அரசியல், பெண், பெண் அரசியல்வாதிகள்

அமெரிக்காவின் சமவுடைமையாளர்!

kshama

முதலாளித்துவத்தின் பிறப்பிடமான அமெரிக்காவில் சமவுடைமை பேசுகிறார் இந்தப் பெண். இதுவரை இந்தியாவிலிருந்து புறப்பட்டு அமெரிக்க மண்ணில் அமெரிக்க பிரஜையாக, அமெரிக்க கொள்கைகளை ஏற்றுக்கொண்ட பல வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உண்மையிலேயே பெருமைப்படக் கூடிய செயல்களைச் செய்துகொண்டிருக்கிறார் ஷாமா சாவந்த். அமெரிக்காவின் சியாட்டில் நகர சபை உறுப்பினர் ஷாமா, தன்னுடைய உறுப்பினர் பதவிக்கான தேர்தலின்போது தேர்தல் பிரசாரமாக ஒரு மணி நேரத்துக்கு குறைந்தபட்ச ஊதியமாக 15 டாலர் தர வேண்டும் என்பதை சட்டமாக்குவேன் என்றார். அதன்படியே 2014ல் நகர சபை மேயர் இதை சட்டமாக்கினார். அமெரிக்க நாட்டின் சராசரி குறைந்தபட்ச ஊதியத்தைவிட இது இரண்டு மடங்கு அதிகமாகும். முன்னாள் மென்பொருள் பொறியாளரான ஷாமாவுக்கு கடைநிலை ஊழியர்கள் மேல் எப்படி இவ்வளவு கரிசனம் வந்தது, அவர் சமவுடைமையாளராக மாறியதன் பின்னணி என்ன?

புனேயில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ராமானுஜம்-வசுந்தரா தம்பதியின் மகளான ஷாமா, தன் 13 வயதிலேயே தந்தையை இழந்தவர். இந்தியாவில் நிலவிய வறுமையும் சாதிய கொடுமைகளும் அவரை சம உடைமை சித்தாந்தத்தின் மேல் ஆர்வம் கொள்ள வைத்தன. மும்பையில் கணிப்பொறி அறிவியலில் பட்டம் படித்த ஷாமா, அமெரிக்காவில் பணியில் இருந்த விவேக் என்ற பொறியாளரை திருமணம் செய்துகொண்டார். அமெரிக்காவுக்கு ஷாமா இடம்பெயர்ந்தது இப்படித்தான்.

அமெரிக்க மென்பொருள் துறையில் நிலவிய ஏற்றத்தாழ்வான சம்பள நிர்ணயம் ஷாமாவை மென்பொருள் துறையில் இருந்து வெளியேற வைத்தது. சமநிலையற்ற பொருளாதார தன்மையின் மேல் எழுந்த கேள்விகளால் பொருளாதாரத்தை படிக்க விரும்பினார். பொருளாதாரத்தில் ஆய்வு பட்டம் பெற்ற ஷாமா, மாற்று சமவுடைமையளார் ஒருவரின் உரையைக் கேட்டு உந்துதலாகி சியாட்டல் பகுதிக்கு 2006 வாக்கில் குடிபெயர்ந்தார். 2010ல் அமெரிக்க குடியுரிமைப் பெற்றார்.

அதற்குப் பிறகு சியாட்டல் பகுதியில் சமவுடைமை கட்சியில் உறுப்பினராகி நிறவெறிக்கெதிராகவும் ஒருபால் விருப்ப மக்களுக்கு ஆதராகவும் பெரும் தொழில் நிறுவனங்களிம் உழைப்பு சுரண்டலுக்கு எதிராகவும் பல்வேறு சமூக போராட்டங்களை நடத்தினார். முதன்முறையாக நகர சபை பதவிக்கு நின்றபோது தோற்கடிக்கப்பட்டார். அதன்பிறகு நடந்த தேர்தலில் வென்று சியாட்டல் நகர சபை உறுப்பினரானார். சமவுடைமையாளர் ஒருவர் நகர சபை உறுப்பினராவது இதுவே முதல் முறை.

பொதுவாக அமெரிக்க வாழ் இந்திய பிரபலங்கள் தாங்கள் வளர்ந்த நாட்டை அமெரிக்க சமூகத்தின் முன் காட்ட விரும்புவதில்லை.  அதாவது வீட்டுக்குள் இந்தியராக சாதி கட்டுமானங்களுடன் இந்திய பிற்போக்குத்தனங்களுடன் வாழ்ந்தாலும் வெளியில் அமெரிக்கராகவே தன்னை காட்டிக் கொள்வார்கள். ஆனால் ஷாமா, தன் பூர்வீகத்தை இயல்பாகவே நினைவு கொள்கிறார்.

அமெரிக்கா சுரண்டலை ஊக்குவிக்கும் சமூகம், ஒரு மாதத்தில் கோடீஸ்வரனாவது எப்படி? சொகுசு பங்களா வாங்குவது எப்படி? என எப்போது முதலாளித்துவத்தின் விளம்பரத்தூதுவர்களாக பெரும்பான்மை மக்கள் வழிநடத்தப்படுவார்கள். ஒருவர் கோடிகளை குவிக்க பலர் நூறுகளை இழக்க வேண்டியிருக்கும் என்கிற உண்மை வெளியே தெரிவதில்லை. இத்தகைய சமூகத்தில் முதலாளித்துவத்துக்கு எதிரான அரசியல் நடத்துவது அவ்வளவு எளிதான  செயல் அல்ல… அதை செய்துகொண்டிருக்கும் துணிவை அவர் இந்திய மண்ணில் நிலவும் சாதி அமைப்பைப் பார்த்து கற்றுக் கொண்டதாக சொல்கிறார். நாமும் ஷாமாவைப் பார்த்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது…ஷாமா குடும்ப அமைப்புக்குள் இருந்து கொண்டேதான் இத்தனையும் செய்கிறார். நாம் இன்னும் சாதி கட்டமைப்பை வழி வழியாக கடத்தும் பணியை நம்மை அறியாமல், சில நேரம் அறிந்தும் செய்து வருகிறோம். நாம் வெளியில் இறங்கி இதற்காக போராட வேண்டியதில்லை, குறைந்தபட்சம் வீட்டுக்குள் இருந்து சாதியை வெளியேற்றினாலே போதும்!

அமெரிக்காவின் சமவுடையாளர் என்ற பெயரில் ஷாமா சாவந்த் எழுதிய புத்தகம் விரைவில் வெளியாக இருக்கிறது.

 

 

 

 

“அமெரிக்காவின் சமவுடைமையாளர்!” இல் 3 கருத்துகள் உள்ளன

  1. ஷாமா சாவந்த் பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன். அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாட்டில் சம உடைமை தத்துவத்தைக் குடும்ப அமைப்புக்குள் இருந்து கொண்டே செய்கிறார் என்பது வியக்க வைக்கும் செய்தி. அவருக்குப் பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துக்கள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.