காது, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவம்

ஒலி மாசு நம்மை எப்படி பாதிக்கிறது?

நோய்நாடி நோய்முதல் நாடி – 49

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

சுமார் இரண்டு மாதங்களாக இந்தத் தொடரை எழுத முடியாத சூழ்நிலை. மறுபடியும் இப்போது ஆரம்பிக்கிறேன்.

சொந்தக் கதையை சொல்லிவிட்டு பிறகு தொடரலாம் என்று நினைக்கிறேன். ஒரு முறை தொண்டைப்புண்ணுடன் ஜுரமும் சேர்ந்துகொண்டு வழக்கம்போல காது கொஞ்சம் தகராறு செய்ய ஆரம்பித்தது. மருத்துவர் சொன்னார்: ‘ஜுரம் இறங்கிய பின் வாருங்கள். காதுகளில் சேர்ந்திருக்கும் குரும்பை எடுத்து விடலாம். அதற்கு முன் ஒரு வாரத்திற்கு தினமும் இரவு படுக்கப்போகும் முன் ஒரு சொட்டு இரண்டு காதுகளிலும் விட்டுக் கொள்ளுங்கள். அடைந்திருக்கும் குரும்பை இளகும். சுத்தம் செய்வது சுலபம்’ என்றார்.

அதேபோல செய்து காதுகளை சுத்தம் செய்து கொண்டு வந்தேன். உலகமே வேறு மாதிரி இருந்தது. என்ன என்கிறீர்களா? சின்னச்சின்ன சத்தங்கள் கூட மிகத் தெளிவாகக் கேட்டது. நான் எடுத்து வைக்கும் காலடிச் சத்தம் கூட துல்லியமாகக் கேட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். (பக்கத்து வீட்டு பங்கஜா தன் கணவனிடம் கிசுகிசுப்பது கூட எனக்குக் கேட்டது! – ச்ச்சும்ம்மா!) மிகவும் ஆச்சர்யப்பட்டுப் போனேன். கடவுள் என்ன அருமையாக ஒவ்வொரு அவயவத்தையும் நமக்குக் கொடுத்திருக்கிறார். நமது அலட்சியத்தால் எப்படிக் கெடுத்துக் கொள்ளுகிறோம் என்று தோன்றியது.

நமது செவிகளுக்கு பலவிதமான ஓசைகளையும் கேட்கும் திறன் உண்டு. ஓசைகளையும், பேரிரைச்சல்களையும் டெசிபல் என்ற அளவையில் சொல்லுகிறார்கள். திடீரென ஒரு பெருத்த ஓசையை கேட்கும் போது அட்ரினலின் சுரப்பதை உணருகிறோம். சிலசமயம் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதயத் துடிப்பு அதிகரிக்கும். மூச்சிரைக்கும். ஜீரணக் கோளாறுகளும் ஏற்படும். சிலருக்கு மைக்ரேன் தலைவலி உண்டாகும். தொடர்ந்து ஓசைகளைக் கேட்கும் சூழ்நிலையில் வேலை செய்பவர்களுக்கு அடிக்கடி எரிச்சல் உண்டாகும். மனநிலை மாறும். ஆக்ரோஷமாகப் பேசுவார்கள். நடந்து கொள்வார்கள்.

தொடர்ந்து ஓசைகளைக் கேட்பது தூக்கத்திற்கு எதிரி. தூக்கம் இல்லாத நிலையில் அது சம்பந்தமான நோய்கள் – கவனக்குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்றவை உண்டாகும். தொடர்ந்த ஓசை மன அழுத்தத்தை உண்டாக்கும்.

ஒரு உணவகத்திற்கோ அல்லது ஒரு திருமண வரவேற்பிற்கோ செல்லுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். அங்கு நிலவும் சத்தமான சூழ்நிலை, நீங்கள் பேசுவது அடுத்தவருக்குக் கேட்காத போது நீங்கள் இன்னும் சத்தமாகப் பேசவேண்டி இருக்கிறது. பலமுறை இதைபோன்ற அனுபவம் ஏற்பட்டுவிட்டால், உங்களுக்கு வெளியே போகவேண்டும் என்ற எண்ணமே தோன்றுவதில்லை. பேசாமல் வீட்டிலேயே இருந்துவிடலாம் என்று தோன்றும். ஓசையினால் நமது வெளியுலக வாழ்க்கையும் பாதிக்கப் படுகிறது.

கீழே இருக்கும் அட்டவணை ஓசைகளின் அளவையும் எத்தனை நேரம் அவற்றை நாம் கேட்கலாம் என்றும் சொல்லுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட ஒலி அளவுகள்
 ஒலி அளவுகள் (டெசிபலில்)                     24 மணி நேரத்தில் கேட்கக்கேடிய அதிகபட்ச நேரம்
85                                                                              8 மணி நேரம்
88                                                                             4 மணி நேரம்
91                                                                              2 மணி நேரம்
94                                                                              1 மணி நேரம்
97                                                                             30 நிமிடங்கள்
100                                                                           15 நிமிடங்கள்
103                                                                           7.5 நிமிடங்கள்
106                                                                          3.7 நிமிடங்கள்
109                                                                         112 நொடிகள்
112                                                                          56 நொடிகள்
115                                                                          28 நொடிகள்
118                                                                          14 நொடிகள்
121                                                                            7 நொடிகள்
124                                                                           3 நொடிகள்
127                                                                           1 நொடி
130-140                                                                1 நொடிக்கும் குறைவாக
140                                                                         இந்த ஒலி அளவைக்கு மேல் கேட்கவே கூடாது

பெரியவர்களுக்கு 140 dB க்கு மேல் உள்ள சத்தங்களை கேட்பதும் குழந்தைகளுக்கு 120 dB க்கு மேல் உள்ள சத்தங்களைக் கேட்பது நல்லதில்லை. இந்த அளவுகள் WHO வினால் பரிந்துரை செய்யப்பட்டவை.

