நிதி ஆலோசனை - வீட்டுக்கடன் நிதி ஆலோசகர் காயத்ரி நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பலரும் வீட்டை தங்களது ஐம்பதாவது வயதில்தான் கட்டினார்கள். ஆனால், இன்றோ இருபது வயதிலேயே வீடு வாங்குவது சகஜமாகிவிட்டது. அன்று பணத்தைச் சேர் த்து வைத்து வீடு கட்டினார்கள். இன்று வீட்டை கடனில் வாங்கி விட்டு, கடைசிக் காலம் வரை இ.எம்.ஐ-ஆக திரும்பச் செலுத்துகிறார்கள்! எதற்கெடுத்தாலும் ஈஸியாக கடன் கிடைப்பது நல்லதுதான். அப்படி கிடைக்கும்போது அதை நாம் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டாமா? தனிநபர் ஒருவர்… Continue reading வீட்டுக்கடன் பெற வங்கிகளை அணுகுவது எப்படி?
Category: சேமிப்பு
ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு அதிக வட்டி தரும் அரசு நிறுவனம்!
சேமிப்பு வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட்டு (நிரந்தர வைப்பீடு)க்கு அதிகபட்சம் 9.5% வட்டி தரப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் ஒரு வருடத்திற்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு 9 %வட்டியும் ஒரு வருடத்திலிருந்து 24 மாதங்களுக்குள் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு 10 % வட்டியும் அளிக்கிறது. இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட வைப்புகளுக்கு 10.50 சதவிகித வட்டியை அளிக்கிறது. அதோடு நகைக்கடனை 13. 50 %க்கும் அடமான கடனை 14 % வட்டியிலும் தருகிறது. மேலதிக தகவல்களுக்கு தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி… Continue reading ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு அதிக வட்டி தரும் அரசு நிறுவனம்!
டெபாசிட்டுகளுக்கு அதிகபட்ச வட்டி!
சேமிப்பு- நிதி திட்டமிடல் பாதுகாப்புக்குரிய முதலீடாக மக்களால் என்றும் நம்பிக்கைக்குரியவை வங்கிகள் வழங்கும் டெபாசிட் திட்டங்கள். வட்டி அதிகபட்சம்(300 நாட்களுக்கு மேல்) 9 சதவீதமே கிடைத்தாலும் இதில் சேமிப்பதை விரும்புகிறார்கள். இதில் சில வங்கிகள் ஒருசில சதவிகிதம் அதிக வட்டியைத் தருவதுண்டு. மத்திய அரசின் கீழ் இயங்கும் வங்கியான யூகோ பேங்க் வைப்பு நிதிக்கு (டெபாசிட்) குறைந்தபட்சம் 200 நாட்களுக்கு 9.05 % வட்டியை அறிவித்திருக்கிறது. குறைந்தபட்ச தொகை ரூ.5000 அதிகபட்ச வரம்பு ரூ. 5 கோடி. குறுகிய காலத்துக்கு மட்டுமே… Continue reading டெபாசிட்டுகளுக்கு அதிகபட்ச வட்டி!
வீட்டுத்தோட்டம் – மிளகாய்ச் செடி வளர்ப்பு
வீட்டுத்தோட்டம் - மிளகாய்ச் செடி வளர்ப்பு மிளகாய் தேவை இல்லாத சமையலே இல்லை எனலாம். சமையலுக்கு ஒன்றிரண்டு மிளகாய்கள் தான் தேவையாக இருக்கும். அந்தத் தேவையை நாமே நம் வீட்டில் மிளகாய்ச் செடி வளர்ப்பதன் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும். இனி தோட்ட வேலையை கவனிப்போமா? என்னென்ன தேவை? தொட்டிகளில் வளர்க்க: மண் தொட்டி (அ) சிமெண்ட் தொட்டி, இயற்கை உரமும் மண்ணும் கலந்த கலவை, மிளகாய் விதைகள் நிலத்தில் வைக்கும் முன் நிலத்தை கொத்தி சீர் செய்ய வேண்டும். பிறகு இயற்கை… Continue reading வீட்டுத்தோட்டம் – மிளகாய்ச் செடி வளர்ப்பு
மழைநீரை இப்படியும் சேமிக்கலாம்!
http://youtu.be/Fv8XVnXCBVk மழைநீர் சேமிக்கும் திட்டத்தின்படி வீணாகும் மழைநீரை மண்ணுக்கு அடியில் செலுத்தி சேமித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் எல்லா இடங்களிலும் விழும் நீரை அப்படி செய்ய முடியாது. சிறிய அளவிலான கட்டடங்கள் மீது விழும் நீரை இதோ இந்த விடியோவில் உள்ளதுபோல் செய்தும் சேமிக்கலாம். செடிகளுக்கு பாய்ச்சவோ அன்றாட தேவைகளுக்கோ இந்த நீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.