சினிமா, நடிகர்கள்

நான் கதாநாயகன் ஆன கதை! கே.பாக்யராஜ்

தான் கதாநாயகன் ஆன கதையின் ஃப்ளாஷ்பேக் கூறி படவிழாவில் கே.பாக்யராஜ் கலகலப்பூட்டினார்.இது பற்றிய விவரம் வருமாறு: ஆயுதங்களே மனிதனைத் தீர்மானிக்கின்றன என்கிற கருத்து வாசகத்தை மையமாக்கி உருவாகியுள்ள படம் 'திலகர்'. துருவா, மிருதுளா,கிஷோர்,அனுமோல் நடித்துள்ள இப்படம் ஒரு ஹாரர் த்ரில்லர். ஜி.பெருமாள் பிள்ளை எழுதி இயக்கியுள்ளார். பிங்கர் பிரிண்ட் பிக்சர்ஸ் (அட! நிறுவனப் பெயரில் கூட மர்மம்.. துப்பறியும் முத்திரை) சார்பில் உருவாகியுள்ளது. மதியழகன், ரம்யா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு ராஜேஷ்யாதவ் .கண்ணன் இசையமைத்துள்ளார். ஒரு துணிச்சல்… Continue reading நான் கதாநாயகன் ஆன கதை! கே.பாக்யராஜ்

சினிமா, நடிகர்கள்

குடும்பத்துடன் நேரம் செலவிடவே விரும்புகிறேன்: நடிகர் சூர்யா

அஞ்சான் பட டிரெய்லர் மிகவும் பரபரப்பாக பேசப்படுவதற்கு நடிகர் சூர்யா உற்சாகமாக இருக்கிறார். லிங்கும்சாமி இயக்கத்தில் அஞ்சான் ஸ்டைலிஷாக வந்திருப்பதாக சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் தன் குடும்பத்தினருடன் நேரம் செலவிட விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். ஜோதிகா மகனைப் பார்த்துக் கொள்வதாகவும் தான் மகள் தியாவைப் பார்த்துக் கொள்வதாகவும் சூர்யா தெரிவித்திருக்கிறார். குழந்தைகள் வளர்ப்பில் அம்மாவுக்கு இணையான பங்கு அப்பாவுக்கு உள்ளது என்று சூர்யா தனது பேட்டியில்… Continue reading குடும்பத்துடன் நேரம் செலவிடவே விரும்புகிறேன்: நடிகர் சூர்யா

சினிமா, நடிகர்கள்

மாநிற நாயகிகள் வரிசையில் ரம்மி பட நாயகி ஐஸ்வர்யா!

மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி, குறும்படங்களில் நடித்து, கேரக்டர் ரோல்களில் சினிமாவில் தோன்றி இப்போது கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். மாநிறமான நடிகைகள் இந்திய சினிமாக்களின் ஜீவிப்பது அரிதாக நிகழக்கூடிய ஒன்று. ஐஸ்வர்யா சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் தமிழ் நன்றாக பேச வரும். அதனால் இயல்பான நடிப்பதற்கு வாய்ப்புள்ள கதாபாத்திரங்களில் நன்றாக நடிக்கிறார். அட்டக்கத்தி படத்தில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் அமுதா என்கிற கதாபாத்திரத்தை நினைவு வைத்திருக்கும் வகையில் சிறப்பாக நடித்திருந்தார்.… Continue reading மாநிற நாயகிகள் வரிசையில் ரம்மி பட நாயகி ஐஸ்வர்யா!

சினிமா, நடிகர்கள்

என்னைப் பற்றிய வதந்திகளுக்குக் காரணம் என் சித்திதான் : அஞ்சலி மனம் திறக்கிறார்

தெலுங்கு நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார், திருமணம் ஆகிவிட்டது, இனி தமிழ் படங்களில் நடிக்க மாட்டார், தமிழ் படங்களில் நடிக்கத்தடை, தோலில் அலர்ஜி ஏற்பட்டுவிட்டது என்று நடிகை அஞ்சலியைச் சுற்றி ஏகப்பட்ட வதந்திகள், கிசுகிசுக்கள்... ஆனால் அஞ்சலியோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஜெயம் ரவியுடன் கிராமத்துப் பெண்ணாக சாலிக்கிராமத்தில் உள்ள படத்தளத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் அஞ்சலிக்கு இதையெல்லாம் துடைத்தெறியும் மனப்பக்குவம் நிச்சயம் வந்திருக்கும். நம்மிடம் பேசிய அவர், ‘என்னைப் பற்றிய வதந்திகள் பற்றி… Continue reading என்னைப் பற்றிய வதந்திகளுக்குக் காரணம் என் சித்திதான் : அஞ்சலி மனம் திறக்கிறார்

சினிமா, நடிகர்கள்

ஒரு குப்பைக்கதையின் ஹீரோ நடன இயக்குநர் தினேஷ்!

ஃபிலிம்பாக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் "ஒரு குப்பைக்கதை" ஸ்ரீகாந்த் நடித்த "பாகன்" படத்தினை இயக்கிய அஸ்லம் தயாரிக்கிறார். நடன இயக்குனர் தினேஷ் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவர் ஏறக்குறைய 130 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றியவர். "ஆடுகளம்" படத்திற்காக இவர் தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நம்மிடம் பேசிய தினேஷ் கூறியதாவது, "மிக அழுத்தமான எனக்கும் பொருத்தமான கதை என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டேன். நிறைய பேர் என்னை இதற்கு முன் அணுகியிருந்தாலும்… Continue reading ஒரு குப்பைக்கதையின் ஹீரோ நடன இயக்குநர் தினேஷ்!