காமாட்சி, காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

அறுசுவை உணவையும் சமைக்க ஏற்ற காய்!

காய்கறிகளின் வரலாறு –  14 செளசெள பெங்களூர் கத்தரிக்காய் என்று பரவலாக அழைக்கப்படும் செளசெளவின் பூர்விகம் மத்திய அமெரிக்கா. லத்தீன் அமெரிக்க மக்களின் விருப்பமான காய்கறியான இதன் சுவையை ரசித்த ஐரோப்பியர்கள் மற்ற நாடுகளில் பரப்பினர். இந்தியாவிலும் அவர்கள் மூலமாகவே அறிமுகமானது. குறிப்பிட்டு சொல்ல முடியாத இந்தக் காயில் இனிப்பு, காரம், புளிப்பு என வெவ்வேறு சுவையுள்ள சமையலை உருவாக்க முடியும். அதனால்தான் இந்தக் காய் அறிமுகமான எல்லா நாடுகளிலும் விரும்பப்படுகிறது. கொடி வகையைச் சேர்ந்த செடியான இது,… Continue reading அறுசுவை உணவையும் சமைக்க ஏற்ற காய்!

காமாட்சி, குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல்

கோதுமை மாவு பூரி

ருசி காமாட்சி மகாலிங்கம் பூரி என்று சொன்னால் போதாதா?  அதென்ன கோதுமை மாவு என்று  தனிப்பட்ட  வரிசை! பூரி என்றால் மைதாவில் செய்த பூரிக்குத்தான் சாப்பிட முதலிடம் கொடுப்போம்.தனி கோதுமைமாவில் செய்த பூரிகள் அதிகம் எண்ணெய் குடிக்காது. ஆறின பிறகு சாப்பிட்டால் கூட பரவாயில்லை. ருசியாக இருக்கும். வெளியிடங்களுக்குப் போகையில் கையில் ஏதாவது சாப்பாட்டு ஐட்டம், எளிதில் கெட்டுப் போகாததாக ஒன்று இருப்பது உசிதம். அதற்கு இந்தப்பூரி நல்லது. முன்பெல்லாம் கோதுமைப் பண்டங்கள் நமக்கு அரிது. இக்காலம்… Continue reading கோதுமை மாவு பூரி

காமாட்சி, குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல்

ஜவ்வரிசி கிச்சடி ரெசிபியுடன் விடியோ பதிவு

http://youtu.be/MAlc5JbzRKI எளிய சமையல் காமாட்சி மகாலிங்கம் இதை நான் அடிக்கடி செய்வதுண்டு. பெரியவர்கள் சாப்பிடவும், ஸ்கூல் போகும் வயதுடையவர்களுக்கு, லன்ச் எடுத்துப் போகவும். ஸவுகரியமானது.இதை விரதங்கள் போது அதிகம் செய்வதால் வெங்காயம் சேர்ப்பதில்லை. சற்றுப் புது மாதிரியாக நமக்கு இருக்கும். வடஇந்தியாவில் இது அதிகமாகச் செய்கிறார்கள். இதில் ஸாபுதானா வடை என்றும் செய்கிறார்கள். ஜவ்வரிசியின் ஹிந்திபெயர் ஸாபுதானா. இது பொங்கல்போல சற்றுச் சேர்ந்தாற்போல இருக்கும். நாம் செய்முறையைப் பார்க்கலாம். முதலில் வேண்டிய பொருட்கள்: ஜவ்வரிசி பெரிய வகை… Continue reading ஜவ்வரிசி கிச்சடி ரெசிபியுடன் விடியோ பதிவு

காமாட்சி, காய்கறி சமையல், சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல்

மெந்திக்குழம்பில் பச்சை சுண்டையும் பலாக்கொட்டையும்

ருசி காமாட்சி மகாலிங்கம் தீபாவளியெல்லாம் ஆகி பட்சணம் பலகாரம் எல்லாம் சாப்பிட்டு, விருந்துகள் உண்டு,  ஏதாவதொன்று சமைத்து சிம்பிளாக ருசியாக சாப்பிடுவோம் என்று தோன்றுகிறதா,  எனக்கு அப்படி தோன்றியது. எனக்கு பச்சை சுண்டைக்காய் கிடைத்தது. பலாக்கொட்டை இருந்தது. வற்றல்  போட்டுச் செய்வதைவிட  இந்தப் பச்சை சுண்டைக்காய்க் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும். நாட்டுப் புறங்களில் இந்தச்செடி தானாகவேகூட முளைத்துக் காய்க்கும். பெங்களூரிலிருந்து சென்னை வரும்போது குப்பம் என்ற இடத்தில் ஒரு நிமிஷம் ரயில் நிற்கும்.  சென்னையினின்றும் போகும்… Continue reading மெந்திக்குழம்பில் பச்சை சுண்டையும் பலாக்கொட்டையும்

காமாட்சி, சமையல், செய்து பாருங்கள்

ருசிமிக்க மிளகுக் குழம்பு!

ருசி காமாட்சி மகாலிங்கம் நிறைய குழம்பு வகைகள் எல்லோரும் சாப்பிட்டிருப்பீர்கள். சாதாரணமாக காரத்திற்கு அதிகம் மிளகாய்தான் சேர்ப்பார்கள். வாசனைக்காக சிறிது மிளகு சேர்ப்போம். ஆனால் இந்தக் குழம்பு  மிளகு காரத்தை மட்டும் சேர்த்து, விசேஷமாக நான் தயாரிப்பது உண்டு. நீங்கள் மட்டும்தானா?  நாங்களும் தயாரிப்பது உண்டு என்றுதானே சொல்வீர்கள்.  பரவாயில்லை,  இது வெங்காயமும், பூண்டும் சேர்த்துச் செய்தேன்.   மிளகுக் குழம்பு என்றால்  பத்தியச் சாப்பாடுதான் ஞாபகம் வரும். வாயிற்கும் ருசியைக் கொடுக்கும். வயிற்றிற்கும் நல்லது. என்ன கொஞ்சம்… Continue reading ருசிமிக்க மிளகுக் குழம்பு!