சங்கிலித் தையலை எந்த விதமான டிசைனுக்கும் இந்தத் தையலைப் போடலாம். அதேபோல எந்த விதமான ஆடைகளிலும் இதைப் பயன்படுத்தலாம்.
தேவையானவை: காட்டன் துணி, ஊசி, எம்பிராய்டரி நூல், எம்பிராய்டரி சட்டகம்.
துணியை எம்பிராய்டரி சட்டகத்துக்குள் பொருத்தவும். ஊசியில் இரட்டை இழையாக நூலைக் கோர்த்துக் கொள்ளுங்கள்.
டிசைனின் ஆரம்பப் புள்ளியில் ஊசியைக் கீழிருந்து குத்தி மேலே இழுத்துக் கொள்ளுங்கள்.
மேலிழுத்த நூலை இடது கைப் பெருவிரலால் துணியோடு அழுத்திப் பிடித்தவாறே, முதலில் ஆரம்பித்த புள்ளியிலேயே மீண்டும் ஊசியைக் குத்தி,
அதே வரிசையிலேயே சிறிது இடைவெளி விட்டு ஊசியை வெளியே இழுக்க வேண்டும்.
அப்படி இழுக்கும்போது, பெருவிரலால் அழுத்திக் கொண்டிருந்த நூலை ஊசியின் அடியில் விட்டு இழுத்தால், தானாகவே இறுகி, ஒரு வளையம் போல தெரியும். இது சங்கிலியின் முதல் வளையம்.
இரண்டாவது வளையத்துக்கு, ஊசி வெளிவந்த இடத்திலேயே.. அதாவது முதல் வளையம் முடிந்த இடத்திலேயே ஊசியைக் குத்தி, சிறிது இடைவெளி விட்டு வெளியே இழுத்து, நூல் ஊசிக்கு அடியில் இருப்பது போல இழுக்கவேண்டும்.
இப்படி தொடர்ந்து தைக்கும்போது வளையங்கள் அடுத்தடுத்து அமைந்து, அழகிய சங்கிலி உருவாகியிருக்கும்.
தையலை முடிக்கும்போது, வளையத்திலிருந்து வெளிவரும் ஊசியை அதன் வெளியே குத்தி, துணியின் உட்புறமாக இழுத்து, முடிச்சிட வேண்டும். இல்லையெனில், இறுதி வளையம் பிடிப்பு இல்லாமல் பிரிந்து விடும்.
எம்பிராய்டரி போட்டு முடித்தவுடன் ஒவ்வொரு வளையமும் நேர்த்தியாக இருக்கும்.
சங்கிலித் தையலில் போட்ட ஒரு எளிய குஷன் கவர் டிசைன் இது…
“எம்பிராய்டரி : சங்கிலித் தையல் போடுவது எப்படி?” இல் ஒரு கருத்து உள்ளது