கைவேலை பயிற்சி, பெண் கலைஞர்கள், பெண் தொழில் முனைவு

வீட்டிலிருந்தபடியே கைவேலை செய்யும் பெண்களின் சிறப்பு கண்காட்சி!

வீட்டிலிருந்தபடியே சிறு சிறு கைவேலைகள் செய்யும் பெண்கள் இணைந்து சென்னை சிபி ஆர்ட் செண்டரில் கண்காட்சி அமைத்துள்ளனர். பெண்கள் தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்தக் கண்காட்சி, கைவேலைப்பாடு தெரிந்த பெண்களுக்கு அவற்றை எப்படி சந்தைப் படுத்துவது என்பது பற்றி தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.  இளம் பெண்கள் முதல் நடுத்தர, முதிய பெண்கள் வரை அனைத்து வயதுகளிலும் உள்ள பெண்கள் ஆர்வமுடன் இந்தக் கண்காட்சியில் பங்கேற்று இருக்கிறார். நான்கு பெண்கள் தளத்தில் கைவேலைப்பாடுகள் கற்றுத்தரும் ஜெயஸ்ரீ நாராயணன் தன்னுடைய… Continue reading வீட்டிலிருந்தபடியே கைவேலை செய்யும் பெண்களின் சிறப்பு கண்காட்சி!

இன்றைய முதன்மை செய்திகள், சினிமா, பெண் கலைஞர்கள்

பிரெஞ்சு படத்தில் தமிழ்ப் பெண்!

கலைகளின் ரசிகர்கள் நிறைந்த பாரீசில் தமிழ்ப் பெண் ஜானகி நடித்த சோன் ஈபூஸ் (Son Epouse - அவனுடைய மனைவி) என்ற பிரெஞ்சு சினிமா  வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது தமிழ்ப்புதுமுக நடிகை ஜானகியின் நடிப்பாற்றல் வலுவானதாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் வெளிப்பட்டுள்ளது என புகழாரம் சூட்டியிருக்கிர்றார்கள் மேற்குலக விமர்சகர்கள். சைக்கோ திரில்லரான இந்தப்படத்தில் முதன்மையான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஜானகி. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் என்ற மேற்குதொடர்ச்சிமலை கிராமத்தில் பிறந்த ஜானகி சினிமாவுக்கு வந்த பின்னணி இதோ... ‘’அப்பா செங்கல் சூளையில… Continue reading பிரெஞ்சு படத்தில் தமிழ்ப் பெண்!

இலக்கிய விருது, இலக்கியம், சினிமா, பெண், பெண் எழுத்தாளர், பெண் கலைஞர்கள்

பெண் எழுத்தாளர்களுக்கும் சல்மாவிற்கும் என்ன சம்பந்தம்? மனுஷ்யபுத்திரன் கேட்கிறார்

பெண் எழுத்தாளர்கள் பற்றிய சர்ச்சையில் சல்மாவிற்கு என்ன தொடர்பு என்று கேட்டு புது சர்ச்சையை கிளப்பியிருக்கிறார் உயிர்மை இதழின் ஆசிரியரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரன். இதுகுறித்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ள கருத்து... ‘‘இந்த இரண்டு வருஷங்களில் இருபது நாடுகளுக்கு நான் பயணம் செய்திருக்கிறேன். இதில் ஒன்றுகூட இலக்கிய நிகழ்ச்சியில்லை. எல்லாமே ஃபிலிம் ஃபெஸ்டிவல் சம்பந்தப்பட்டது. எனது வளர்ச்சி குறித்து மனுஷ்ய புத்திரன் ‘ஒரேயொரு நாவல்தான் இவர் எழுதியிருக்கிறார். யார் இந்த வாய்ப்புக்களை உருவாக்கித்தருகிறார்கள்’ என சந்தேகம்… Continue reading பெண் எழுத்தாளர்களுக்கும் சல்மாவிற்கும் என்ன சம்பந்தம்? மனுஷ்யபுத்திரன் கேட்கிறார்

இன்றைய முதன்மை செய்திகள், சினிமா, பெண், பெண் கலைஞர்கள்

நெஸ் வாடியாவுக்கு நான் பண உதவி செய்தேன்! ப்ரீத்தி ஜிந்தா

ஐபிஎல் போட்டியின்போது மும்பை வான்கடே மைதானத்தில் தொழிலதிபர் நெஸ் வாடியா, தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக நடிகை பிரீத்தி ஜிந்தா அளித்த புகாரின் பேரில் மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் நெஸ் வாடியா, ப்ரீத்தியின் புகாரில் உண்மையில்லை என்று ஊடகங்களிடம் தெரிவித்து வருகிறார். இதுகுறித்து தன் ஃபேஸ் புக் பக்கத்தில் நீண்ட விளக்க அளித்திருக்கிறார் ப்ரீத்தி ஜிந்தா. அதில், ‘நெஸ் வாடியாவிடம் பணம் பறிப்பதற்காக நான் புகார் செய்ததாகக் கூறப்படுவது சுத்தப்பொய். அவருக்குச்… Continue reading நெஸ் வாடியாவுக்கு நான் பண உதவி செய்தேன்! ப்ரீத்தி ஜிந்தா

சினிமா, பெண், பெண் இயக்குநர், பெண் எழுத்தாளர், பெண் கலைஞர்கள்

கலைப்படைப்பு என்பதே ஓர் அரசியல் நடவடிக்கை தான்: “வித் யூ வித் அவுட் யூ” படத்தை முன்வைத்து குட்டிரேவதி

குட்டி ரேவதி தமிழகத்தில், பிரசன்ன விதானகேவின், "With You Without You" படத்தின் வெளியீடும் அதன் மீதான தடை என்ற வதந்தியும் திரையிடலும் என ஒட்டுமொத்தமாக எல்லாமே, "கலைப்பூர்வமானதோர் அரசியல்நடவடிக்கை"யாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலத்தில், இது போன்று அரசியல் + கலை இரண்டின் ஆரோக்கியமான இணைதல்கள் இவ்வளவு சிறப்பாகத் தமிழ்ச்சூழலில் நடந்ததில்லை என்றே சொல்லவேண்டும். பிவிஆர் மற்றும் எஸ்கேப் திரையரங்குகளில் பொதுமக்கள் பார்வைக்கான காட்சிகள், அதன் மீது தடை என்பதாக வதந்தி, தடை மீதான மறுப்பு குறித்த… Continue reading கலைப்படைப்பு என்பதே ஓர் அரசியல் நடவடிக்கை தான்: “வித் யூ வித் அவுட் யூ” படத்தை முன்வைத்து குட்டிரேவதி