ஃபேஷன் ஜுவல்லரி, கிறிஸ்டல் பென்டன்ட் செட், செய்து பாருங்கள், செய்து விற்கலாம், தொழில், நீங்களும் செய்யலாம், நீங்களே கோர்க்கலாம், பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்

கிறிஸ்டல் பென்டன்ட் செட்- நீங்களே செய்யலாம் ஃபேஷன் ஜுவல்லரி!

சென்ற பதிவில் குந்தன் மோடிஃப்களை வைத்து ஃபேஷன் ஜுவல்லரியை எப்படி உருவாக்குவது என்று பார்த்தோம். இந்த பதிவில் நாம் கற்க இருப்பது கிறிஸ்டல் பென்டன்ட் செட்டை எப்படி கோர்ப்பதை.. ஃபேஷன் ஜுவல்லரி கற்க ஆரம்பித்திருப்பவர்கள் இதுபோன்ற எளிமையான டிசைன்களை செய்து பார்க்கலாம். பென்டன்டுகளைத் தேர்ந்தெடுப்பதிலும் அதற்கு ஏற்றற்போல மணிகளை தேர்ந்தெடுத்து கோர்ப்பதிலும் நீங்கள் கிரியேடிவிட்டி காட்டினால் நீங்கள் உருவாக்கிய படைப்பு நிச்சயம் பேசப்படும். சரி.. செய்முறைக்குப் போவோமா? இந்த செய்முறையை விடியோவில் காண இங்கே க்ளிக்குங்கள். என்னென்ன… Continue reading கிறிஸ்டல் பென்டன்ட் செட்- நீங்களே செய்யலாம் ஃபேஷன் ஜுவல்லரி!

ஃபேஷன் ஜுவல்லரி, ஃபேஷன் ஜுவல்ஸ் செய்யத் தேவையான பொருட்கள் இங்கே குறைந்த விலையில் அள்ளலாம், தொழில், நீங்களும் செய்யலாம், நீங்களே கோர்க்கலாம், பகுதி நேர வருமானம், பெண் தொழில் முனைவு

ஃபேஷன் ஜுவல்லரி – கிறிஸ்டல் நெக்லஸ் செய்முறை!

ஃபேஷன் ஜுவல்லரி ஃபேஷன் ஜுவல்லரியில் அழகான ரெயின் ட்ராப் (மழை துளி) கிறிஸ்டல் நெக்லஸ் செய்வது எப்படி என்று சொல்லித்தருகிறார் ஃபேஷன் ஜுவல்லரி வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கும் கீதா.எஸ். இதற்கு தேவையானவை கோல்டன் செயின், மணிகள், கட்டிங் பிளையர், சிறிய அளவிலான தங்க நிற மணிகள் மற்றும் மொட்டு கம்பிகள்   ஃபேஷன் ஜுவல்லரி செய்யத் தேவையான பொருட்கள் வேண்டுவோர், தேவையான விவரங்களுடன் [email protected] என்ற இமெயில் முகவரிக்கு எழுதுங்கள்.

செய்து பாருங்கள், பெண் தொழில் முனைவு

“அந்த ஒரு ரூபாயை சம்பாதித்து காட்டினோம்” வீணா-சுனிதா சகோதரிகளின் வெற்றிக்கதை

நந்தினி சண்முகசுந்தரம் நம்முடைய சமூகத்தில் ஏழை, நடுத்தர, பணக்கார என எந்த வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் சுயமான அடையாளம் என்பது மறுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஒரு பெண்ணுக்கான சுய அடையாளம் என்பது அவளுடைய பொருளாதார சுதந்திரத்திலிருந்தே தொடங்குகிறது. பொருளாதார சுதந்திரத்தின் மூலம் சுய அடையாளத்தை அடைந்த வீணா -சுனிதா சகோதரிகளின் வெற்றிக்கதையை ‘செய்து பாருங்கள்’ முதல் இதழில் பகிர்ந்துகொள்வதில் பெருமையடைகிறோம். வீணா சுனிதா சகோதரிகளை நான் சந்தித்தது மூன்றாண்டுகளுக்கு முன் சென்னை சி.பி. ஆர்ட் கேலரியில் நடந்த பெண்கள்… Continue reading “அந்த ஒரு ரூபாயை சம்பாதித்து காட்டினோம்” வீணா-சுனிதா சகோதரிகளின் வெற்றிக்கதை

கண்காட்சி, செய்து பாருங்கள், பெண் தொழில் முனைவு

வீட்டிலிருந்தே கைவினைத் தொழில்: தஞ்சாவூர் ஓவியம், பத்திக் பிரிண்ட், மணி வேலை

கடந்த வாரம் சென்னையில் நடந்த பெண் கைவினைக் கலைஞர்களின் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த பெண்கள் தங்களுடைய நாளில் சிறு பகுதியை ஒதுக்கி, அதில் தங்களுக்குப் பிடித்த கைவேலைகள் செய்து, அதை விற்கக் கூடிய நிலைக்கு உயர்ந்தவர்களே.  தாங்களும் ஏதாவது ஒரு தொழிலை செய்ய வேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள். அவற்றை எப்படி விற்பது யாருக்கு விற்பது என்கிற தயக்கம்தான் பல பெண்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர விடுவதில்லை. இந்த தயக்கத்தை… Continue reading வீட்டிலிருந்தே கைவினைத் தொழில்: தஞ்சாவூர் ஓவியம், பத்திக் பிரிண்ட், மணி வேலை

கைவேலை பயிற்சி, பெண் கலைஞர்கள், பெண் தொழில் முனைவு

வீட்டிலிருந்தபடியே கைவேலை செய்யும் பெண்களின் சிறப்பு கண்காட்சி!

வீட்டிலிருந்தபடியே சிறு சிறு கைவேலைகள் செய்யும் பெண்கள் இணைந்து சென்னை சிபி ஆர்ட் செண்டரில் கண்காட்சி அமைத்துள்ளனர். பெண்கள் தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்தக் கண்காட்சி, கைவேலைப்பாடு தெரிந்த பெண்களுக்கு அவற்றை எப்படி சந்தைப் படுத்துவது என்பது பற்றி தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.  இளம் பெண்கள் முதல் நடுத்தர, முதிய பெண்கள் வரை அனைத்து வயதுகளிலும் உள்ள பெண்கள் ஆர்வமுடன் இந்தக் கண்காட்சியில் பங்கேற்று இருக்கிறார். நான்கு பெண்கள் தளத்தில் கைவேலைப்பாடுகள் கற்றுத்தரும் ஜெயஸ்ரீ நாராயணன் தன்னுடைய… Continue reading வீட்டிலிருந்தபடியே கைவேலை செய்யும் பெண்களின் சிறப்பு கண்காட்சி!