அரசியல், சுற்றுச்சூழல், தமிழ்நாடு

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அளவுக்கு மீறி வாங்கி குவிக்கப்படும் டீசல்

Kudankulam_NPPகூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அளவிற்கு மீறி டீசல் வாங்கி குவிக்கப்படுவதாக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு…

‘‘கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அலகு பரிசோதனைகளுக்காக ஒரு மாதம் மூடப்பட்டிருப்பதாகவும், ஒரு மாதத்தில் வர்த்தக ரீதியிலான உற்பத்தித் துவங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையே கூடங்குளம் அணுமின் நிலையத்தார் டீசலை வாங்கித் தீர்க்கிறார்கள். கீழ்க்காணும் அட்டவணையைப் பாருங்கள்:

நாள்                       டீசல் அளவு (லிட்டர்)     ரூபாய் மதிப்பு              டீசல் விற்ற நிறுவனம்
மே 26, 2014        ஒரு லட்சம்                           55,72,160                           இ ஆ கா
மே 26, 2014         80,000                                      44,57,729                           ஹி பெ கா
மே 27, 2014          20,000                                      11,14,432                            ஹி பெ கா
ஜூன் 5, 2014       ஒரு லட்சம்                          54,54,665                          இ ஆ கா
ஜூன் 9, 2014          ஒரு லட்சம்                       43,66,334 + 10,91,542    ஹி பெ கா
ஜூன் 25, 2014        ஒரு லட்சம்                       53,44,315                           இ ஆ கா
ஜூன் 27, 2014        ஒரு லட்சம்                       53,44,315                           ஹி பெ கா

இ ஆ கா: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

ஹி பெ கா: ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்

மே 26, 2014 முதல் ஜூன் 27, 2014 வரையிலான ஒரு மாத காலகட்டத்துக்குள் சுமார் 3.25 கோடி ரூபாய்க்கு ஆறு லட்சம் லிட்டர் டீசல் வாங்கியிருக்கிறார்கள். இவ்வளவு டீசலை பயன்படுத்தி சுமார் 3௦ லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிக்க முடியும்.

கூடங்குளத்தில் முதல் அணு உலை உற்பத்தியை துவங்கியதாகச் சொல்லப்படும் அக்டோபர் 2௦13 முதல் பல கோடி ரூபாய்க்கு டீசல் வாங்கியிருக்கிறார்கள். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இவ்வளவு டீசலுக்கு என்ன தேவை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறார்கள். அதே நேரம் 1.1.2013 முதல் 30.06.2014 வரையிலான 18 மாத காலக்கட்டத்தில், கல்பாக்கம் அணுமின் நிலையத்தினர் வெறும் 15,46,641 ரூபாய்க்கான டீசல் மட்டுமே வாங்கியிருப்பது கவனிக்கப்பட வேண்டியது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் நீராவி உற்பத்தி இயந்திரம் (Steam Generator) தரமற்றது என்றும், சீனாவில் தியான்வான் எனுமிடத்தில் ரஷ்யா கட்டிக்கொடுத்த அணுமின் நிலையத்திலும் இதேப் பிரச்னை இருந்தது என்றும், நீராவி உற்பத்தி இயந்திரத்தை மாற்றித்தர வேண்டும் என்று சீனா விடாப்பிடியாக நின்று சாதித்தது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தியாவிலோ காங்கிரசுக் கட்சியும், பா.ஜ.க.வும், இந்திய உளவுத் துறையும் அனைவருமாக ஒன்றாய் நின்று இந்திய/தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும்போது அவசரம் அவசரமாக 3-4 அலகுகளுக்கு காங்கிரசு ஒப்பந்தம் போட்டதும், அதனை பா.ஜ.க. தட்டிக் கேட்காததும், மன்மோகன் சிங் அரசு தயாரிக்கச் சொன்ன உளவுத் துறை அறிக்கையை நரேந்திர மோடி அரசு கசிய விட்டதும், தற்போது மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கூடங்குளத்திற்கு அழைப்பதும் எல்லாமே “கூடங்குளத்தில் கூட்டுக் களவாணிகள்” எனும் நாடகத்தின் கோர்வையானக் காட்சிகள்.

எட்டுக் கோடி தமிழர்களின் உயிர்களோடு ஒரு கேடுகெட்ட ஆபத்தான விபரீத விளையாட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக அரசியல் கட்சிகளும், தலைவர்களும் நம்மைக் காக்க முன்வருவார்களா, அல்லது அதிகார வர்க்கத்தினரிடம் நம்மைக் காவு கொடுத்துவிட்டு வாளாவிருப்பார்களா என்ற கேள்வி எழுகிறது. இந்நிலையில் தமிழகமெங்கும் பாடுபடும் மக்கள் இயக்கங்களும், போராட்டக் குழுக்களும் உடனடியாகக் கைகோர்த்து களத்தில் இறங்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்’’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.