அறிவியல், அறிவியல்/தொழிற்நுட்பம், உலகம்

மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு: மூவர் பகிர்ந்துகொள்கின்றனர்!

நோபல் பரிசு 2014nobel for medicine

இந்த ஆண்டின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுக்கு, பிரிட்டிஷ் அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஜான் ஓ கீஃப், நார்வேயைச் சேர்ந்த தம்பதி எட்வர்ட் மோஸர், மே-பிரிட் மோஸர் ஆகிய மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நோபல் பரிசுத் தொகையான 11 லட்சம் டாலர்களில் (சுமார் ரூ.6.7 கோடி) ஒரு பாதி ஜான் ஓ கீஃபுக்கும், மற்றொரு பாதி மோஸர் தம்பதிக்கும் பிரித்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பிடத்தை அறிந்துகொண்டு, செல்ல வேண்டிய இடத்துக்கு வழிகாட்டும் குளோபல் பொஸிஷனிங் சிஸ்டம் எனப்படும் இடஞ்சுட்டிக் கருவி, மனித மூளையில் இயற்கையிலேயே அமைந்துள்ளதைக் கண்டறிந்ததற்காக இந்த ஆண்டின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த இயற்கை இடஞ்சுட்டிக் கருவியின் முதல் பகுதியை ஜான் ஓ கீஃப் 1971-ஆம் ஆண்டு கண்டறிந்தார். ஆய்வகத்தில் சோதனைக்குள்படுத்தப்பட்ட எலியின் மூளையில் ஹிப்போகாம்பஸ் என்ற பகுதி, குறிப்பிட்ட ஓர் இடத்தை அடையும்போது உயிரூட்டம் பெறுவதை அவர் கண்டறிந்தார். முப்பது ஆண்டுகள் கழித்து, எட்வர்ட் மோஸர், மே-பிரிட் மோஸர் தம்பதி, மூளை இடஞ்சுட்டியின் மற்றொரு முக்கிய அம்சத்தைக் கண்டறிந்தனர்.  இருக்குமிடத்தையும், சேர வேண்டிய இடத்துக்கான வழியையும் துல்லியமாகக் கணிக்க, மூளையிலுள்ள தகவல்களை ஒருங்கிணைக்கும் அமைப்பை அவர்கள் 2005-ஆம் ஆண்டு கண்டறிந்தனர்.

இதுகுறித்து நோபல் பரிசு தேர்வாளர்கள் கூறுகையில், “மூளையின் இடஞ்சுட்டி அமைப்பு குறித்த அறிவைப் பெறுவதில் இந்த மூவரும் அளித்துள்ள பங்களிப்பு, முதுமை நோயால் நினைவாற்றலை இழக்கும் பலருக்கு சிகிச்சை முறைகளை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது” என்றனர்.

அயர்லாந்திலிருந்து அமெரிக்காவில் குடியேறிய பெற்றோருக்கு நியூயார்க் நகரில் 1939-ஆம் ஆண்டில் பிறந்த ஜான் ஓ கீஃப்(74), கனடாவிலுள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் உளவியல் மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். 1967-ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இணைந்து, 1987-ஆம் ஆண்டு முதல் அப்பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பிரிட்டன், அமெரிக்க இரட்டைக் குடியுரிமை பெற்றவர்.

எட்வர்ட் மோஸர் (52), மே-பிரிட் மோஸர் (51) தம்பதியான இந்த இருவரும், உளவியல், நரம்பியல் நிபுணர்கள். இவ்விருவரும் நார்வே அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தின் காவ்லி நரம்பியல் ஆராய்ச்சி மையம், நினைவு உயிரியல் மையம் ஆகியவற்றின் நிறுவன இயக்குநர்களாக உள்ளனர்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.