இரண்டு முன்னணி கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது சினிமாவுக்கு புதிதல்ல. ஆனாலும் ஒரு முன்னணி கதாநாயகன் இன்னொரு முன்னொரு கதாநாயகனின் படத்தை தயாரிப்பது புதிது. வேலையில்லா பட்டதாரியின் வெற்றிக்கு பிறகு நானும் ரவுடிதான் படத்தை தயாரிக்கிறார் தனுஷ் . இதில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். நயன்தாரா நாயகியாக நடிக்க, அனிருத் இசையில், போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.