சுற்றுச்சூழல்

சீமைக்கருவேல மரங்கள் ஏன் கூடாது?

ஞா.கலையரசி

தமிழகம் முழுக்க சாலையின் இருபக்கங்களிலும் கண்ணுக்கெட்டிய தூரம் விளைநிலம் மற்றும் கால்வாய்களை ஆக்கிரமித்துப் பரவிக்கிடக்கும் மரத்தின் பெயர் சீமைக்கருவேலம்.  இதற்குக் காட்டுக் கருவை, வேலிக்காத்தான், டெல்லி முள் என்ற பெயர்களும் உண்டு.

நம் மண்ணைத் தாயகமாகக் கொண்ட கருவேல மரத்துடன் இதனைக் குழப்பிக்கொள்ளக் கூடாது. அதன் தாவரப் பெயர் அகசியா நிலோடிகா(Acacia Nilotica). மெக்சிகோ மற்றும் தென் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இதன் பெயர், ப்ரோசொபிஸ் ஜூலிபிளோரா (Prosopis Juliflora). .

பார்த்தீனியத்தைப் போல இதன் விதைகள் கோதுமையோடு ஒட்டிக் கொண்டு நம் நாட்டுக்குள் வரவில்லை. யானை தானே தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதைப் போல, நாமே இந்த விதைகளைக் காமராஜர் காலத்தில் அமெரிக்காவிலிருந்து தருவித்து விதைத்து விட்டு, இதன் அசுர வேக ஆக்கிரமிப்பைத் தடுக்க வழியின்றி விழி பிதுங்கிக்கொண்டிருக்கிறோம்.

வறட்சி மாவட்டமாக கருதப்பட்ட இராமநாதபுரம் மாவட்டத்தில் தான் முதன் முதலாக கடும் வறட்சியிலும் வளரக்கூடிய இம்மரத்தைத் தேர்வு செய்து விறகுக்காக வளர்க்க எண்ணி வானத்திலிருந்து விதைகளைத் தூவினார்களாம். இப்போது இராமநாதபுரம் மட்டுமின்றி தமிழகமெங்கும் ஆக்ரமித்துள்ள இதனைப் பூண்டோடு வேரறுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். மரம் வளர்ப்பதை விட சீமைக்கருவை இனத்தை ஒழிப்பது தான், உடனே செய்ய வேண்டிய செயல்.

juliflora.3

இம்மரத்தை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்பதற்குச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்லும் முக்கிய காரணங்கள்:-

 1. ஆக்சிஜனை மிகக் குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது; அதே சமயம் கார்பன் டை ஆக்சைடை அதிகளவில் வெளியிட்டுக் காற்று மண்டலத்தை மாசாக்குகிறது.
 2. வேர் நிலத்தடி நீரை முற்றிலுமாக உறிஞ்சுவதுடன்
  அதனை நஞ்சாகவும் ஆக்குகிறது.
 3. இலை, காய்,விதை போன்றவை எதற்கும் பயன்படாதவை
  என்பதோடு எந்தப் பறவையும் இம்மரத்தில் கூடு
  கட்டுவதில்லை. பறவை, புழு, பூச்சி என எதையுமே
  தன்னிடம் அண்டவிடாத மூளி!காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிக்கொண்டு
  வெப்பத்தைக் கக்கும் தன்மை கொண்டது.
 4. இதன் நிழலில் கட்டிவைக்கப்படும் கால்நடைகள் “மலடாக’ மாறும். அப்படியே குட்டியை ஈன்றாலும் அது ஊனமாகவிருக்குமாம். முட்கள் விஷ‌த்த‌ன்மை கொண்ட‌வை.

கேரள மாநில மக்களிடம் இம்மரம் பற்றிய விழிப்புணர்வு இருப்பதால், அங்கு இதனைக் காண்பது அரிது. நமக்கு விதைகளை அளித்த அமெரிக்காவில் கால்நடைகளுக்குத் தீங்கு செய்யும் நச்சுத்தன்மை கொண்ட மரங்கள் பட்டியலில் இதன் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. (http://wric.ucdavis.edu/PDFs/plants reported to be poisonous to animals.pd)
அக்காலத்தில் ஆடாதொடை(ஆடு தொடா இலை) கிளுவை, மருதாணி (மருதோன்றி), காட்டாமணி (நெய்வேலி காட்டாமணி அல்ல) நாட்டுத் தேக்கு என்று சொல்லப்படும் பூவரசு, கல்யாணமுருங்கை, வாதநாராயண் போன்றவற்றின் கிளைகளை வைத்துத் தான் வேலி அடைப்பார்கள். அவ்வேலியில் சுற்றுப் புறத்துக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காத, பிரண்டை, தூதுவளை, முடக்கத்தான் போன்ற மனிதர்க்குப் பயன்படக்கூடிய மருத்துவ குணமிக்க மூலிகைச்செடிகள் பல படர்ந்து கிடக்கும். இவற்றையெல்லாம் இப்போது கண்ணிலேயே காணோம்.

வீச்சு வீச்சாக முட்கள் உள்ள கிளைகளை வைத்து வேலி போட்டால் ஆடு, மாடு நுழைவதற்கு வாய்ப்பேயில்லை என்பதால் தமிழக முழுக்க எல்லோரும் நாளடைவில் காட்டுக்கருவையை வேலிக்குப் பயன்படுத்தத் துவங்கினார்கள். ஆங்காங்கு வளர்ந்து கிடக்கும் மரத்தின் முட்களை வெட்டி வேலி அடைப்பதால் செலவும் கம்மி. எனவே தான் இதற்கு வேலிகாத்தான் என்ற புதுப்பெயர் நிலைத்து விட்டது.

ஏற்கெனவே வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இம்மரங்களை வளரவிட்டால், அங்கிருக்கும் கொஞ்ச நஞ்சம் நிலத்தடி நீரையும் இவை உறிஞ்சி விட்டு, அம்மாவட்டங்களைப் பாலைவனமாக மாற்றிவிடக் கூடிய ஆபத்திருக்கிறது. எனவே அரசு துரிதமாகச் செயல்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, போர்க்கால அடிப்படையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் உதவியுடன் இம்மரங்களை அடியோடு அழிக்க ஆவன செய்ய வேண்டும்.

“சீமைக்கருவேல மரங்கள் ஏன் கூடாது?” இல் 6 கருத்துகள் உள்ளன

 1. \\மரம் வளர்ப்பதை விட சீமைக்கருவை இனத்தை ஒழிப்பது தான், உடனே செய்ய வேண்டிய செயல்.\\ இந்த வரியொன்றே போதும்.. சீமைக்கருவேல மரங்கள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை உணர்ந்துகொள்ள… பலருக்கும் பயன்படும் விழிப்புணர்வுப் பதிவுக்கு மிகவும் நன்றி.

 2. சீமைக் கருவேல மரம் ஒழித்து நல்மரங்கள் வளர்க்க நண்பர்களுடன் இணைந்து நான் முழு நேரமாக பணியாற்றுகிறேன். தங்களைப்போன்றவர்கள் தரும் உற்சாகம்தான் எங்களை நல்ல செயல்களை செய்ய வைக்கிறது. நன்றி.

 3. // சீமை கருவேல மரங்கள் ஒழித்து நல்ல மரங்கள் வளர்க்க// நண்பர்களுடன் இணைந்து முழுநேரமாக பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்.*** தங்களைப்போன்றவர்களின் வார்த்தைகள் உற்சாகம் அளிக்கிறது.*** நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.