நோய்நாடி நோய் முதல் நாடி-52 ரஞ்சனி நாராயணன் மார்கழி முடிந்தும் இன்னும் குளிர் முடிந்தபாடில்லை. பருவ நிலை மாறும்போது நம் உடல் நிலையிலும் மாறுதல்கள் ஏற்படுகின்றன. அதீத குளிர், குளிர் காற்று, பனிஇவை பலருக்கு பலவிதமான தொந்தரவுகளைக் கொடுக்கின்றன. குளிர் காற்று தரும் நடுக்கம் தவிர இந்த குளிர்கால நோய்களும் சிறுவர்களுக்கும், வயதானவர்களுக்கும் நடுக்கத்தை ஏற்படுத்துகின்றன. குளிர் காற்றினாலும்பனியினாலும் மூட்டு வலி, வீக்கம் முதலியவை வரக்கூடும். பனிக்கு நம் எலும்புகளில் நெகிழ்வுத் தன்மை குறைவதால் இந்த குளிர் காலத்தில்… Continue reading குளிர் காலத்தில் நம் செவிகளைப் பாதுகாப்பது எப்படி?
Category: மருத்துவம்
காதில் கேட்கும் இரைச்சலுக்கு என்ன காரணம்? இதோ மருத்துவம் சொல்லும் காரணம்!
நோய்நாடி நோய்முதல் நாடி - 51 ரஞ்சனி நாராயணன் காது வலி: காது சம்பந்தமான இந்த கட்டுரையை எழுதுவதற்காக நிறைய புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு மிகவும் வியப்பான ஒரு விஷயம் தெரிய வந்தது. அதாவது பிற பாகங்களில் ஏற்படும் வலிகளை நமது மூளை சில சமயங்களில் காது வலி என்று தப்பாகப் புரிந்து கொண்டுவிடுமாம். பல வருடங்களுக்கு முன் ஆனந்தவிகடன் பத்திரிகையில் வெளிவந்த உச்சிமுதல் உள்ளங்கால்வரை என்கிற தொடரில் காது பற்றிய கட்டுரையில் இந்த தகவலைப்… Continue reading காதில் கேட்கும் இரைச்சலுக்கு என்ன காரணம்? இதோ மருத்துவம் சொல்லும் காரணம்!
”கிருமி தொற்று குறித்து பயம் வேண்டாம்” – அக்கு ஹீலர் அருள்ராஜ்
சென்னை மக்களின் மனம் எவ்வளவு ஈரம் நிறைந்தது என்பதை இந்த மழை வந்து தானே உலகுக்கு சொல்லிருக்கிறது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லுள்ளம் கொண்டோர் செய்யும் உதவி அடைமழையை விட பெரிது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. உணவு பொட்டலங்கள் தந்து தந்துகொண்டே இருப்பதால் நாம் உண்டு கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை.”பசித்து புசி” என்பதுதானே நமது மரபு. ஆகவே கிடைக்கிறது என்பதற்காக அல்லாமல் பசித்தால் மட்டும் உண்போம். அனேக இடங்களில் பிரட், பிஸ்கட் பாக்கெட்டுகள் நிறைய… Continue reading ”கிருமி தொற்று குறித்து பயம் வேண்டாம்” – அக்கு ஹீலர் அருள்ராஜ்
மீண்டும் நோய்நாடி நோய்முதல் நாடி!
நோய்நாடி நோய்முதல் நாடி- 50 ரஞ்சனி நாராயணன் நமது மருத்துவக் கட்டுரை தொடரில் நீண்ட இடைவெளி. தவிர்க்க முடியாத காரணங்களினால் ஏற்பட்ட இந்த இடைவெளிக்கு முதலில் நம் வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன். இனி இப்படி ஆகாது; தொடர்ந்து வரும் என்றும் உறுதி கூறுகிறேன். ‘டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா?’ டெலிபோன் மணி போல சிரித்தால் பரவாயில்லை; காதுக்குள் எப்போதும் டெலிபோன் மணி அடித்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? நிச்சயமாக மகிழ்ச்சியுடன் பாட முடியாது! காதினுள்… Continue reading மீண்டும் நோய்நாடி நோய்முதல் நாடி!
உயிர் காக்கும் ஊசி மருந்து
நோய்நாடி நோய்முதல்நாடி ரஞ்சனி நாராயணன் சமீபத்தில் நாங்கள் வெளியூர் செல்லும்போது என் கணவர் இன்சுலின் எடுத்துக்கொள்ள மறந்துவிட்டார். எங்கள் மருத்துவருக்குத் தொலைபேசி ‘இன்சுலினுக்கு மாற்று ஏதாவது இருக்கிறதா? வேறு மருந்துகள் மூலம் ஈடு செய்ய முடியுமா? என்று கேட்டேன். எங்கள் மருத்துவர் சொன்னார்: இன்சுலினுக்கு மாற்று எதுவும் கிடையாது. வேறு எந்த மருந்தாலும் ஈடு செய்யவும் முடியாது’. இன்சுலின் மகத்துவம் அவர் சொன்ன வார்த்தைகளில் புரிந்தாலும் அடுத்தநாள் ஒரு கட்டுரை படித்தேன் இந்த இன்சுலின் பற்றி. டெக்கன்… Continue reading உயிர் காக்கும் ஊசி மருந்து