அரசியல், சிறப்பு கட்டுரைகள்

இனத்துக்காக துடிக்கும் பாசம் இயற்கையை காப்பாற்றவும் துடிக்கட்டும்!

அமுதா சுரேஷ் சாதிவெறி, மதவெறியை அடுத்து இனவெறி, மொழி வெறித் தலைவிரித்தாடுகிறது! எதில் அரசியல் சேர்ந்தாலும் அதில் பாதிக்கப்படுவது அப்பாவிகளே, சில கன்னட வெறியர்கள் தமிழர்களைத் தாக்கினால், அதற்காக இங்கே இருக்கும் கன்னடர்களைத் தாக்குவதெல்லாம் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போலத்தான்! காதல் என்றால், ஒருவன் உள்ளே நுழைகிறான், சாதிப்பெயரில் காதலர்களைச் கொலை செய்கிறான், அவனைத் தூக்கி வைத்து அந்தச் சமூகம் கொண்டாடுகிறது, அவன் கொலையாளியில் இருந்து சாதிக் சங்க தலைவன் ஆகிறான், அப்படியே அவன் அரசியலில்… Continue reading இனத்துக்காக துடிக்கும் பாசம் இயற்கையை காப்பாற்றவும் துடிக்கட்டும்!

அரசியல், இந்தியா, குழந்தை வளர்ப்பு, சமூகம், பெண்

அனிருத், சிம்பு கைதுசெய்யப்படாமல் இருப்பதை ஆதரிக்கும் புதிய சட்டமசோதா ஏதாவது வருமா?

குட்டி ரேவதி இதனால், பதினாறு வயதிலேயே வயதுவந்தவர்கள் ஆகிறார்கள் ஆண்கள்! கொடிய குற்றங்களில் ஈடுபடும் சிறார்களுக்கான வயதுவரம்பு 18லிருந்து 16 வயதாகக் குறைக்கும் சிறார் சட்ட மசோதா மேலவையில் நிறைவேறியுள்ளதன் அர்த்தத்தை, அதிலும் ஓர் ஆண் குற்றவாளியை முன்வைத்து செய்யப்பட்டிருப்பதால் இன்னும் பல பின்னணிகளுடன் இணைத்து இதைப் புரிந்துகொள்ளவேண்டும். அறுபதுவயதிலும் விடலைத்தனம் தொலைக்காத, சிறார் மனநிலையில் பொதுவெளியில் இயங்கும் மேதாவி ஆண்களை எந்த வயதின் வரம்பில் வைப்பது? ஆண்களின் விடலைத்தனமான சிந்தனைகள், கருத்துகளாக ஒலிக்கும் ஊடகங்களை அண்ணாந்து பார்க்கும்… Continue reading அனிருத், சிம்பு கைதுசெய்யப்படாமல் இருப்பதை ஆதரிக்கும் புதிய சட்டமசோதா ஏதாவது வருமா?

அரசியல், தமிழ்நாடு

வெள்ளம் புகுந்த சென்னை தி.நகர் பகுதி: வீணான உணவுப் பொருட்கள்

சென்னை அடையாறு வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியதால் சென்னை தியாகராயர், சைதாப்பேட்டை பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.  வியாழக்கிழமை வெள்ளம் வடிந்த நிலையில், வெள்ளம் மூழ்கடித்ததால் தி.நகர் வியாபாரிகள் பலத்த பொருட்சேதத்தை சந்தித்தனர். ஒரு புறம் உணவுப் பொருட்கள் இன்றி மக்கள் தவித்து வரும் நிலையில், மற்றொரு புறம் வெள்ளத்தால் உணவுப் பொருட்கள் வீணாகியுள்ளன. https://youtu.be/aCpJ05Vl7sE

அரசியல், இந்தியா

யார் இந்த நிதிஷ்குமார்?

சுதந்திர போராட்ட வீரரின் மகனாகப் பிறந்த நிதிஷ்குமார், பொறியியல் பட்டம் படித்தவர். மின் துறை ஊழியராக இருந்த நிதிஷுக்கு அரசியல்தான் விருப்பத்துக்குரியதாக இருந்தது. அதனால் முழு நேர அரசியல்வாதி ஆனார். சமூகம் சார்ந்த அரசியலை முன்னெடுத்த ஜெய பிரகாஷ் நாராயணன், வி.பி.சிங் போன்றோரிடன் அரசியல் பாடம் படித்தார் நிதிஷ். 90களுக்குப் பிறகு, நிதிஷின் அரசியல் வாழ்க்கை வெளிச்சத்துக்கு வந்தது. 1998 ஆம் ஆண்டில் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த நிதிஷ் அறிமுகப்படுத்தியதே ரயில்வேயில் கணினி பயன்பாடு. வாஜ்பாயி… Continue reading யார் இந்த நிதிஷ்குமார்?

அரசியல், தமிழ்நாடு

மதுவிலக்குக் கேட்டுப் போராடிய மாணவர்களுக்கு அடி, உதை,சிறை தண்டனை!

காந்தியவாதி சசிபெருமாள் மறைவிற்குப் பிறகு, தன்னெழுச்சியாக தமிழகத்தின் பல இடங்களில் மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது மதுவிலக்கு கோரிக்கைக்கு பலத்தை சேர்த்திருக்கிறது. மாணவர்களின் போராட்டத்துக்கு உத்வேகத்தைத் தந்தது பச்சையப்பா கல்லூரி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியினரின் போராட்டமே. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, காவல்துறையினரால் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் இன்னமும் சிறையில் உள்ளார்கள். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர், அவர்களை சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறை, தங்கள் மீது… Continue reading மதுவிலக்குக் கேட்டுப் போராடிய மாணவர்களுக்கு அடி, உதை,சிறை தண்டனை!