அரசியல், இதழ், சினிமா, பெண், பெண்கள் பத்திரிகை, பெண்ணியம்

4 பெண்கள் இனி மாதமிருமுறை இதழாக…

வழமையாக பெண்களுக்கான இதழ்களில் ஏற்பட்ட நம்பிக்கையின்மையின் காரணமாகவே 4 பெண்கள் தளம் தொடங்கப்பட்டது. ஆர்வத்தின் காரணமாக அவசர அவசரமாக சரியான நிலைப்பாட்டில் 4 பெண்கள் தளம் இதுநாள் வரை செயல்படவில்லை என்பதை இங்கே ஒத்துக் கொள்கிறோம். நமக்கு எது வேண்டும், எது வேண்டாம் என்கிற புரிதலுக்கு வர சிறிது காலம் தேவைப்பட்டது, இந்தக் காலக்கட்டத்தில் வெகுஜென பெண்கள் இதழ்களுக்கும் தீவிர பெண்ணியத்திற்கும் இடையேயான இடைவெளி குறித்து நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது. இந்த இடைவெளி பற்றி நாம் அதிகம் விவாதிக்காததும் இந்த இடைவெளியை நீக்க எத்தகைய இணைப்பு நடவடிக்கை தேவை என்பதையும் சிந்திக்க முடிந்தது.… Continue reading 4 பெண்கள் இனி மாதமிருமுறை இதழாக…

எழுத்தாளர்கள், சர்ச்சை, பெண், பெண் அரசியல்வாதிகள், பெண் எழுத்தாளர், பெண்கள் பத்திரிகை, பெண்ணியம்

சர்ச்சையை வேறு திசையில் மாற்றிய அம்பையின் கட்டுரை!

சமீபத்தில் எழுத்தாளர் நாஞ்சில் நாடனனின் நம்பிக்கைக்குரிய எழுத்தாளர் பட்டியலை ஒட்டி எழுந்த சர்ச்சையில் எழுத்தாளர் ஜெயமோகன் தன் வலைப்பக்கத்தில் “தமிழில் தற்போது எழுதிவரும் ஆண் எழுத்தாளர்களுக்கு இணையாகப் பொருட்படுத்தக்கூடிய அளவில் பெண் எழுத்தாளர்கள் அதிகம் இல்லை’’ என்று  எழுதியிருந்தார். அத்துடன், “பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பல வகை உத்திகள் மூலம் ஊடக பிம்பங்களாக ஆனவர்கள். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்குப் பெண்களாகத் தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது’’ என்றும் எழுதியிருந்தார். இதுகுறித்து… Continue reading சர்ச்சையை வேறு திசையில் மாற்றிய அம்பையின் கட்டுரை!

பெண்கல்வி, பெண்கள் பத்திரிகை, பெண்ணியம்

முதல் பெண் பட்டதாரியின் கதையை எழுதுங்கள்!

பெண்கல்வியின் முக்கியத்துவத்தை நாம் உணர ஆரம்பித்ததே பிரிட்டீஷாரின் வருகைப் பிறகுதான். சுதந்திரப் போராட்டத்தில் பெண்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ராஜாராம் மோகன்ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர் போன்றோர் மக்களிடையே அதை முன்னெடுத்துச் சென்றனர். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட பெண்களின் கல்வி உரிமைக்காக மகாத்மா ஜோதிபாய் புலே, பெரியார் குரல் கொடுத்தனர். சுதந்திரம் கிடைத்து 30 ஆண்டுகளுக்குப் பிறகே, பெண்கள் கல்விச்சாலைகளுக்கு வர முடிந்தது. 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் பெண்கல்வியின் சராசரி அளவு 50 சதவிகிதத்தை எட்ட முடிந்திருக்கிறது. இன்னும்… Continue reading முதல் பெண் பட்டதாரியின் கதையை எழுதுங்கள்!

அனுபவம், பணிபுரியும் பெண்கள், பெண் எழுத்தாளர், பெண்களின் சுகாதாரம், பெண்கள் பத்திரிகை, பெண்ணியம்

பெண்களின் பாதுகாப்பு பற்றி எழுதும் எங்களுக்கே பாதுகாப்பில்லை!

உமா சக்தி எழுத்தாளர்/பத்திரிகையாளர் ஒரு பெண் வேலைக்குப் போவது அவளது பொருளாதாரச் சுதந்திரத்துக்கு மட்டுமல்ல, அவளுடைய சுயம் சார்ந்த தேவையும், அறிவுத் தேடலின் சாரமாகவும் தான். தான் மட்டுமல்ல தன்னைச் சார்ந்த சமூகத்தையும் முன்னேற்ற ஒரு பெண்ணால் மட்டுமே முடியும். சுறுசுறுப்பும், ஆளுமையும், அறிவுத் திறனும் பெண்களை துறை சார்ந்த வல்லுனர்களாக எளிதில் முன்னேற்ற பாதைக்கு உயர்த்திச் செல்கிறது. ஆனால் வீட்டிலிருந்து வெளியே வந்துவிட்டால் பெண்கள் என்ன என்ன பிரச்சனைகள் அனுபவிக்க வேண்டியுள்ளது? பார்வைகள், கேலிப் பேச்சுகள்… Continue reading பெண்களின் பாதுகாப்பு பற்றி எழுதும் எங்களுக்கே பாதுகாப்பில்லை!

பெண் எழுத்தாளர், பெண்கள் பத்திரிகை, விருது, வெற்றிக்கதை

துப்புரவு பணியாளரின் மகள் எழுதிய நாவல்!

சென்ற ஆண்டு வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட தூப்புக்காரி நாவலை எழுதியவர் மலர்வதி. கன்னியாகுமரி மாவட்ட வெள்ளிகோடு கிராமத்தைச் சேர்ந்த இவர் நாவல் எழுதிய பின்னணி, துயரத்தில் துவண்டு போகும் பெண்களுக்கு மிகப்பெரிய தூண்டுதல் தரக்கூடியது. ஒன்பதாவது வரையில் மட்டுமே பள்ளியில் படித்த இவர் எழுத்தாளர் ஆன கதை இதோ... “சின்ன வயசில என்னோட அப்பா இறந்துட்டாங்க. ஏழ்மையான சூழ்நிலையில் அம்மாவும் அண்ணனும் கல்லை உடைக்கிற வேலைக்குப் போய்தான் குடும்பத்தைக் காப்பாத்தினாங்க.  நான் சின்ன வயசா இருக்கும்போது அம்மா… Continue reading துப்புரவு பணியாளரின் மகள் எழுதிய நாவல்!