அரசியல், பெண், பெண் அரசியல்வாதிகள்

அமெரிக்காவின் சமவுடைமையாளர்!

முதலாளித்துவத்தின் பிறப்பிடமான அமெரிக்காவில் சமவுடைமை பேசுகிறார் இந்தப் பெண். இதுவரை இந்தியாவிலிருந்து புறப்பட்டு அமெரிக்க மண்ணில் அமெரிக்க பிரஜையாக, அமெரிக்க கொள்கைகளை ஏற்றுக்கொண்ட பல வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உண்மையிலேயே பெருமைப்படக் கூடிய செயல்களைச் செய்துகொண்டிருக்கிறார் ஷாமா சாவந்த். அமெரிக்காவின் சியாட்டில் நகர சபை உறுப்பினர் ஷாமா, தன்னுடைய உறுப்பினர் பதவிக்கான தேர்தலின்போது தேர்தல் பிரசாரமாக ஒரு மணி நேரத்துக்கு குறைந்தபட்ச ஊதியமாக 15 டாலர் தர வேண்டும் என்பதை சட்டமாக்குவேன் என்றார். அதன்படியே 2014ல்… Continue reading அமெரிக்காவின் சமவுடைமையாளர்!

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு, பெண், பெண் அரசியல்வாதிகள், பெண்கள் பாதுகாப்பு, பெண்ணியம்

`கவுரவ’ கொலையை தடுக்க சிறப்புச் சட்டம் : ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்

‘கவுரவக்’ கொலைகளைத் தடுக்க மத்திய அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 14வது மாநில மாநாடு சேலத்தில் கேப்டன் லட்சுமி-சியாமளி குப்தா நினைவரங்கில் நடைபெற்று வருகிறது. என்.அமிர்தம், வாலண்டினா மற்றும் ஆர்.சந்திரா தலைமையில் வெள்ளியன்று துவங்கிய மாநாடு சனிக்கிழமை தொடர்ந்து நடை பெறுகிறது. மாநாட்டை உழைக்கும் ஒருங்கிணைப்புக்குழு கன்வீனர் எம்.மகாலட்சுமி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர்… Continue reading `கவுரவ’ கொலையை தடுக்க சிறப்புச் சட்டம் : ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்

எழுத்தாளர்கள், சர்ச்சை, பெண், பெண் அரசியல்வாதிகள், பெண் எழுத்தாளர், பெண்கள் பத்திரிகை, பெண்ணியம்

சர்ச்சையை வேறு திசையில் மாற்றிய அம்பையின் கட்டுரை!

சமீபத்தில் எழுத்தாளர் நாஞ்சில் நாடனனின் நம்பிக்கைக்குரிய எழுத்தாளர் பட்டியலை ஒட்டி எழுந்த சர்ச்சையில் எழுத்தாளர் ஜெயமோகன் தன் வலைப்பக்கத்தில் “தமிழில் தற்போது எழுதிவரும் ஆண் எழுத்தாளர்களுக்கு இணையாகப் பொருட்படுத்தக்கூடிய அளவில் பெண் எழுத்தாளர்கள் அதிகம் இல்லை’’ என்று  எழுதியிருந்தார். அத்துடன், “பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பல வகை உத்திகள் மூலம் ஊடக பிம்பங்களாக ஆனவர்கள். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்குப் பெண்களாகத் தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது’’ என்றும் எழுதியிருந்தார். இதுகுறித்து… Continue reading சர்ச்சையை வேறு திசையில் மாற்றிய அம்பையின் கட்டுரை!

அரசியல், அரசியல் பேசுவோம், பெண், பெண் அரசியல்வாதிகள்

மக்களவையின் புதிய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் பதவியேற்பு

பதினாறாவது மக்களவையின் புதிய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் தேர்வாகியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கும் சுமித்ரா, மத்திய பிரதேச மாநிலத்தின் இண்டூர் தொகுதியின் மக்களவை உறுப்பினராக 8 முறை தேர்வானவர். சுமித்ரா மகாஜன் சட்டம் படித்தவர். மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் இரண்டாவது பெண் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அரசியல், அரசியல் பேசுவோம், தேர்தல் 2014, பெண் அரசியல்வாதிகள், பெண்ணியம்

மக்களவை தேர்தலில் பெண் வேட்பாளர்கள்!

அரசியல் பேசுவோம் மக்களவை தேர்தல் - 2014 மக்களவைக்கு தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 40. சென்ற தேர்தலில் திமுக சார்பில் நாகர்கோவிலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெ. ஹெலன் டேவிட்சன் மட்டுமே பெண். இந்த தேர்தலில் திமுக சார்பில் 35 இடங்களில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இதில் இரண்டு பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள். சேலத்தில் போட்டியிடுகிறார் செ. உமாராணி. ஈரோட்டில் போட்டியிடும் எச். பவித்தர வள்ளி, எம்பிஏ பட்டதாரி. திமுக பட்டியலிலேயே இவர் தான் இளையவர், வயது 26.… Continue reading மக்களவை தேர்தலில் பெண் வேட்பாளர்கள்!