சர்ச்சை, சினிமா, சின்னத்திரை, தமிழ்சினிமா, தொலைக்காட்சி நிகழ்வுகள், விஜய் தொலைக்காட்சி, விருது

விஜய்டிவி விருது விழாவில் பேசிய அனைத்தையும் ஒளிபரப்பினார்களா? இயக்குநர் ராம் விளக்கம்

vijay awards con

விஜய் விடி விருது விழாவில் இயக்குநர் ராம் தங்கமீன்கள் படத்தில் நடித்த சிறுமிக்கு ஏன் விருது தரவில்லை என்று கேட்டது பரபரப்பை உண்டாக்கியது. இந்நிலையில் கடந்த ஞாயிறு விஜய் டிவியில் விருது நிகழ்ச்சி ஒளிபரப்பானது. விருது விழாவில் பேசிய அனைத்தும் விடியில் ஒளிபரப்பானதா என்பது பற்றி நிறைய ரசிகர் கேட்டதால் தன்னுடைய முகப்புத்தகத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிறார் இயக்குநர் ராம்…

‘Director Ram பக்கத்திற்கு இப்போது வரை வந்த மின்னஞ்சல்கள், என் கைப்பேசிக்கு வந்த குறுந்தகவல்கள் மற்றும் அழைப்புகள் எல்லாம் ஏறக்குறைய ஒரே கேள்வியை வெவ்வேறு வகையில் கேட்பதாக இருந்தது. அவற்றுக்கு தனித்து பதில் சொல்ல இயலாமல் இப்படி பொது பதிலாக சொல்வதற்கு மன்னிக்கவும்.

நீங்கள் விருது கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தில் பேசியதாக விஜய் தொலைக்காட்சி சொல்கிறதே? ஆதங்கத்தில் பேசியதாக சொல்கிறதே? உண்மையா? உண்மை இல்லை எனில் நீங்கள் பதில் சொல்ல வேண்டும் அல்லவா? என்பதாய் நீள்கின்றன அவை.

என் மனதில் நான் என்ன நினைத்தேன் என்ற யூகத்திற்கு அல்லது கண்டுபிடிப்புக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்?

விருதுகளைப்பற்றிய என் கருத்துக்களை நான் முன்பே உங்களிடமும், பொது நிகழ்விலும் பகிர்ந்திருக்கிறேன்.

தேசிய விருது கிடைத்த போது சொன்னது : ”தேசிய விருது கிடைத்ததால் “தங்கமீன்கள்” நல்ல படம் என்றாகி விட முடியாது. கிடைக்காமல் போயிருந்தால் அதற்காக அது தகுதியற்ற படமாகவும் மாறி விடாது. விருதை முடிவு செய்வது படத்தின் தரமல்ல, நடுவர்களின் தரமே. எனவே விருது என்பது ஒரு added value, அவ்வளவுதான்”.

இன்றைக்கும் என்றைக்கும் விருதைப் பற்றிய என் கருத்து இதுதான்.

Nomination இல் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதியாகத் தெரியாமல் கோபி சொன்னதை ஏன் மறுத்தீர்கள்?

அப்புறம் அடுத்தக் கேள்வி நீங்கள் மேடை ஏற வரும் போதே “ஆனந்த யாழை” பாடலின் இசை ஒலித்ததே” அப்புறம் ஏன் நீங்கள் அந்த பாடலை அவர்களிடம் இசைக்கச் சொல்லாமல் கூட்டத்தில் இருந்த ஒருவரை அழைத்துப் பாடச் சொன்னீர்கள். அது ஏதோ கலகம் செய்வது போல் இருந்ததே? என்று.

Best lyric category மற்றும் favourite song category என்ற இரண்டு பிரிவுகளே பாடலுக்காக இருக்கும் பிரிவு. Favourite song category யில் ”ஆனந்த யாழை” பாடல் இல்லை என்பது எனக்கு மட்டும் அல்ல உலகத்துக்கே தெரியும். (இணைய தளத்தில் விஜய் விருதிற்கு வெகு நாட்களுக்கு முன்பே favourite song category nominate ஆன பாடல்களை வெளியிட்டு விட்டார்கள்) எனவே கோபி இருக்கிறது என்று சொன்ன போது நான் உறுதியாக இல்லை என்று சொன்னேன். இப்போதும் இல்லை
என்றே சொல்கிறேன்.

பின்னணிப் பாடகருக்கான போட்டிப் பிரிவில் இடம் பெறுவதை பாடலுக்காக எடுத்துக் கொள்ள முடியாது. யுவன் சங்கர் ராஜாவிற்குத்தான் பின்னணிப் பாடகர் விருதும் அதற்காகவே அவர் வந்திருக்கிறார் என்பதும் அப்போட்டிப் பிரிவில் எந்தப் பாடகர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதும் முன்பே அறிந்த ஒன்றுதான். அதைத் தெரியாமல் நான் இல்லை என்று சொல்லவில்லை.

