குழந்தை இலக்கியம், குழந்தை கவிஞர், குழந்தை வளர்ப்பு

அழ. வள்ளியப்பாவின் அணில் பாட்டு!

அழ. வள்ளியப்பாவின் குழந்தைப் பாடல்கள் அணில் பாட்டு அணிலே அணிலே ஓடிவா அழகு அணிலே ஓடிவா கொய்யா மரம் ஏறிவா குண்டுப் பழம் கொண்டு வா பாதிப் பழம் உன்னிடம் பாதிப் பழம் என்னிடம் கூடிக் கூடி இருவரும் கொறித்துக் கொறித்துத் தின்னலாம்

கவிஞர் அழ. வள்ளியப்பா, குழந்தை கவிஞர், குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான எழுத்தாளர், குழந்தைகளுக்கு சொல்லித்தர, குழந்தைகள் தினம்

குழந்தைகள் தினம் – அழ.வள்ளியப்பாவின் மாம்பழ பாடல்

குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா இயற்றி, புகழ்பெற்ற மாம்பழ பாடல் இதோ.... மாம்பழம் மாம்பழமாம் மாம்பழம். மல்கோவா மாம்பழம். சேலத்து மாம்பழம். தித்திக்கும் மாம்பழம் அழகான மாம்பழம். அல்வாபோல் மாம்பழம். தங்கநிற மாம்பழம் உங்களுக்கும் வேண்டுமா? இங்கேஓடி வாருங்கள்; பங்குபோட்டுத் தின்னலாம்.

கவிஞர் அழ. வள்ளியப்பா, குழந்தை கவிஞர், நவீன ஆத்திசூடி

நவீன ஆத்திசூடி அழகிய உருவாக்கத்தில்…

‘அம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா தா’ என மழலைகளாக தமிழ் மொழியின் அரிச்சுவடை படிக்க ஆரம்பித்திருப்போம். எளிமையான மொழியில் குழந்தைகளுக்கு புரியும்படி எழுதுவதில் குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பாவுக்கு நிகரில்லை. கவிஞர் அழ. வள்ளியப்பா இயற்றிய ‘நவீன ஆத்திசூடி’யை உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குச் சொல்லித்தர இங்கே அழகான வடிவத்தை உருவாக்கியிருக்கிறோம். இதை அச்சிட்டு, உங்கள் வீட்டில் வைத்து குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். டவுன்லோடு செய்ய இதோ இந்த Modern Aathichudi இணைப்பை அழுத்துங்கள்.… Continue reading நவீன ஆத்திசூடி அழகிய உருவாக்கத்தில்…