், கடன் தரும் முன்பே உங்களைப் பற்றி முழுவது மாக அலசி ஆராய்கிறார்கள்.
  4. வங்கி மேனேஜர் அடுத்து பார்க்கும் முக்கிய விஷயம், உங்கள் வயதைத்தான்! 55 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொதுவாக கடன் தரமாட்டார்கள் – அரசு பென்ஷன் வாங்குபவராக இருந்தால் தவிர!
  5. இதற்குப் பிறகு உங்களது சிபில் ஸ்கோரை நிச்சயம் பார்ப்பார்கள்! நீங்கள் கடந்த காலத்தில் வங்கிகளிடம் கடன் வாங்கி ஒழுங்காகச் செலுத்தாமல் இருந்திருந்தால், உங்களின் சிபில் ஸ்கோர் குறைவாக இருக்கும். அது போன்ற சமயத்தில் வங்கிகள் உங்களுக்கு வீட்டுக் கடன் தராது.
  6. மாதச்சம்பளத்தில் கழிவுகள்போக மீதி எவ்வளவு உங்களுக்கு கிடைக்கிறது என்று அலசுவார்கள். உதாரணமாக, உங்கள் மாதச் சம்பளம் ரூ.45,000 என்று வைத்துக் கொள் வோம். கழிவுபோக, உங்களுக்கு கையில் கிடைக்கும் தொகை ரூ.40,000 எனில், இன்றைய வட்டி நிலவரத்தில் 30, 40 வயதிற்குள் இருக்கும் நபருக்கு, முறையே 16-18 லட்சம் வீட்டுக் கடன் கிடைக்கும் (20-30 வருடங்கள் கடன் காலம் என்று எடுத்துக் கொள்ளும்பட்சத்தில்!). அதாவது, உங்கள் வயது மற்றும் கடன் காலத்தைப் பொறுத்து உங்களது வீட்டி ற்கு எடுத்துச் செல்லும் மாதச் சம்பளத்தைப்போல் 40 – 45 மடங்கு கடன் கிடைக்கும்.
  7. இன்னொரு கோணத்தில் பார்த்தால், நீங்கள் வீட்டிற்கு எடுத்து வரும் பணத்தில் அதிகபட்சமாக 40 சதவிகிதம் தொகையை இ.எம் .ஐ-ஆக கட்டுமளவிற்கு வங்கிகள் வீட்டுக் கடன் தரும். மீதி 60 சத விகித சம்பளம் உங்கள து அன்றாட வாழ்க்கைக்குத் தேவையாக இருக்கும். எனவே, கணவன் – மனைவி என இருவரும் சம்பாதிக்கும் போது அதிக கடன் கிடைக்க வாய்ப்புண்டு.

இதுபற்றி எல்லாம் இவ்வளவு விரிவாக எடுத்துச்சொல்லக் காரணம், வங்கிகளின் பொதுவான வரையறைக்கு உட்பட்டு நாம் கடன் வாங்கினால், நம் வாழ்க்கையில் பெரிய சிரமங்கள் ஏற்படாது. நமது திருப்பிச் செலுத்தும் திறனை மீறி கடன் வாங்கும் போதுதான், பெரும்பாலானோர் பிரச்னையில் மாட்டிக் கொள்கிறார்கள்.

அதுபற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.

 

“வீட்டுக்கடன் பெற வங்கிகளை அணுகுவது எப்படி?” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.