அரசியல், அரசியல் பேசுவோம், இன்றைய முதன்மை செய்திகள்

இராக்கிலிருந்து நர்ஸுகள் விடுவிக்கப்பட்ட பின்னணி…

iraq nurses

இராக்கிலிருந்து  ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய செவிலியர்கள் 46 பேர், இந்திய அரசு ஏற்பாடு செய்திருந்த தனி விமானம் மூலம் கொச்சி வந்தனர். அவர்களை வரவேற்க கேரள முதல்வர் உம்மன்சாண்டி உள்பட காங்கிரஸ், பாஜக தொண்டர்கள் பலர் கொச்சின் விமான நிலையத்தில் காத்திருந்தனர். விமான நிலையம் வந்தடைந்த செவிலியர்கள் கேரள முதல்வர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர். சில செவிலியர்கள் நெகிழ்ச்சியில் கேரள முதல்வரின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தனர்.

நேற்று முந்தினம் வரை இந்திய அரசு எங்களை கைவிட்டு விட்டது என இந்திய ஆங்கில ஊடகங்களுக்கு தொலைபேசி வாயிலாக பேட்டி அளித்த செவிலியர்களுக்கு தாங்கள் உயிருடன் திரும்பியது அவர்களுக்கே கூட நம்ப முடியாத ஒரு விஷயமாக இருக்கலாம். இந்நிலையில் 46 செவிலியர்கள் விடுவிக்கப்பட்டதன் பின்னணியில் எத்தகைய பேரங்கள் நடந்திருக்கும் என்பதே ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

பதவியேற்று 30 நாட்கள் ஆன பாஜக அரசுக்கும், கேரள காங்கிரஸ் முதல்வர் உம்மன்சாண்டிக்கும் மிகுந்த அரசியல் நெருக்கடி கொடுத்தது இராக்கில் பணியாற்றிய 46 செவிலியர்கள் தீவிரவாதிகள் பிடியில் மாட்டிக் கொண்ட விவகாரம். இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிராவாதிகள் பணம் பெற்றுக்கொண்டு இந்தியர்களை விடுவித்திருக்கூடும் என்றே பல அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

“இராக்கிலிருந்து நர்ஸுகள் விடுவிக்கப்பட்ட பின்னணி…” இல் 4 கருத்துகள் உள்ளன

 1. ருஷ்யா தவிர உலகம் பூராகவும் பணப் பரிமாற்றத்துடனே இப்படியான மனிதக் கடத்தல்கள்,பணயங்கள் நிவிர்த்தியாகும். எனினும் அவர்களைக் காப்பற்றியதற்கு நன்றி சொல்வோம். கிண்டிக் கிளிறி விசாரணை வேண்டாம்.
  நம் நாடுகள் எத்தனையோ கோடிகளை தேவையற்று செலவு செய்கிறது. இந்த 46 பெரிய பின் புலமற்ற பெண்களுக்கு செய்ததற்கு நன்றி பாராட்டுவோம்.

  முதல்வர் காலடியில் விழுந்தால் என்ன? பணயணக் கைதியாகத் தவித்தது அவர்கள், அதுவும் ஒரு கடும் இஸ்லாமியப் போக்குடைய தீவிரவாதிகளிடம்.
  அந்தத் துன்பத்தை அனுபவித்தவர்களுக்கே துன்பம் தெரியும்.
  ஏதோ அவர்கள் நல்லூழ் செய்துள்ளார்கள்.
  திரும்பி விட்டார்கள், மகிழ்வோம். மீண்டும் இப்படி அவலம் வராது நம் நாட்டு மக்களைக் காக்க வழி தேடுவோம்.

  1. அய்யா விடுதலையான செவிலியர்கள் பெட்டிகளை தயவு செய்து பாருங்கள் ////அந்த போராளிகள் அவர்களை மிக கண்ணியமாக நடத்தினர் என்றும் //அவர்கள் நோன்பு வைத்த பொழுதிலும் தங்களுக்கு உணவு கொடுத்தனர் என்றும் ….யாரும் தங்களுடன் தப்பான நோக்கில் பார்க்கவில்லை என்றும் சகோதரிகள் என்றே அழைத்தனர் என்று விரிவாக சொல்லியுள்ளனர் //////////////இன்னும் அவர்களை தீவிரவாதிகள் என்றும் கொடுங்கோலர்கள என்றும் உங்களால சொல்ல முடிகிறது ///
   நம்மூரில் காவல் நிலையத்திலேயே பெண்ணை கற்பழிக்கும் நிலை இருப்பது அய்யா அறியாமல் இருப்பது ஆச்சர்யமே ///

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.