சினிமா, விஜய் தொலைக்காட்சி, விருது

விஜய் டிவி அவார்டு தரும் ரகசியம்!

vijay awards

விஜய் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தங்கமீன்கள் படத்திற்கு சிறந்த படம் என்ற விருது வழங்கப்பட்டது. எல்லோரும் விருது கிடைத்ததும் விருது கொடுத்தவர்களை ஆஹா..! ஓகோ..! என புகழ்ந்து தள்ளுவார்கள். ஆனால் இயக்குநர் ராம் விருதை வாங்கிக்கொண்டு நெஞ்சை உருக்கும் கருத்துகளை தெரிவித்துள்ளார்.
தங்க மீன்கள் படத்தில் ராமுக்கு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் சாதனா கடந்த ஒரு வாரமாக ‘நான் சென்னை வரட்டுமா? எனக்கு விருது தராங்களா என ராமுக்கு அடிக்கடி போன் செய்துள்ளார். உனக்கு எந்த விருதும் தரவில்லை, தங்கமீன்கள் படத்திற்கு மட்டுமே விருது தராங்க எனக் கூறியுள்ளார். அதற்கு சாதனா எனக்கு நேஷனல் அவார்ட் குடுத்துருக்காங்க, விஜய் அவார்ட்ஸ் தரமாட்டாங்களா?  தெய்வத்திருமகள் படத்தில் நடித்த சாராவுக்கு விஜய் அவார்ட்ஸ் குடுத்தாங்களே, அந்த மாதிரி எனக்கும் தர மாட்டாங்களா?’ என ராமிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு சிந்திக்க வைத்துள்ளார். இதை அப்படியே மேடையில் சொல்லி விஜய் டிவியின் முகத்திரையை கிழித்துள்ளார் ராம்.
மேலும் தங்கமீன்கள் படத்திற்கு உயிர்கொடுத்ததே ‘ஆனந்த யாழில்’ என்ற பாடல் தான். ஆனால் அந்த படல் நாமினி லிஸ்டில் கூட சேர்க்கவில்லை அவ்வளவு தரம் கெட்ட பாடலா அது என கேள்வியை எழுப்பிவுடன் ஒரு நிமிடம் அரங்கமே ஆடிப்போய்விட்டது. மேலும் அந்த பாடலை ஒருமுறை ஒலிபரப்புங்கள் நான் கேட்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். உடனே கோபிநாத், “சார் அந்த பாடல் இல்லையென்று நினைக்கின்றேன்”என மழுப்பலான பதிலை தெரிவித்தார்.
ஆனால் ராம் “அந்த படலை பாடத்தெரிந்தவர்கள் யாராவது இந்த விழாவில் உள்ளீர்களா?” எனக் கேள்வியை எழுப்பினார். எப்படியாவது ராமை மேடையைவிட்டு இறக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கோபிநாத் அந்த பாடல் வேறு ஒரு லிஸ்ட்டில் நாமினியாகி உள்ளது எனக் கூறினார். எனக்கு தெரியும் அந்த பாடல் எந்த லிஸ்டிலும் இல்லையென்று என ராம் தெரிவித்தார். வேறுவழியில்லாமல் கூட்டத்தில் இருந்த ஒருவர் அந்த பாடலை பாடிக் காட்டினார். அவர் பாடிமுடித்ததும்
தங்கமீன்கள் படத்திற்கு உயிர் தந்த என் தோழன் யுவன் சங்கருக்குஇந்த விருதை சமர்பிக்கின்றேன் எனக்கூறி யுவனை மேடைக்கு அழைத்து அவரை கவுரவித்தார்.
ராமின் இந்த தைரியமிக்க செயலால் வெட்கித் தலைகுனிந்தனர் விஜய் டிவி யினரும் விருதுகொடுத்த குழுவினரும். டிஆர்பி ரேட்டிங் வேண்டும் என்பதற்காக பெரிய நடிகர்களுக்கு விருதுகளை வழங்கி பணம் சம்பாதிக்க நினைக்கும் தொலைக்காட்சிகளுக்கு இந்தச் செயல் சாட்டையடியாகத்தான் இருக்கும். இன்னொரு விஷயம் விஜய் விருதுகள் விஜய் டிவி ஒளிபரப்பும் உரிமை வாங்கிய படங்களுக்கு மட்டுமே தரப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இப்படித்தான். அதாவது படத்தை எங்களுக்கு விற்றால், இசை வெளியீட்டில் ஆரம்பித்து, நூறாவது நாள் வரை எல்லா கவரேஜும் கிடைத்துவிடும். கூடவே மக்கள் விருதுகள் என்ற பெயரில் விருதுகளும் கிடைக்கும் என்பதை சினிமா தயாரிப்பாளர்களுக்கு இவர்கள் கடந்த 8 ஆண்டுகளாக சொல்லாமல் சொல்கிறார்கள். இதை புரிந்து கொள்ளாமல் ஏதோ மிகப் பெரிய அங்கீகாரமாக கருதும் சினிமாக்காரர்களை என்ன சொல்வது?
விஜய் டிவி விருது விழா வரும் ஞாயிறு ஒளிபரப்பாகிறது. கண்டுகளியுங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.