இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா

இந்த வார ரிலீஸ் படங்கள்

இந்த வாரம் தெனாலிராமன், டமால் டுமீல் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின்றன.   கிட்டத்தட்ட இரண்டு  ஆண்டுகளாக படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் நடிகர் வடிவேலு நடித்து வெளிவந்திருக்கும் படம்தெனாலிராமன் . பெரும் பொருட்செலவில் நகைச்சுவை கலந்த சரித்திரப் படமாக தயாராகியிருக்கும் இந்தப் படத்தை யுவராஜ் தயாளன் இயக்கியிருக்கிறார். வைபவ், முதன்மையான கதாபாத்திரத்திரத்தில் நடித்திருக்கும் படம் டமால் டுமீல். நாயகியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார். சார்லி, ஷயாஜி ஷிண்டே, கோட்டா ஸ்ரீனிவாசராவ் நடித்துள்ள இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் ஸ்ரீ. இசை தமன்.

இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா

இந்த வார ரிலீஸ் படங்கள்

இந்த வாரம் (நாளை 11-04-2014) நான் சிகப்பு மனிதன், ஆண்டவா காப்பாத்து, காந்தர்வன் ஆகிய படங்கள் வெளியாகின்றன. காத்தவராயன் படத்தின் இயக்கநர் சலங்கை துரை இயக்கத்தில் வெளிவரும் அடுத்த படம் காந்தர்வன். படத்தில் கதிர், ஹனிரோஸ், கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். எதிர்பாராத கிளைமேக்ஸ் கொண்ட காதல் கதை என்கிற படத்தின் இயக்குநர் துரை. பாண்டியநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு, தன் மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ள விஷால் எதிர்பார்ப்போடு இருக்கும் படம் நான் சிகப்பு மனிதன். இயக்குநர்… Continue reading இந்த வார ரிலீஸ் படங்கள்

இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா

இந்த வார ரிலீஸ் படங்கள்!

இந்த வாரம் மான் கராத்தே, ஒரு கன்னியும் மூன்று களவானிகளும், கூட்டம் ஆகிய மூன்று படங்கள் வெளியாகின்றன. ஹிட் ஹீரோவாக கோலிவுட்டில் வலம்வரும் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவரும் படம் மான் கராத்தே. அனிருத்தின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்ட நிலையில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு கூடியுள்ளது. படத்தின் நாயகியாக ஹன்சிகா. படத்தை இயக்கியிருக்கிறார் கே. திருக்குமரன். சிம்புதேவன் இயக்கத்தில் வெளிவரும் ஒரு கன்னியும் மூன்று களவானிகளும் படத்தில் அருள்நிதி, பிந்துமாதவி, அர்ஷிதா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். காமெடிக்கு முக்கியத்துவம்… Continue reading இந்த வார ரிலீஸ் படங்கள்!

இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா

இந்த வார ரிலீஸ் படங்கள்!

இந்த வாரம் (28-02-2014) பனிவிழும் மலர்வனம், அமரா, வல்லினம், தெகிடி என நான்கு படங்கள் வெளியாகின்றன. காட்டுக்குள் சுற்றுலாவுக்காக செல்லும் ஒரு குடும்பம், புலியின் பார்வையில் படுகிறது. அந்தப் புலியிடமிருந்து அந்தக் குடும்பம் எப்படி தப்பிக்கிறது என்பதை பனிவிழும் மலர்வனம் படம் சொல்கிறது. இந்தப் படத்தில் ஹாலிவுட் படங்களில் நடித்த புலி நடித்திருக்கிறது. அமரா ஆக்ஷன் திரில்லர் படம். டி. இமான் இசையில் பாடல் சில இனிக்கின்றன. நடிகர் நகுல் திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்பும் படம்… Continue reading இந்த வார ரிலீஸ் படங்கள்!

இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா

இந்த வார ரிலீஸ் படங்கள்

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் ஃபிலிம் முதன்முறையாக ஆஹா கல்யாணம் படத்தின் மூலம் தென்னிந்திய பட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. நானி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது. சசிகுமார் நடிக்கும் பிரம்மன் படத்தை இயக்கியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசனிடம் உதவியாளராக பணியாற்றிய சாக்ரடீஸ். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியிருப்பது படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.