கண்களுக்குத் தரும்  முக்கியத்துவத்தில் பாதி கூட நாம் காதுகளுக்குக் கொடுப்பதில்லை. குழந்தை பிறந்த உடனே  அதற்குக் காது கேட்கவில்லை என்றால் அதன் மழலைச் சொல்லை நம்மால் கேட்டு ரசிக்க முடியாது. நாம் பேசும் பேச்சு குழந்தையின் காதில் விழ விழத்தான் குழந்தை பேச ஆரம்பிக்கும்.
காதுகளில் இருக்கும் செலஃபன் பேப்பர் போன்ற செவிப்பறையில் வெளியிலிருந்து வர ஓசையெல்லாம் இங்குதான் முதலில் வந்து சேரும். செவிப்பறை பழுதடைந்தால் காதிலிருந்து சீழ்  வரத் தொடங்கும். உடனடியாகக் கவனிக்கவில்லை என்றால் செவிப்பறை  ஓட்டையாகிவிடும். செவிப்பறை ஓட்டையானால் எந்த ஓசையும் கேட்காது.

  • காதுகளில் அழுக்குச் சேர்ந்தா, தானே சுத்தம் செய்துகொள்ளும் திறன் காதுகளுக்கு உண்டு. சுத்தம் செய்வதற்காக நமது காதுகளில் 4000 சுரப்பிகள் இருக்கின்றன. ஹேர்பின், தீக்குச்சி, பென்சில் என்று கையில் அகப்படுவதை எல்லாம் காதிற்குள் விட்டு குடையக் கூடாது. பஞ்சு, குச்சி கூட வேண்டாம். இதெல்லாம் செவிப்பறையை பழுதாக்கிவிடும். அழுக்கு எடுக்கிற வேலைய மருத்துவரிடம் விட்டுவிடவும்.
  • காதுகளை எப்போதும் நீர் இல்லாமல் உலர்ந்த நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். காதுகளில் பிரச்னை இருந்து தலைக்குக் குளிக்க வேண்டிய அவசியம் வந்தால் பஞ்சுல தேங்காய் எண்ணெய் தோய்த்து வைத்துக் கொள்ளலாம். அதிலும் எண்ணெய் தோய்த்த பக்கம் வெளிப்புறம் இருக்க வேண்டும். அப்போதுதான் காதுகளின் உள் உறுப்புகளுக்குள் நீர் போகாது.
  • நாம் தலை சுற்றி கீழே விழாம நேரா நடக்கறதுக்கு, நிக்கறதுக்கு காதுதான் உதவுகிறது. நமது சமநிலையை பராமரிக்கிற அற்புதமான திறவும் நடுக்காதைத் தாண்டி இருக்கிறது. அதில் ஓடுற திரவம் மாறிப்போனால் நாம்  தள்ளாட ஆரம்பித்து விடுவோம்.
  • நமது காதுகள் மூலம் நாம் கேட்கும் ஓசைகளை வைத்து நாம் பேச ஆரம்பிக்கிறோம் என்பதால் காதுகளுக்கும் மூளைக்கும் நிச்சயமான தொடர்பு உண்டு.  காதில் பிரச்சினை வந்தால் ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டியது அவசியம். காதில் வரும் பிரச்சனையால்  மூளைக்கும் ஆபத்து வரக்கூடும்.

தொடர்ந்து அடுத்த வாரம் ‘கேட்போம்’

நோய்நாடி நோய்முதல் நாடி வாரந்தோறும் வெளியாகும் மருத்துவ விழிப்புணர்வு தொடர்.

“ஒலி மாசு நம்மை எப்படி பாதிக்கிறது?” இல் ஒரு கருத்து உள்ளது

  1. வணக்கம் அம்மா! உங்களை சிறிது இடைவெளிக்கு பிறகு சந்தித்ததில் மகிழ்ச்சி. பதிவு மிக அருமை. இதை படித்தவுடன் தான் நினைவுக்கு வருகிறது.. என் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு திடீரென அடிக்கடி தலை சுற்றல் ஏற்பட்டு மயக்கம் போட்டு கொண்டிருந்தார்.. பின்னர் தான் தெரிந்தது இதற்கு காரணம் காதுகளில் சுரக்கும் திரவம் அளவு சரி இல்லாமல் சுரந்தது தான் என்று.. இப்பொழுது குணமாகி நலமாக இருக்கிறார். என்னுடைய சொந்த அனுபவம் ஒன்றும் உண்டு. எட்டாவது படிக்கும் பொழுது சளி, மூக்கடைப்பு தொந்தரவால்
    அழுந்த மூக்கை சீறியதால் காது முக்கால் சதவிகிதம் அடைபட்டு போனது.. பின் ஒரு வாரம் கழித்து தான் காது நன்றாக கேட்க ஆரம்பித்தது!! உங்கள் எழுத்து தொடருங்கள் அம்மா 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.