இந்த ஆண்டு இந்தியாவின் சிறந்த பாடலாக தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் நாமினேசனில் இடம் பெறாத “ஆனந்த யாழை “ பாடலை யுவனிற்கு செலுத்தும் அன்பாக இரண்டு வரிகள் போடுங்கள் என்று நான் கேட்டேன். அப்போது அந்தப்பாடல் இல்லை, ஆனந்த யாழை பாடல் வேறு பிரிவில் nominate ஆகியிருக்கிறது என்று சொன்னார் கோபி.
அதை favourite song catergory என்று மட்டுமே நான் பொருள் கொண்டேன். இப்போதும் அப்படியே நான் பொருள் கொள்கிறேன்.

கோபியும் விஜய் தொலைக்காட்சியும் அந்த வேற category யை சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான விருதாக பொருள்
கொண்டிருக்கிறார்கள் என்பதை தொலைக்காட்சியில் பார்த்த பின்புதான் நான் தெரிந்து கொண்டேன். வேறு category என்பதற்குப் பதிலாக பின்னணிப் பாடகர் category என்று கோபி சொல்லி இருந்தால் இப்போது மேல் சொன்ன விளக்கத்தை நான் அப்போதே தெரிவித்து இருப்பேன்.

ஆனந்த யாழை பாடல் தொலைக்காட்சியில் ஒலித்ததே தவிர மேடையில் ஒலிக்கவில்லை. நான் முதலில் அவர்களிடம் தான் கேட்டேன். யுவனிற்காக “ஆனந்த யாழை” பாடலின் இருவரிகளை ஒலிக்கச் செய்யுங்கள் என்று. ஆனந்த யாழைப்பாடல் இல்லை ஒலிபரப்ப, என்று கோபி சொன்ன பிறகுதான் நான் அரங்கத்தில் இருந்தவரிடம் பாடுமாறு கேட்டுக் கொண்டேன். மற்றபடி அதில் எந்த வித உள்நோக்கமும் இல்லை.

நீங்கள் பேசியதை முழுவதுமாக ஒளிபரப்பினார்களா?

முழுவதுமாக ஒளிபரப்பினார்கள். ( இவற்றை தவிர – ஆனந்த யாழைப் பாடல் ஒலிபரப்ப தயாராக இல்லை என்று கோபி சொன்னது, அப்புறம் விருதின் தொடக்கத்தில் எந்தப்படங்கள் எல்லாம் ‘சிறந்த படம்” போட்டிப்பிரிவில் போட்டியிட்டு இருக்கிறது என்ற தகவல் அடங்கிய “audio visual”ஜ அவர்கள் ஒளிபரப்பாமல் நேரடியாக விருதை அறிவித்து என்னை மேடைக்கு அழைக்க நான் “nomination” அடங்கிய audio visual ஐ கொஞ்சம் போடுங்கள் இல்லை எனில் இந்த விருதே ஏதோ சும்மா கொடுத்தது போல் இருக்கிறது என்று கேட்க அவர்கள் அதை play செய்தார்கள். இந்த இடத்தில் மட்டுமே நான் கொஞ்சம் கோபப்பட்டேன், மற்ற அனைத்துப் பிரிவுகளுக்கும் “nomination” அடங்கிய audio visual ஐ play செய்தவர்கள் இறுதியான சிறந்த படத்திற்கான nomination அடங்கிய audio visual ஐ நேரப்பற்றாக்குறையினால் play பண்ணவில்லை என்று அவர்கள் சொன்ன போது).

“2013ன் சிறந்த படமாக நீங்கள் எந்த படத்தை தேர்வு செய்வீர்கள்? தங்கமீன்களா அல்லது வேறு படமா என்று?

நான் நடுவர் அணியில் இருந்திருந்தால் 2013ன் சிறந்த படமாக “ஆதலால் காதல் செய்வீர்” திரைப்படத்தை தேர்ந்தெடுத்து இருப்பேன்.

அப்புறம் அநேக மின்னஞ்சல்கள் நீங்கள் விஜய் தொலைக்காட்சிக்கு பதில் சொல்லுங்கள் என்று வற்புறுத்தி இருந்தது.

என் பேச்சை முன் வைத்து ஏனையோர் அவர்களிடம் கேட்ட கேள்விகளுக்கு என் பேச்சை முன் வைத்து அவர்களுக்கு அவர்கள் பதில் சொல்லி இருக்கிறார்கள்.

இதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?’ என்று எழுதியிருக்கிறார்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.