சமையல், சீசன் சமையல்

சம்மர் ஸ்பெஷல் – பூசணிக்காய் கருவடாம்!

காமாட்சி மகாலிங்கம்

காமாட்சி மகாலிங்கம்
காமாட்சி மகாலிங்கம்

இது உளுத்தம் பருப்பில், பூசணித் துருவல் சேர்த்து, உப்பு காரத்துடன்,செய்யும் ஒருவிதக் கருவடாம். கூட்டு,குழம்பு,டால்,மோர்க்குழம்பு,என யாவற்றிலும், வருத்துப்  போட்டால்,செய்யும்,பொருளுக்கு அதிக ருசியை சேர்க்க வல்லது. அப்படியே பொரித்தும், வடாம் மாதிரியும் உபயோகப் படுத்தலாம். இந்தக் கருவடாம் சேர்த்து, வற்றல்க் குழம்பு செய்தால், சாதம் அதிகம் தேவைப்படும். இதிலேயே வெங்காயம்,பூண்டு வகைகள் சேர்த்துச் செய்தால், அந்தப் பிரியர்களுக்கு,ஏன் பிடித்தவர்கள் யாவருக்குமே மிகக் கொண்டாட்டம்தான். உளுத்தம் பருப்புடன்,காராமணி சேர்த்தும் செய்யலாம். இந்த வெயிலிலே வடாம்கள் ஸ்டாக் செய்வது நல்லது. இந்த வடாத்தையும் முயற்சி செய்து பாருங்கள்.
பச்சை சுண்டைக்காய்,பச்சை மணத்தக்காளிக்காய், இவைகளுடன், வடாம் சேர்த்துச் செய்யும் வெந்தயக்குழம்பு மிக்க ருசியானது. பார்க்கலாம் வேண்டியதையும் செய்முறையையும்.

தேவையானவை:
வெள்ளை உளுத்தம் பருப்பு – அரை கிலோ
மிளகாய் வற்றல் – 10
பச்சை மிளகாய் – 6
சீரகம் -1 டேபிள் ஸ்பூன்
உப்பு – 3 டீஸ்பூன்
நன்றாக முற்றிய வெள்ளை பூசணிக்காய் – 1 கிலோ

செய்முறை :
சாம்பல் பூசணி, கல்யாண பூசணிக்காய் என பல பெயர்கள் பெற்றது இது. முற்றிய காய்கள், நீண்ட வாக்கில் நறுக்கப்பட்டு,  பத்தைகளாக,  விலைக்குக் கிடைக்கும்.
உளுத்தம் பருப்பை நன்றாகத் தண்ணீர் விட்டுக் களைந்து ஊறவைக்கவும். குறைந்தது  3மணி நேரங்கள். பிறகு தண்ணீரை நீக்கவும். பூசணிக்காயை, நன்றாக அதன் அழுத்தமான தோல்பாகத்தை, நறுக்கி அகற்றவும். உள் விதைகளையும் அகற்றி, விதைகளிருந்த பாகத்தையும் தனியாக வைக்கவும். காயின் சதைபாகத்தை,  கொப்பறைத் துருவல் துருவுவது போல துருவியில் துருவிக் கொள்ளவும். துருவல் தண்ணீர் விட்டுக்கொண்டுதான் இருக்கும். ஊறின பருப்பை கிரைண்டரில் போட்டு, சிறிது மட்டும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
மிளகாய்களை,ஊற வைத்து கிள்ளிப்போட்டு, சீரகத்தையும் சேர்த்து அரைக்கவும். மாவு அரைபட தண்ணீர் விடவேண்டும் என்று தோன்றும் போதெல்லாம்,பூசணித் துருவலைச் சேர்த்து அரைக்கவும். துருவலை இப்படியே சேர்த்து விடவும். தண்ணீர் அதிகமாகக் கூடாது. கெட்டியாக அரைத்தெடுத்து, உப்பையும்,சேர்த்து மேலும் சிறிது அரைத்து மாவை எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் வழித்தெடுத்து ஃபிரிட்ஜில் வைத்து விடவும். அதிகாலையில் வெயிலுக்கு முன்னர்,   பருமனான பாலிதீன் ஷீட்டில் சின்னஞ் சிறிய வடாமாக,அதாவது பகோடாக்கள் மாதிரி இடைவெளி விட்டு, ஈரக்கையினால் அதற்கு உருவம் கொடுக்கவும். மாவை ஒவ்வொரு முறையும் எடுக்கும்போது கையை ஈரமாக வைத்துக்கொண்டால் மாவைக் கிள்ளி இட ஸௌகரியமாக இருக்கும்.

P1030134

எதைக் கிள்ளுவது?  படத்தைப் பாருங்கள். பிரித்து இடுவதைத்தான் கிள்ளுவது என்று குறிப்பிட்டுள்ளேன். நன்றாகக்  காயும் போதே  வடாம்களைக் கையினால் திருப்பிப்போட்டு காயவைக்கவும். நன்றாக உலர்ந்து காயும்வரை வெய்யிலில் மறுநாளும்  வைக்கவும்.

P1030138
காற்றுப் புகாத சேமிப்பு டப்பாக்களில் சேமித்து வைக்கவும். அவ்வப்போது  வேண்டியதை எடுத்து,  எண்ணெயில் வறுத்து செய்யும் சமையலில் வேண்டியவைகளுடன் சேர்த்து, ருசிக்கவும். சின்ன அளவில் செய்வதற்கு, மிக்ஸியின் சின்ன  கண்டெய்னரில் பருப்பை அரைத்துச் செய்யலாம்.

P1030142

படிப்பதுடன் சரியா?  முயற்சியும் செய்யுங்கள். பார்க்கலாம். பருப்பை கரகர பதத்தில் கெட்டியாக  அரைத்தும் செய்யலாம்.

“சம்மர் ஸ்பெஷல் – பூசணிக்காய் கருவடாம்!” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.