இன்றைய முதன்மை செய்திகள், சர்ச்சை

கணவன்-மனைவி சண்டை இல்லை : மனம் திறக்கும் தாமரை

கவிஞர் தாமரை ' தமிழை நேசித்தேன் தெருவுக்கு வந்து விட்டேன் , தமிழ் உணர்வாளர்களே சம்மதம் தானா ? ' என்ற என் பதாகையில் முதல் இரண்டு வரிகள்தாம் கண்ணுக்குத் தெரிந்ததா ? மூன்றாம் வரிக்கு ஒருவர் கண்ணும் போகவேயில்லையா ?.. தமிழ்ப் பற்றுக் கொண்டவர்கள் பதைபதைத்திருக்க வேண்டாமா ?. தமிழ்ப்பற்றுக் கொண்ட ஒரு பெண் , ஊரறிந்த தமிழ்க்கவிஞர் எவ்வளவு மனம் புண்பட்டிருந்தால் இப்படிச் சொல்லித் தெருவில் அமர்ந்திருப்பார் ? என்று ஒரு கணம் யோசித்திருக்க… Continue reading கணவன்-மனைவி சண்டை இல்லை : மனம் திறக்கும் தாமரை

அரசியல், இந்தியா, சர்ச்சை

கிரண் பேடியை விட ஷாஜியா இல்மியை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியிருக்கலாம்: மார்க்கண்டே கட்ஜூ

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்தவர் ஷாஜியா இல்மி. இவரையும், டெல்லி பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண் பேடியையும் ஒப்பிட்டு, முன்னாள் பத்திரிகை கவுன்சில் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான மார்க்கண்டே கட்ஜூ தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்,  டெல்லி பாஜக முதல்வர் வேட்பாளரான கிரண் பேடியை விட அழகாக உள்ளார். ஆகையால் கிரண்பேடிக்கு  பதிலாக ஷாஜியா இல்மி நிறுத்தப்பட்டால் பாஜக வெற்றி பெறுவது உறுதி என்று… Continue reading கிரண் பேடியை விட ஷாஜியா இல்மியை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியிருக்கலாம்: மார்க்கண்டே கட்ஜூ

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், சர்ச்சை

குடியரசு தினவிழா சர்ச்சைகள்!

தமிழக அரசு நேற்று கொண்டாடிய குடியரசு தினவிழாவில் தமிழகத்தின் பல்வேறு நலத்திட்டங்களை பறைசாற்றும்விதமாக வாகன அணிவகுப்பு நடைபெற்றது. அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படங்கள் இடம்பெற்றது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து, 'குடியரசு தினவிழா அணிவகுப்பில் ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் உருவப்படங்கள் இடம் பெற்றது அவமானகரமானது; இந்தியாவுக்கு இழுக்கு என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேபோல் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் கிரண்பேடி,… Continue reading குடியரசு தினவிழா சர்ச்சைகள்!

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், சர்ச்சை, தமிழ்நாடு

த மு எ க ச தொடர்ந்த வழக்கில் பெருமாள் முருகனையும் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு

 'மாதொருபாகன்' நாவல் விவகாரத்தில் அமைதிக் குழு கூட்டத்தின் முடிவை எதிர்த்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தலைவர் ச.தமிழ் செல்வன்  தொடர்ந்த  வழக்கில் எழுத்தாளர் பெருமாள் முருகனையும் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சுந்தரேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவே அமைதிக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.… Continue reading த மு எ க ச தொடர்ந்த வழக்கில் பெருமாள் முருகனையும் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு

இன்றைய முதன்மை செய்திகள், சர்ச்சை, தமிழ்நாடு

மாதொருபாகன் சர்ச்சை: வருவாய் அலுவலர் நடத்திய பேச்சுவார்த்தை முடிவை ரத்து செய்யக் கோரி வழக்கு

மாதொருபாகன் நூலாசிரியர் பெருமாள் முருகனை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வைத்து வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் தமிழில் எண்ணற்ற கதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். கடந்த 2010-ஆம் ஆண்டு மாதொருபாகன் என்ற நாவலை… Continue reading மாதொருபாகன் சர்ச்சை: வருவாய் அலுவலர் நடத்திய பேச்சுவார்த்தை முடிவை ரத்து செய்யக் கோரி வழக்கு