தமிழ்மொழி, தொழிற்நுட்பம்

இணையவழியில் தமிழ் வளர்க்க ஆர்வம் உள்ளவரா?

தொழிற்நுட்பம்

உலகெங்கும் வாழும் தமிழர், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தமிழர்தம் கலை, இலக்கியம், பண்பாட்டுக்கூறுகளை இணையவழி முன்னெடுத்துச் செல்வதிலும் தமிழில் கணியன்கள்(மென்பொருட்கள்) உருவாக்குவது முதலான கணித்தமிழ் வளர்ச்சியிலும் தமிழ் இணையக்கல்விக் கழகம் தொடர்ந்து தன் பங்களிப்பைச் செலுத்தி வருகிறது.

உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களின், குறிப்பாக இளந் தலைமுறையினரின் தேவையை நிறைவு செய்யும் விதமாகவும் தகவல் நெடுஞ்சாலையில் கணித்தமிழை விரைந்து பயணிக்க வைக்கும் எதிர்காலத் திட்டங்களை வகுத்திடவும் தமிழ் இணையக் கல்விக்கழகம் எண்ணியுள்ளது.

DSCN2571

அதன் ஒரு பகுதியாக, எதிர்வரும் ஆகஸ்டு 1 மற்றும் 2, 2015 ஆகிய நாள்களில் சென்னை, தமிழ் இணையக் கல்விக்கழக வளாகத்தில் ஓர் கலந்துரையாடல் நிகழ்வினை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வல்லுநர்கள், பேராசிரியர்கள், கணிய(மென்பொருள்) நிறுவனங்கள், அரசுத்துறை அலுவலர்கள், எழுத்தாளர்கள், பிறநாட்டில் வாழும் கணித்தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்க இருக்கின்றார்கள்.

நாள்: ஆடி 16 &17, 2046 – ஆகஸ்டு 1&2, 2015

நிகழ்விடம்:
தமிழ் இணையக் கல்விக்கழகம்,
காந்தி மண்டபம் சாலை,
(அரசு தகவல் தொகுப்பு விவர மையம் அருகில்,
அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு அடுத்து)
சென்னை – 600 025.
தொ.பே: 2220 1012 / 13
மின் முகவரி: [email protected]

கலந்துரையாடல் நிகழ்வில் கீழ்வரும் தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறும்.

1. எண்மியமாக்கம்
– நூல்கள் – மின்நூலகம்
– சுவடி, கல்வெட்டு, ஆவணங்கள், ஓவியங்களை எண்மியமாக்குதல்
2. ஆராய்ச்சி
– இயற்கை மொழிச் செயற்பாடுகள்
– ஒளி/ஒலி உணரிகள், சொற்பிழைதிருத்தி
– தரவகம், சொல்லாய்வு, அகரமுதலி.
3. இணையவழிகற்றல், கற்பித்தல்
– பல்வேறு நாடுகள் / பகுதிகளுக்கேற்ற பாடத்திட்டம் உருவாக்குதல்
– அலைபேசிக் கணிமை, குறுஞ்செயலி உள்ளடக்கம்
4. திறவூற்று மென்பொருள் / களப்பணி
– கணித்தமிழ்ப் பேரவைகள், விக்கியூடகம்
– திறவூற்று மென்பொருள் கொள்கை

எனவே இந்நிகழ்வில்  நேரில் அல்லது / இணையவழி (skype)யில் பங்கேற்கவேண்டும் என த. உதயச்சந்திரன், இ.ஆ.ப. தெரிவித்துள்ளார். மேலதிக தகவல்களுக்கு…

1. பங்கேற்பை 20.7.2015க்குள் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு உறுதிபடுத்த வேண்டும்.

2. தொடர்பு கொள்ள
தொலைபேசி : 91 44 2220 1012 / 91-44-2230 1012
தொலைப்பதிவி : 91-44-2230 1016
மின்-அஞ்சல் : [email protected]
இணையவழி பங்கேற்பு : skype ID: tamilvu

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.