அரசியல், இந்தியா, குழந்தை வளர்ப்பு, சமூகம், பெண்

அனிருத், சிம்பு கைதுசெய்யப்படாமல் இருப்பதை ஆதரிக்கும் புதிய சட்டமசோதா ஏதாவது வருமா?

குட்டி ரேவதி இதனால், பதினாறு வயதிலேயே வயதுவந்தவர்கள் ஆகிறார்கள் ஆண்கள்! கொடிய குற்றங்களில் ஈடுபடும் சிறார்களுக்கான வயதுவரம்பு 18லிருந்து 16 வயதாகக் குறைக்கும் சிறார் சட்ட மசோதா மேலவையில் நிறைவேறியுள்ளதன் அர்த்தத்தை, அதிலும் ஓர் ஆண் குற்றவாளியை முன்வைத்து செய்யப்பட்டிருப்பதால் இன்னும் பல பின்னணிகளுடன் இணைத்து இதைப் புரிந்துகொள்ளவேண்டும். அறுபதுவயதிலும் விடலைத்தனம் தொலைக்காத, சிறார் மனநிலையில் பொதுவெளியில் இயங்கும் மேதாவி ஆண்களை எந்த வயதின் வரம்பில் வைப்பது? ஆண்களின் விடலைத்தனமான சிந்தனைகள், கருத்துகளாக ஒலிக்கும் ஊடகங்களை அண்ணாந்து பார்க்கும்… Continue reading அனிருத், சிம்பு கைதுசெய்யப்படாமல் இருப்பதை ஆதரிக்கும் புதிய சட்டமசோதா ஏதாவது வருமா?

சமூகம், பெண்

குடியில் வீழ்ந்த கணவன்; குடும்பத்தைக் காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் மனைவி!

சென்னை பெரியமேட்டில் இருந்து புரசைவாக்கம் செல்வதற்காக சாலையில் நின்றிருந்தோம். அப்போது அருகில் இருந்த டீக்கடையில் ஒரு பெண்மணி, அவசர அவசரமாக டீயை குடித்துக் கொண்டிருந்தார். நின்றிருந்த ஆட்டோ யாருடையது என்று கேட்பதற்குள், ஆட்டோவில் உட்கார்ந்து, காக்கி சட்டையை மாற்றியதும்தான் தெரியும். அந்த பெண்மணி ஆட்டோ ஓட்டுனர் என்று. அவர் பெயர் உமா மகேஸ்வரி. இதோ அவர் ஆட்டோ ஓட்ட வந்த காரணத்தை கேளுங்கள்... "வழக்கம்போல குடிதான் சார்.... என் வூட்டுகாரு டெய்லி குடிச்சுட்டு குடிச்சுட்டு வருவான். வேலைக்கும்… Continue reading குடியில் வீழ்ந்த கணவன்; குடும்பத்தைக் காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் மனைவி!

சமூகம், பெண்ணியம்

பெண்ணின் சுயமரியாதையை மீட்ட பெரியார்!

ஜோதிமணி என்னைப் போன்ற பெண்களும் ,தமிழ்சமூகமும் பெரியாருக்குப் பட்டிருக்கின்ற நன்றிக்கடன் காலத்தால் தீர்க்க முடியாதது. அந்த சுயமரியாதைச் சூரியன் சுட்டெரித்த மூடநம்பிக்கைகள் அடுத்த நூற்றாண்டுக்கு தமிழகத்தை சென்ற நூற்றாண்டிலேயே அழைத்துச் சென்று விட்டது. இப்பொழுதும் கூட பெண்களும் , சமூகமும் சிந்திக்கத் துணியாத கருத்துக்களை இந்தக் கிழவர் நூற்றாண்டுக்கு முன்பு எப்படி சிந்தித்து பிரச்சாரம் செய்தார் என்று நினைத்து ஆச்சர்யப்படாமல் இருக்க முடிவதில்லை. அவர் ஒரு புரட்சியாளர். பெண்ணடிமை , சாதிய ஒடுக்குமுறை , மூடநம்பிக்கைகளுக்கு எதிராக… Continue reading பெண்ணின் சுயமரியாதையை மீட்ட பெரியார்!

சமூகம், தமிழ்நாடு, மழை நிலவரம்

இன்றும் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அருகே வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டிருப்பதால், சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உதகை மலை ரயில் இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கன… Continue reading இன்றும் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்தியா, உலகம், சமூகம்

இந்திய காவல்துறை பெண் அதிகாரிக்கு ஐ.நா.வின் அமைதிக் காப்பாளர் விருது

ஐ.நா.வின் சர்வதேச பெண்கள் காவல்துறையின் அமைதிக் காப்பாளர் விருது இந்திய காவல்துறை பெண் அதிகாரி சக்தி தேவிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐ.நாவின் அமைதிப் பணியில் இணைந்து பணியாற்றி வரும் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் சக்தி தேவி. இவர் தற்போது ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வருகிறார். ஆப்கானிஸ்தானில் நடந்த வன்முறைகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதில் தலைசிறந்த பணியை ஆற்றியதற்காக சக்தி தேவிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.