இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், கல்வி - வேலைவாய்ப்பு

ஆல் இந்தியா ரேடியோவில் தமிழில் செய்தி வாசிப்பு பணி!

AIR

புதுடெல்லியில் செயல்பட்டும் வரும் ஆல் இந்தியா ரேடியோ நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: செய்தி வாசிப்பு மற்றும் மொழிபெயர்ப்பு

காலியிடங்கள்: 6

வயதுவரம்பு: 30.06.2014 தேதியின்படி 21 – 45க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 23,000

கல்வித் தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்ட பட்டப்படிப்புடன் தமிழ் மொழியில் தெளிவாக வாசிக்கும் குரல் வளம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் வீதம் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருப்பதும் விரும்பத்தக்கது. முதுகலை பட்டப்படிப்புடன் தமிழை ஒரு பாடமாக படித்திருப்பது விரும்பத்தக்கது.

பணித்தன்மை: ஆங்கிலத்திருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்யவும், தமிழில் செய்திகளை தெளிவாக வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.300. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.225. இதனை Director General(News) AIR, New DElhi என்ற பெயரில் டெல்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, குரல்வளத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வில் மொழி அறிவு, மொழி பெயர்ப்பு திறன் மற்றும் தற்போதைய நடப்புகள் போன்றவற்றிலிருந்து வினாக்கள் அமைந்திருக்கும்.

இதேபோல மலையாளம், பெங்காலி, ஹிந்தி மொழி வாசிப்பாளர்களும் தேவைப்படுவதாக பிரச்சார் பாரதி செய்தி வெளியிட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Inspector of Accounts, News Services Division, All India Radio, New Broad Casting House, Parliament Street, New Delhi-110001.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.07.2014

மேலும் விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதிகள், தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய ஆல் இந்தியா ரேடியோ இணையதளத்தை பார்க்கவும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.