திட்டக்குழுவை கலைத்து விட்டு அதற்கு பதிலாக வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த மாற்று வழி ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையின் போது அறிவித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, பிரதமர் மோடியின் சொல்லுக்கும், செயலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக கூறியுள்ளார். திட்டக்குழு கலைக்கப்படும் என்றால், அக்குழுவின் மூலம் அமல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்களை இனி செயல்படுத்துவது யார்? அதனை கண்காணிப்பது யார் என்று சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
வறுமை ஒழிப்பு பற்றி மோடி பேசுகிறார். ஆனால், மக்களுக்கு அதிகாரமளித்தல் பற்றி முறையாக பேசுவதற்கு நரேந்திர மோடி தவறிவிட்டார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா விமர்சித்துள்ளார்.