குழந்தைகள் அதிகம் விரும்பும் புட்டிங் கேக்கை அவன் இல்லாமல் செய்ய முடியும். எளிய செய்முறைதான்.
தேவையான பொருட்கள்:
பிரெட் துண்டுகள் – 4
முட்டை – 1
பச்சை வாழைப்பழம்- 1
சர்க்கரை – 4 தேக்கரண்டி
தேன் – 2 தேக்கரண்டி
விரும்பினால் நெய் சேர்க்கலாம்…
முதலில் முட்டை, வாழைப்பழம், சர்க்கரை சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
விருப்பமான சுவையில் பிரெட் துண்டுகள் எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுது இப்படி இருக்கும்..
தவாவில் பிரெட் துண்டுகளை போட்டு இரண்டு பக்கமும் வாட்டவும். அடுப்பை குறைந்த தீயில் மட்டுமே வைக்க வேண்டும்.
இரண்டு பக்கமும் வாட்டிய பிறகு ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு தேக்கரண்டியால் அரைத்த கலவையை பிரெட்டின் மேல் பரப்பவும்.
இரண்டு பக்கமும் அதைப் பரப்பி வாட்டி எடுக்கவும்.
உண்ணும்போது தேன் தடவி உண்ணலாம். மிகுந்த சுவையோடு இருக்கும். வாழைப்பழம், முட்டை, தேன் என சத்துகள் நிறைந்த உணவு இது. முயற்சித்துப் பாருங்கள்.