சுற்றுச்சூழல்

‘நுணா மலர்ந்துவிட்டது; அவர் இன்னும் வரவில்லை!’

ஞா. கலையரசி வண்டியிழுக்கும் மாடுகளின் கழுத்து பாரத்தைக் குறைக்க நம் முன்னோர் தேர்ந்தெடுத்த மரமிது! தமிழகமெங்கும் பரவலாகக் காணப்படும் நுணா மரத்தின் அறிவியல் பெயர் Morinda tinctoria. இதன் தாவரக்குடும்பம் Rubiaceae. இதன் தாயகம் தெற்காசியாவென்பதால், நம்நாட்டு வெப்பத்தையும், வறட்சியையும் தாங்கி, கவனிப்பு தேவையின்றித் தானாகவே செழித்து வளரும் மரம். முற்றிய இதன் தண்டுப்பகுதி மஞ்சளாக இருப்பதால், இதற்கு மஞ்சணத்தி என்ற பெயரும் உண்டு. மஞ்சள் நீராட்டி என்றும் அழைப்பார்களாம். உறுதியான அதேசமயம் மிகவும் லேசான மரமென்பதால்… Continue reading ‘நுணா மலர்ந்துவிட்டது; அவர் இன்னும் வரவில்லை!’

சுற்றுச்சூழல்

சீமைக்கருவேல மரங்கள் ஏன் கூடாது?

ஞா.கலையரசி தமிழகம் முழுக்க சாலையின் இருபக்கங்களிலும் கண்ணுக்கெட்டிய தூரம் விளைநிலம் மற்றும் கால்வாய்களை ஆக்கிரமித்துப் பரவிக்கிடக்கும் மரத்தின் பெயர் சீமைக்கருவேலம்.  இதற்குக் காட்டுக் கருவை, வேலிக்காத்தான், டெல்லி முள் என்ற பெயர்களும் உண்டு. நம் மண்ணைத் தாயகமாகக் கொண்ட கருவேல மரத்துடன் இதனைக் குழப்பிக்கொள்ளக் கூடாது. அதன் தாவரப் பெயர் அகசியா நிலோடிகா(Acacia Nilotica). மெக்சிகோ மற்றும் தென் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இதன் பெயர், ப்ரோசொபிஸ் ஜூலிபிளோரா (Prosopis Juliflora). . பார்த்தீனியத்தைப் போல இதன்… Continue reading சீமைக்கருவேல மரங்கள் ஏன் கூடாது?

சுற்றுச்சூழல்

கழுத்தறுக்கும் சீனாவின் மாஞ்சா!

ஞா. கலையரசி இந்தியா முழுமையும் பொங்கல், சங்கராந்தி, குடியரசு தினம் போன்ற நாட்களில் பட்டம் விடுவது பாரம்பரியமான விளையாட்டு.  சிறுவர் முதல் பெரியவர் வரை வித விதமான உருவங்களில் வண்ணமயமான  பட்டங்களை வானில் பறக்கவிட்டு, ரசித்து மகிழ்ந்த காலம் மலையேறி, இன்றைக்குப் பட்டம் பறக்க விடுதல் என்பது, மற்றவரின் பட்டத்தை அறுத்து விடுதல் என்ற சண்டையாக மாறியிருக்கிறது.  மற்றவரின் துன்பத்தில், இன்பங் காணும் மனநிலை பெருகியிருக்கிறது! மற்றவர்களின் பட்டத்தைப் பாதியில் அறுத்து விட்டுத் தன்னுடையதை மட்டும், உயரே… Continue reading கழுத்தறுக்கும் சீனாவின் மாஞ்சா!

சுற்றுச்சூழல், நூல் அறிமுகம்

‘‘புலியின் மாமிசத்தைச் சாப்பிட்டால் ஆண்மை பெருகும் என்கிறார்களே?’’

நூல் அறிமுகம் ஞா. கலையரசி உலகிலேயே மக்கள் தொகையில் விஞ்சி நிற்கும், இந்தியாவுக்கு இன்னுமெதற்கு ஆண்மை? பல்லுயிரியம் – (BIO DIVERSITY) ஆசிரியர் :- ச.முகமது அலி வெளியீடு:-  வாசல், 40D/3, முதல் தெரு , வசந்த நகர், மதுரை – 625003. முதற்பதிப்பு:- மே 2010 இரண்டாவது பதிப்பு:- ஏப்ரல் 2013 விலை ரூ.140/-. இயற்கையின் மீது அளவிலா நேசமும், அக்கறையும் கொண்ட  ச.முகமது அலி, காட்டுயிர் துறையில் தமிழகத்தின்  முதன்மையான எழுத்தாளரும், முக்கிய ஆளுமையும்… Continue reading ‘‘புலியின் மாமிசத்தைச் சாப்பிட்டால் ஆண்மை பெருகும் என்கிறார்களே?’’

அனுபவம், சுற்றுச்சூழல், மருத்துவம்

மாகி நூடுல்ஸில் மட்டும் தான் காரீய நச்சு இருக்கிறதா?

ஞா. கலையரசி வர்ணம் பூசப்பட்ட 2 கிலோ எடையுள்ள ஒரு சாமி பொம்மை எட்டிலிருந்து பத்து கிராம் காரீயத்தை நீரில் கலக்கிறது பிரபல நெஸ்லே தயாரிப்பான மாகி நூடுல்ஸில் காரீயம் (Lead) உட்பட வேதிப்பொருட்கள் பல அதிகளவில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக, இந்தியாவின் பல மாநிலங்களில், இதன் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது யாவரும் அறிந்ததே. நூடுல்ஸில் மட்டுமின்றி, நான்கு சக்கர வாகனங்கள் வெளியிடும் காரீயம் கலந்த பெட்ரோல் புகை, தொழிற்சாலைகள் வெளியேற்றும் நச்சுப்புகை, எனாமல் சுவர் வண்ணங்கள்,… Continue reading மாகி நூடுல்ஸில் மட்டும் தான் காரீய நச்சு இருக்கிறதா?