நரிக்குறவர் இனவரைவியல் – நூல் அறிமுகம் கீதா மதிவாணன் நரிக்குறவர்களின் இனவரலாறு, தோற்றம், இடப்பெயர்ச்சி, சமூக அமைப்பு, மொழி, வாழ்க்கைமுறை, சமூக மாற்றம் இவற்றுடன் அவர்களுடைய திருமணம், சடங்குகள், சமயம் சார்ந்த நம்பிக்கைகள், புழங்குபொருட்கள், வழக்காறுகள் என அனைத்து விவரங்களையும் மிக எளிமையாகவும் சுவையாகவும் தந்துள்ளார் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு மாணவி கரசூர் பத்மபாரதி. இவர் புதுவை பல்கலைக் கழகத்தில் சுப்பிரமணிய பாரதி தமிழிற்புலத்தில் முதுகலை மற்றும் இளமுனைவர் பட்டங்கள் பெற்றவர். இந்நூலுக்கு… Continue reading நரிக்குறவர்களை அறிவோம்!
Category: புத்தகம்
புத்தக அறிமுகம்: பசுமைப் புரட்சியின் வன்முறை!
புத்தக அறிமுகம் ஞா.கலையரசி இரண்டாம் உலகப்போரில் போருக்காகப் பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்த பாஸ்பேட், நைட்ரேட், பொட்டாஷ் போன்ற வேதிப்பொருட்கள் பெருமளவு எஞ்சின; அவற்றை விற்றுத் தீர்ப்பதற்காகவே நவீன வேளாண்முறையைக் கொண்ட பசுமைப்புரட்சி உருவாக்கப்பட்டது. பசுமைப் புரட்சியின் வன்முறை முதற்பதிப்பு டிசம்பர் 2009 இரண்டாம் பதிப்பு:- டிசம்பர் 2013 வம்சி/பூவுலகு வெளியீடு விலை ரூ 140/- சுற்றுச்சூழல் ஆர்வலரும், உலகமயமாக்கலை எதிர்க்கும் எழுத்தாளருமான முனைவர் வந்தனா சிவா எழுதிய The Violence of the Green Revolution… Continue reading புத்தக அறிமுகம்: பசுமைப் புரட்சியின் வன்முறை!
“முட்டையிலிருந்து என்ன வரும்?”
ஞா.கலையரசி காட்டுயிர் எழுத்தாளர் திரு சு.தியடோர் பாஸ்கரன் எழுதிய ‘வானில் பறக்கும் புள்ளெலாம்,’ நூலை அண்மையில் வாசித்தேன். உயிர்மை, காலச்சுவடு, பசுமை விகடன் ஆகிய இதழ்களில் இவர் எழுதிய சுற்றுச்சூழல் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். உயிர்மை வெளியீடு. இரண்டாம் பதிப்பு டிசம்பர் 2014. இவர் காட்டுயிர், சூழலியல், திரைப்பட வரலாறு ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்புகளைச் செய்திருக்கிறார். சூழலியல் வரிசையில் இது இவருடைய மூன்றாவது நூல். ஒரு முறை ஆறு வயது சிறுமியிடம் முட்டையைக் காட்டி, “முட்டையிலிருந்து என்ன… Continue reading “முட்டையிலிருந்து என்ன வரும்?”
காவல்துறை பிடியிலிருந்து இரோம் சர்மிளா விடுதலை!
வட கிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து கடந்த 14 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வரும், மனித உரிமை ஆர்வலர் இரோம் ஷர்மிளாவை விடுதலை செய்யுமாறு மணிப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இம்பால் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.குணேஷ்வர் சர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது: ஷர்மிளா மீது தற்கொலைக்கு முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. அவர் மீது வேறு எந்த… Continue reading காவல்துறை பிடியிலிருந்து இரோம் சர்மிளா விடுதலை!
நூல் அறிமுகம் – ஜின்னாவின் டைரி
நூல் அறிமுகம் ஜின்னாவின் டைரி நாவல் ஆசிரியர் : கீரனூர் ஜாகிர்ராஜா 2013 ஆம் ஆண்டுக்கான கனடா இலக்கியத்தோட்டம் விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சிறந்த புனைவெழுத்தாளருக்கான கிருபாகரன் சின்னத்துரை நினைவு விருது கீரனூர் ஜாகீர் ராஜாவின் ‘ஜின்னாவின் டைரி’ என்ற நூலுக்காக வழங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து எதிர்வெளியீடு பதிப்பகத்தைச் சேர்ந்த அனுஸ்கான், ‘‘கீரனூர் ஜாகீர்ராஜா தமிழின் இளம் தலைமுறை எழுத்தாளர்களில் முக்கியமானவர்.பழைய தஞ்சைமாவட்டத்தின் பின்னணியில் இஸ்லாமிய அடித்தள மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் துருக்கித்தொப்பி,கருத்தலெப்பை, மீன்காரத்தெரு போன்ற குறிப்பிடத்தக்க படைப்புகளை ஆக்கியிருக்கிறார்.… Continue reading நூல் அறிமுகம் – ஜின்னாவின் டைரி