குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், ருசியுங்கள்

காரஸாரமான டொமேடோ ரைஸ்!

குழந்தைகளுக்கான உணவுகள் காமாட்சி மகாலிங்கம் நல்ல வண்ணம் நிறைந்த தக்காளிச் சாதம். காரமும்தான். நல்ல பழுத்த பெங்களூர் தக்காளி வகை நிரம்பவும் நல்லது.   கலந்த சாத வகைகளில் இதுவும் ஓரிடத்தைப் பிடித்து விட்டது. சின்னவர்கள்,பெரியவர்கள் எல்லோரும் விரும்பி ருசிப்பது. நீங்களும் ருசியுங்கள்.  கலந்த சாதங்களுக்கெல்லாம், சற்று மெல்லிய நீண்டவகை அரிசிகள் மிகவும் நல்லது. நாம் எந்த வகை அரிசி உண்கிரோமோ அதில் தயாரிப்பதுதான் சுலபம். சற்றுப் பருமனான அரிசி வகைகளுக்கு துளி காரம்,உப்பு அதிகம் வேண்டுமாக இருக்கலாம்.… Continue reading காரஸாரமான டொமேடோ ரைஸ்!

சமையல், ரவா கேஸரி, ருசியுங்கள், விருந்து சமையல், ஸொஜ்ஜி

பிசுபிசுப்பு இல்லாமல் ரவா கேஸரி செய்வது எப்படி?

விருந்து சாப்பாட்டில்  ரவா கேஸரி சுலபமானது. எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவது. நல்ல நெய்விட்டுப் பதமாகக் கிளறினால் எல்லோரும் விரும்பி உண்பார்கள்.  ஸொஜ்ஜியும்,பஜ்ஜியும் பேர் சொன்னாலே பெண் பார்க்கும் வைபவம்தான் யாவருக்கும் ஞாபகம் வரும். அந்தநாள் ஸொஜ்ஜி தான் ரவா கேஸரி. இப்போது மருமகள் வந்தே ஸொஜ்ஜியும்,பஜ்ஜியும் கொடுக்கிறார்கள். நமக்கு அதெல்லாம் வேண்டாம். விருந்தில் கேஸரியைச் செய்து கொடுப்போம்.  அவரவர்களுக்கு பஜ்ஜி ஸொஜ்ஜி ஞாபகம் வரும். கோந்து மாதிரி இருந்ததா, வேகாத கட்டியும்,களரியுமாக இருந்ததா, சொட்டச் சொட்ட வாசனையான… Continue reading பிசுபிசுப்பு இல்லாமல் ரவா கேஸரி செய்வது எப்படி?

அவியல், சமையல், சாம்பார் செய்வது எப்படி?, பாலக்காட்டு சமையல், ருசியுங்கள்

மழைநாள் விருந்து – அவியல் செய்வோம்!

அண்டை வீட்டு அவியலைப் பார்ப்போம் வாருங்கள். கல்யாண விருந்துகளில் அவியலுக்கு ஒரு தனியிடமுண்டு. எங்கள் வீட்டில் வழக்கமில்லை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இது பாலக்காட்டு சமையல். நாம் அதை ரசித்து ருசிப்பதால் அதுவும் பிரதான இடத்தைப் பெற்று விட்டது.  நல்ல நாட்டு காய்கறிகளைக் கொண்டே அவியல் செய்கிறோம். வருஷ முழுதும் கிடைக்கும்,  காய்கறிகளான பூசணி,பறங்கி, முருங்கை, வாழைக்காய், சேனைக்கிழங்கு முதலிய ஐந்தும் இன்றியமையாதது. அவியலுக்கு ஆகாத கஷ்ணமில்லை என்ற ஒரு வாக்கியமும் உண்டு. காய் என்பது, கஷ்ணம்.… Continue reading மழைநாள் விருந்து – அவியல் செய்வோம்!

கறிப்பொடியும் உருளைக்கிழங்கு கறியும், சமையல், செய்து பாருங்கள், ருசியுங்கள், வாழைக்காய் கறி

கறிப்பொடியும் வாழைக்காய் கறியும்

ருசியுங்கள் வேண்டியவைகள் மிளகாய் வற்றல் - 15 தனியா - அரை கப் கடலைப் பருப்பு - அரை கப் உளுத்தம் பருப்பு - அரை கப் பெருங்காயம் - சின்ன கட்டி வேண்டியவர்கள் ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம் சேர்த்துக்கொள்ளவும். செய்முறை நல்ல மிதானமான தீயில் வெறும் வாணலியில் பருப்புகளைத் தனித்தனியாக , சிவக்க வறுத்துக் கொள்ளவும். தனியாவை கருகாமல் வறுக்கவும். மிளகாயை துளி எண்ணெய் விட்டு வறுத்தெடுக்கவும். ஆறியபின் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில்,கரகரப்பாகப்… Continue reading கறிப்பொடியும் வாழைக்காய் கறியும்

கோடை கால சீசன் சமையல், சமையல், சைவ சமையல், நீங்களும் செய்யலாம், பருப்புப் பொடி, ருசியுங்கள்

சுலபமாக தயாரிக்கலாம் பருப்புப் பொடி!

ருசியுங்கள் ஒரு அவசரமென்றால் வீட்டில் பருப்புப் பொடி இருந்தால்,சாப்பாட்டை சிம்பிளாக ஒரு வேளை முடித்துக் கொள்ள உதவும் சமய ஸஞ்ஜீவினி இது.. ஒரு பச்சடி, சாதா ரசம்,அப்பளாம், வடாம், வற்றல் என்று பொரித்து சாப்பாட்டை ரசித்து சாப்பிடலாம். இப்போது இவையெல்லாம்,  ஒரு குறிப்பிட்ட கடைகளில் கிடைத்து விடுகிறது. ஆனாலும், நாமாக நமக்கு வேண்டியதைச் செய்வது போலாகுமா? சில பேருக்கு இவைகள் வழக்கத்தில் இல்லாமலும் இருக்கலாம். தெரியாததாகவும் இருக்கலாம். நான் சொல்லி தெரியவைத்து, ருசிபார்த்து  உங்களின் அபிப்ராயங்களைத் தெரிந்து… Continue reading சுலபமாக தயாரிக்கலாம் பருப்புப் பொடி!