செய்து பாருங்கள்

கைவினை கற்றால் ப்ளூவேல் தூரமாகும்; செய்து பாருங்கள் இதழை குழந்தைகளுக்கு பரிசளியுங்கள்!

கைவினை வேலைகளை செய்வது மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு செயல்பாடு.  நம் பாட்டி-தாத்தாக்கள் கூடை முடைந்தும் பாய் பின்னியும் சும்மா இருந்த மனதை ஒருமுகப்படுத்தினார்கள்; தங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான ஒரு பொருளை தாங்களே தயாரித்தார்கள். நாம் இப்போது தொழிற்நுட்பங்களின் துணையோடு வாழ்கிறோம். நாம் எதையும் உருவாக்க தேவையில்லை என நினைக்கிறோம். ஒவ்வொரு மனிதரும் தொழிற்நுட்பங்களோடு தனித்த உலகத்தில் வாழ ஆரம்பித்திருக்கிறோம். எதையாவது கற்றுக்கொள்ளவோ, முயற்சித்து பார்க்கும் குழந்தைகள் மனம், தொழிற்நுட்ப படுகுழிகளில் விழுந்துவிடுகிறது.  படி, படி என சதா அவர்களை நச்சரிக்கிறோம். விளையாடவோ, அவர்களுடைய பொழுதை பயனுள்ள வகையில் கழிக்கவோ சொல்லித் தந்திருக்கிறோமா? ஒரு பொருளை உருவாக்கிப் பார்க்கும் ஆவலைத் தூண்டியிருக்கிறோமா?

தொலைக்காட்சிகளின் முன் மணிக்கணக்காக அமர்ந்து தாங்களாகவே தேவையில்லாத மனசிக்கலை உருவாக்கிக்கொள்ளும் பெரியவர்களுக்காகவும் குழந்தைகளின் கற்பனைத் திறனை படைப்பாற்றலை தூண்டவும் நாங்கள் எடுத்திருக்கும் சிறு முயற்சி ‘செய்து பாருங்கள்’ இதழ்! கைவினைப் பொருட்கள் செய்முறைக்கெனவும் நல்லதொரு வாழ்வியலை அறிமுகப்படுத்தவும் தமிழில் வெளிவரும் முதல் இதழ் இது. இதோ ‘செய்து பாருங்கள்’ இரண்டாம் இதழாக ஜுலை-செப்டம்பர் இதழ் வெளியாகியிருக்கிறது. பளபள தாளின் முழுவண்ணத்தில் தயாராகியிருக்கிறது.

இந்த இதழில் என்னென்ன சிறப்பு?

ஜுவல்லரி மேக்கிங் சிறப்பிதழாக மலர்ந்துள்ள இந்த இதழில் டெரகோட்டா, சில்க் த்ரெட், ஃபேஷன் ஜுவல்லரி ஆகியவற்றின் அடிப்படைகளை சொல்லித்தந்திருக்கிறோம்.

அதோடு,

வரவேற்பறையை அலங்கரிக்க ஐந்துக்கு மேற்பட்ட கைவினைப் பொருட்களின் செய்முறையும் உண்டு!

குட்டீஸும் கிராஃப்ட் பக்கங்கள் இல்லையா என வருத்தப்பட்டவர்களின் குறையை போக்க, குட்டீஸுக்கு சிறப்பு பக்கங்களை ஒதுக்கி இருக்கிறோம். பர்த் டே பேனர், பர்த் டே கேப், பாம் பாம் பால்ஸ், ஒரிகாமி பறவைகள், ஐஸ் குச்சியில் டைனோசர் என அவர்கள் செய்து அசத்த ஐந்து கிராப்ட் உண்டு..

மேலும்,

சிறுதானிய உணவுகள் செய்முறையும் ஆர்கானிக் ஃபேஸ் பேக் செய்முறையும் உண்டு.

போனஸாக…

வீட்டில் உள்ளே பரவியிருக்கும் வேதியியல் பொருட்களை உறிஞ்சி தூய்மையான காற்றை வெளியிடும் செடிகள் எவை எவை? என்கிற சிறப்புக் கட்டுரையும் உண்டு.

64 பக்கங்களும் படித்து, செய்து பார்த்து,  பாதுகாக்க வேண்டியவை!

தனி இதழ் விலை ரூ. 60/

ஓர் ஆண்டு சந்தா ரூ. 240/ (நான்கு இதழ்கள்)

ஆன்லைனில் பணத்தை செலுத்துங்கள், உங்கள் வீட்டுக்கே இதழை அனுப்பி வைக்கிறோம்!

The Times Tamil Publishers
IFS code: IDIB000K071
Account no: 6537396985
Indian Bank
Kellys Branch
Account type: Current

Per issue cost RS. 60.
One year Subscription RS. 240 (4 issues)

mail your address to [email protected] (or) [email protected]

Advertisements

“கைவினை கற்றால் ப்ளூவேல் தூரமாகும்; செய்து பாருங்கள் இதழை குழந்தைகளுக்கு பரிசளியுங்கள்!” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.