அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழகம், தமிழ்நாடு

பெருந்தன்மையாக நடந்துகொண்ட தலைவர் காமராஜர்: கருணாநிதி புகழாரம்

வெறுப்பை காட்டும் சூழல் ஏற்பட்டபோதும் பெருந்தன்மையாக நடந்துகொண்டவர் காமராஜர். அதனாலே அவர் பெருந்தலைவர் ஆனார் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. இன்று பெருந்தலைவர் காமராஜரின் 112-வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி திமுக தலைவர் விடுத்துள்ள செய்தியில், ‘‘இந்தியாவில் நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்டு, தலைவர்கள் எல்லாம் சிறையிலே வாடிய போது, சுதந்திர இந்தியாவில் ஜனநாயகம் வீழ்ச்சி யடைகிறது என்பதையும், தனது தேசிய சகாக்கள் சிறைவாசம் அனுபவிக்கிறார்கள் என்பதையும் தாங்கிக் கொள்ள முடியாத காமராசர் உடல் நலிவுற்றுப் படுத்த… Continue reading பெருந்தன்மையாக நடந்துகொண்ட தலைவர் காமராஜர்: கருணாநிதி புகழாரம்

அரசியல், தமிழகம், தமிழ்நாடு

வேட்டியில் சென்ற நீதிபதிக்கு அனுமதி மறுத்த கிளப்!

கிளப்களுக்கு வேட்டி அணிந்து செல்ல அனுமதி மறுப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னையில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.பரந்தாமன், மூத்த வழக்குரைஞர் ஆர். காந்தி ஆகியோர் அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் அவர்கள், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்ததுதானாம். உயர்நீதிமன்ற நீதிபதியும் மூத்த வழக்குரைரும் அவமதிக்கப்பட்டிருப்பது மிகுந்த… Continue reading வேட்டியில் சென்ற நீதிபதிக்கு அனுமதி மறுத்த கிளப்!

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழகம், தமிழ்நாடு

இளவரசன் நினைவு தினத்தையொட்டி கைதான 6 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது

தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் அருகேயுள்ள நத்தம் காலனியை சேர்ந்த கோபால் மகன் சங்கர் (35), சிவலிங்கம் மகன் அதியமான் (30), பாலிடெக்னிக் மாணவர் சி.சந்தோஷ் (19), எஸ்.சக்தி (38), மொ.துரை (47), கோ.அசோகன் (27) ஆகிய 6 பேர் ஆயுதப் பயிற்சி பெற்றிருந்தாகவும், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், இளவரசன் நினைவு தினத்தை ஒட்டி கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை வைத்திருந்ததாகவும் கூறி, ஜூன் மாதம் 28-ஆம் தேதி இரவு போலீஸார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும்… Continue reading இளவரசன் நினைவு தினத்தையொட்டி கைதான 6 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது

இன்றைய முதன்மை செய்திகள், தமிழகம், தமிழ்நாடு

பணி விண்ணப்பப் படிவத்தில் மாதவிடாய் சுழற்சி பற்றி கேட்ட கனரா வங்கி

சமீபத்தில் கனரா வங்கி பணி நியமன விண்ணப்ப படிவத்தில் பெண்களின் மாதவிடாய் சுழற்சி காலம், கர்ப்பமாக இருக்கிறார்களா என்று உடல்நலன் தொடர்பான விவரங்களில் கேட்டிருந்தது. இது பாலியல் வேறுபாட்டை உருவாக்குவதாகக் கூறி பலத்த கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. எச்ஐவி பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, கேன்சர் போன்ற நோய்கள் உள்ளதா என்ற கேள்விகளுடன் பெண்கள் எனில் உங்கள் மாதவிடாய் சுழற்சி காலம், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா போன்ற கேள்விகளும் இடம் பெற்றிருந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. கர்ப்பமாக… Continue reading பணி விண்ணப்பப் படிவத்தில் மாதவிடாய் சுழற்சி பற்றி கேட்ட கனரா வங்கி

அரசியல், தமிழகம், தமிழ்நாடு

பட்ஜெட் : கருணாநிதியும் பாராட்டுகிறார், ஜெயலலிதாவும் பாராட்டுகிறார்

எப்போது எதிரணியில் நிற்கும் அதிமுக செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதியும் மத்திய பட்ஜெட் விஷயத்தில் ஒரே அணியாக நிற்கின்றனர். மாற்றத்தை உண்டாக்கும் எவ்வித பொருளாதார அறிவிப்புகளும் இல்லாத இந்த பட்ஜெட்டை வானளாவ புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இருவரும். எல்லாம் ஊழல் வழக்குகளிலிருந்து மத்திய அரசின் தயவை நோக்கியே என்பதை மக்கள் அறிவார்கள் என்பதை இவர்கள் அறியவில்லை போலும். இதோ இந்த சந்தர்ப்பவாதிகளின் வாக்குமூலங்களை அறிக்கைகள் மூலமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். பட்ஜெட் குறித்து முதல்வர் ஜெயலலிதா… Continue reading பட்ஜெட் : கருணாநிதியும் பாராட்டுகிறார், ஜெயலலிதாவும் பாராட்டுகிறார்