அரசியல், தமிழ்நாடு

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்

கோப்புப் படம்
கோப்புப் படம்

 

வேதாரண்யத்தை அடுத்த வெள்ளம்பள்ளம் மீனவர் காலனியைச் சேர்ந்த செ.செல்லபாண்டியன் (38), கு.காசிநாதன் (50), அருள் (45), செ.ரகு (30), பாண்டி(30),க.கங்காதரன் (40) ஆகிய 6 பேரும், முருகேசன், சத்தியராஜ் ஆகியோருக்குச் சொந்தமான 2 கண்ணாடியிழைப் படகுகளில் திங்கள்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

கோடியக்கரைக்கு தென்கிழக்கே செவ்வாய்க்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு சில படகுகளில் இலங்கை மீனவர்கள் எனக் கருதப்படும் 3 பேர் வெள்ளப்பள்ளம் மீனவர்கள் இருந்த படகில் ஏறி, மீனவர்கள் மீது கத்தி, கம்பி, தடி போன்றவைகளால் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். மேலும், படகில் இருந்த மீன்கள், 2 ஜிபிஎஸ் கருவிகள்,5 லைட் ஆகியவற்றை பறித்துச் சென்றுவிட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.