அரசியல், இன்றைய முதன்மை செய்திகள்

சென்னையில் 11 அடுக்கு கட்டடம் இடிந்து விபத்து: உயிரிழப்பு 18 ஆனது

CM's visit

சென்னை போரூர் அருகே உள்ள முகலிவாக்கத்தில் நேற்று முன் தினம் கட்டப்பட்ட நிலையில் இருந்த 11 அடுக்கு கட்டடம் இடிந்து தரை மட்டமானது. கட்டடம் இடிந்து இடுபாடுகளில் சிக்கிய கட்டட தொழிலாளர் 18 பேர் உயிரிழந்தனர். 22 பேர் மீட்கப்பட்டனர். இன்னும் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. கட்டட தொழிலாளர்களில் சிலர் சீமாந்திரா, ஒடிசா மாரிலத்தைச் சேர்ந்தவர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஜி.கே. வாசன், வைகோ, பொன். ராதாகிருஷ்ணன், சீமாந்திர முதல்வர் சந்திரபாபு உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ளனர்.
இந்த விபத்துக்கு காரணமானதாகக் கூறி, கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்கள் மனோகரன், முத்து, பொறியாளர்கள் சங்கர், துரைசிங்கம், கட்டட வடிவமைப்பாளர் விஜய் பஹோத்ரா மற்றும் மேற்பார்வையாளர் வெங்கடசுப்பிரமணியன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பிறகு, முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், ‘மீட்புப் பணிக்குத் தேவையான உதவிகளை வழங்கிட சென்னை மெட்ரோ ரயில், சென்னை மாநகராட்சி, பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறைப் பணியாளர்கள் தேவையான உபகரணங்களுடன் அனுப்பப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும், எனது உத்தரவின் பேரில், அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். தேவையான மருத்துவ அலுவலர்களும், உதவியாளர்களும் சம்பவ இடத்திலேயே தயார் நிலையில் உள்ளனர். தேவையான எண்ணிக்கையிலான  2 தீயணைப்பு வாகனங்கள், அவசர மீட்பு ஊர்திகள் ஆகியவை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இடிபாடுகளில் சிக்கி உயிருடன் இருப்பவர்களை கண்டறியும் மோப்ப நாய்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எனது உத்தரவின் பேரில் அனைத்துத் துறையினரும் துரித நடவடிக்கை எடுத்து மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டதன் காரணமாக இதுவரை இடிபாடுகளில் சிக்கியிருந்த 21 நபர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.