இன்றைய இளம்தலைமுறை தயாரிப்பாளர்களில் இயக்குநர்கள், நடிகர்கள், தொழிற்நுட்ப கலைஞர்களின் திறமை அறிந்து வாய்ப்பு கொடுப்பதில் முன்மாதிரியாக இருக்கிறார் திருக்குமரன் எண்டெர்ன்மெண்ட்ஸின் சிவி குமார். தெளிவான திரைக்கதையுள்ள படங்களை தேர்ந்தெடுப்பது, திட்டமிட்ட பட்ஜெட், சரியான நேரத்தில் படத்தை வெளியிடுவது என தமிழ் சினிமாவை புரபஷனலாக அணுகுவதை சிவி குமார் தனித்தன்மையை கொண்டிருக்கிறார்.
அட்டகத்தி படத்தில் ரஞ்சித், பிட்சா வில் கார்த்திக் சுப்புராஜ், சூது கவ்வும் படத்தில் நலன் குமாரசாமி, வில்லாவில் தீபன் சக்கரவர்த்தி, தெகிடியில் ரமேஷ், முண்டாசுப்பட்டியில் ராம் குமார் என இவர் தயாரித்த அனைத்து படங்களும் புதுமுக இயக்குநர்களே இயக்கியிருக்கிறார்கள்.
அதோடு இந்தப் படங்களில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா, நந்திதா, தினேஷ், அசோக் செல்வன் போன்ற நடிகர்களும் அறிமுகமாயினர். திறமையான இசையமைப்பாளர்கள், தொழிற்நுட்ப கலைஞர்கள் பலருக்கும் இவருடைய தயாரிப்பு நிறுவனம் வாய்ப்பு கொடுத்திருக்கிறது. இவர் தயாரித்து விரைவில் வெளிவர இருக்கும் சரபம் படத்தின் இயக்குனர் அருண் மோகனும் ஒரு புதுமுக இயக்குநரே.