இசை வெளியீடு, இசையமைப்பாளர், சினிமா

‘நீங்கள் ஏன் மேற்கத்திய கலாச்சாரத்தையே படமாக்குகிறீர்கள்’! காவியத்தலைவன் மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான்

சித்தார்த், ப்ருத்விராஜ், வேதிகா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘காவியத்தலைவன்'. இப்படத்தை வசந்தபாலன் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இந்த பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகர் சித்தார்த், நடிகைகள் வேதிகா, அனைகா, இயக்குநர் வசந்தபாலன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், எழுத்தாளர் ஜெயமோகன், பாடலாசிரியர் பா.விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் பேசிய வசந்தபாலன், ‘அங்காடித்தெரு' படம் முடிந்தபிறகு நானும் ஜெயமோகனும் நாடக வாழ்க்கை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, அவ்வை சண்முகி எழுதிய நாடக வாழ்க்கை என்ற புத்தகத்தை பற்றி ஜெயமோகன் என்னிடம் விளக்கிக்… Continue reading ‘நீங்கள் ஏன் மேற்கத்திய கலாச்சாரத்தையே படமாக்குகிறீர்கள்’! காவியத்தலைவன் மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான்

இசை வெளியீடு, இசையமைப்பாளர், சினிமா

சூர்யா இந்தியாவின் சூப்பர் ஸ்டார்!

சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக பலமான பேச்சு கிளம்பிக்கொண்டிருக்கிறது. குமுதம் வார இதழ் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என கருத்து கணிப்பு முடிவு ஒன்றை வெளியிட்டது. அதை ஒட்டி அஜித் ரசிகர்கள் அஜீத்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சமூக வலைதளங்களில் முழங்கினார்கள். நடிகை த்ரிஷா ஒரு விழாவில் பிடித்த நடிகர்கள் வரிசையில் அஜீத்தின் பெயரை முதலில் சொன்னதற்காக விஜய் ரசிகர்கள் அவர் மேல் கோபப்பட்டார்கள். இந்நிலையில் நேற்று நடந்த… Continue reading சூர்யா இந்தியாவின் சூப்பர் ஸ்டார்!

இசை கலைஞர்கள், இசை வெளியீடு, இசையமைப்பாளர், சினிமா

காசு கொடுத்து வாங்கினால் வாரம் ஒரு இசை தகடு வெளியிடுவேன்: இளையராஜா ஆசை

தன்னுடைய ரசிகர் மன்றங்களை இசைஞானி பேன்ஸ் கிளப் என்ற அமைப்பின் மூலம் இணைத்திருக்கிறார் திரை இசையமைப்பாளர் இளையராஜா. இந்த கிளப்பின் முதல் நிகழ்ச்சி தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. அதில் பேசிய இளையராஜா, ‘ரசிகர்களுடனான முதல் சந்திப்பை நான் இங்கு வைத்துகொண்டதுக்கு காரணம், எனது தாயார் மற்றும் மனைவியின் நினைவிடங்கள் இங்குதான் உள்ளன. ஆண்டுதோறும் எனது தாயார் இறந்த நாளில் மட்டும் இங்கு வருவேன். தாயாரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவேன். தற்போது ரசிகர்களான உங்களை சந்திக்க வந்துள்ளேன். இங்கு… Continue reading காசு கொடுத்து வாங்கினால் வாரம் ஒரு இசை தகடு வெளியிடுவேன்: இளையராஜா ஆசை

இசை வெளியீடு, இசையமைப்பாளர், சினிமா

தனுஷின் 25வது படம் வேலையில்லா பட்டதாரி: முதல் பார்வை

தனுஷ்,  அமலா பால் நடித்த வேலையில்லா பட்டதாரி, தனுஷ் நடிக்கும் 25 வது படம். ஒளிப்பதிவாளர் ஆர். வேல்ராஜ் படத்தை இயக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கிறார். சென்ற வாரம் படத்தின் இசை வெளியீடு நடந்தது. படத்துக்கு யூ சான்றிதழ் கிடைத்திருக்கும் நிலையில் ஜூலை 18ம் தேதி படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இசை வெளியீடு, இசையமைப்பாளர், சினிமா

‘வாங்க மக்கா வாங்க’ ஏ. ஆர். ரஹ்மானின் காவியத்தலைவன் பாடல் ஐட்யூனில் வெளியீடு

வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், ப்ருத்விராஜ், வேதிகா ஆகியோர் நடித்துக் கொண்டிருக்கும் காவியத்தலைவன் படத்துக்கு ஏ. ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அவர் இசையமைத்த ‘வாங்க மக்கா வாங்க’ என்ற ஒரு பாடல் மட்டும் ஐட்யூனில் வெளியிடப்பட்டிருக்கிறது. கவிஞர் நா.முத்துக்குமார் எழுதியுள்ள இந்தப் பாடலை ஹரிசரண் மற்றும் நாராயணன் பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடலுக்கு மறைந்த ரகுராம் மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார்.