இந்திய அம்மாக்கள், காது கேளாமையை கண்டறிதல், குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே, மருத்துவம்

குழந்தையின் காது கேளாமை குறையைக் கண்டுபிடிப்பது எப்படி?

செல்வ களஞ்சியமே - 46 ரஞ்சனி நாராயணன் குழந்தையின் பேச்சுத் திறனுக்கும், மொழித் திறமைக்கும் குழந்தை பிறந்த முதல் வருடம் மிக மிக முக்கியமானது. கேட்கும் திறன் என்பது குழந்தையின் சமூக வாழ்க்கைக்கும்,  அறிவார்ந்த வளர்ச்சிக்கும் மிக மிக அவசியம். இந்த திறன் பாதிக்கப்பட்டால் குழந்தையின் பேசும் திறனும், மொழித் திறனும் கூட பதிக்கப்படும். குழந்தைகள் பேசக் கற்றுக் கொள்வதும் தாய்தந்தையர் பேசுவதைக் கேட்டுத்தான். தாய் பாடும் தாலாட்டையோ, ஒரு நர்சரி ரைம்சையோ  கேட்க இயலாத குழந்தைகளுக்கு… Continue reading குழந்தையின் காது கேளாமை குறையைக் கண்டுபிடிப்பது எப்படி?

அழும் குழந்தையை சமாதானப்படுத்துவது எப்படி?, இந்திய அம்மாக்கள், குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான உணவு, செல்வ களஞ்சியமே

அப்பா செல்லமா? அம்மா செல்லமா?

செல்வ களஞ்சியமே – 40 ரஞ்சனி நாராயணன் ‘அப்பாவ பிடிக்குமா? அம்மாவ பிடிக்குமா?’ ‘நீ யார் செல்லம்? அப்பா செல்லமா? அம்மா செல்லமா?’ நம்மில் 99% பேர் ஒரு குழந்தையிடம் கேட்கும் கேட்கக்கூடாத பைத்தியக்காரத்தனமான கேள்விகள் இவை! குழந்தையை உருவாக்குவதிலிருந்து அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளாகி திருமணம் முடிக்கும் வரை இருவரின் கவனிப்பும் குழந்தைக்குத் தேவை. குழந்தையின் அறிவு, சாமார்த்தியம், ஆளுமை, உருவம், பேச்சு, நடவடிக்கை இவை எல்லாமே அப்பா, அம்மாவின் பாதிப்புடன்தான் இருக்கும்.  கருவிலிருக்கும் குழந்தை… Continue reading அப்பா செல்லமா? அம்மா செல்லமா?

இந்திய அம்மாக்கள், குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான உணவு, செல்வ களஞ்சியமே

ஒரு வயதுக் குழந்தைக்கு என்னென்ன சொல்லிக் கொடுக்கலாம்?

செல்வ களஞ்சியமே – 38 ரஞ்சனி நாராயணன் பூந்தளிர்’ என்ற வலைபதிவு எழுதிவரும் திருமதி தியானா தனது பதிவில் ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். ‘நான் வேலை செய்யும்போது யாராவது என்னைக் கண்காணித்தால் எனக்குப் பிடிக்காது; ஆனால் என் குழந்தை, தண்ணீர்  சிந்தியிருக்கிறது என்று சொன்னவுடன்  துணியை எடுத்துக் கொண்டுவந்து துடைப்பதைப் பார்த்த போது சந்தோஷமாக இருக்கிறது’ என்கிறார். இளம் குழந்தைகள் இருக்கும் அனைவருமே படிக்க வேண்டிய குழந்தைகள் பற்றிய பதிவுகளை எழுதுகிறார் இவர். குழந்தைகளின் கற்பனைத்திறனை எப்படியெல்லாம்… Continue reading ஒரு வயதுக் குழந்தைக்கு என்னென்ன சொல்லிக் கொடுக்கலாம்?

அலுவலகம் செல்லும் பெண்கள், அழும் குழந்தையை சமாதானப்படுத்துவது எப்படி?, இந்திய அம்மாக்கள், குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான உணவு, குழந்தைகளுக்கு சொல்லித்தர, குழந்தையின் தூக்கம், சமையல், செல்வ களஞ்சியமே

அடுத்தவர் வீட்டில் சாப்பிடும் குழந்தை நம் வீட்டில் ஏன் சாப்பிட மறுக்கிறது?

செல்வ களஞ்சியமே – 37 ரஞ்சனி நாராயணன் ஒவ்வொரு விளையாட்டிற்கும் உடம்பு படுத்தும் என்று நாம் சொல்வதை அப்படியே மறுக்கிறார் டாக்டர் ஸ்பாக். குழந்தை மெள்ள மெள்ள வளர்ந்து விளையாட்டுகள் அதிகமாகிறது; வீடு முழுவதும் சுற்றிச்சுற்றி வருகிறது. தொட்டுப் பார்த்தும், வாயால் கடித்துப் பார்த்தும் பொருள்களை அறிந்து கொள்ளுகிறது குழந்தை. அதனால் குழந்தையின் கைகள் அழுக்காகின்றன. அப்படியே உணவுப் பொருட்களைத் தொடும்போது நோய் தொற்றுகள் குழந்தையின் வயிற்றினுள் போகின்றன. இந்தத் தொற்றுகளின் விளைவாகவே குழந்தைக்கு உடல்நலம் குன்றுகிறது… Continue reading அடுத்தவர் வீட்டில் சாப்பிடும் குழந்தை நம் வீட்டில் ஏன் சாப்பிட மறுக்கிறது?

இந்திய அம்மாக்கள், குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான உணவு, செல்வ களஞ்சியமே

பச்சிளம் குழந்தைகளுக்கான மாற்று உணவுகள்!

செல்வ களஞ்சியமே – 32 ஆறு மாதம் வரை குழந்தைக்கு முழுக்க முழுக்க  தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். வேலைக்கு போகும் தாய்மார்களால் இது சாத்தியப்படாது. அதனால் நீங்கள் வேலைக்குப் போக ஆரம்பிக்கும் முன் ஒரு பதினைந்து நாட்கள் முன்னதாகவே ஏதாவது ஒரு வேளை தாய்ப்பாலுக்கு பதில் வேறு உணவை குழந்தைக்கு அறிமுகப்படுத்துங்கள். அப்போதுதான் புது உணவு குழந்தைக்கு சரிபட்டு வருகிறதா என்று தெரிந்து கொள்ள முடியும். அது பவுடர் பாலாகவோ அல்லது வெளியில்… Continue reading பச்சிளம் குழந்தைகளுக்கான மாற்று உணவுகள்!