அரசியல், தமிழ்நாடு, வணிகம்

ஏ.டி.எம். சேவைக்கு கட்டணம்: ராமதாஸ் கண்டனம்

வங்கி ஏ.டி.எம். சேவைக்கு கட்டணம் வசூலிப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஒரு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அந்த வங்கியின் ஏ.டி.எம். சேவையை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதற்காக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்பதுதான் இதுவரை இருந்த நடைமுறையாகும். அதுமட்டுமின்றி மற்ற வங்கிகளின் ஏ.டி.எம் சேவையை மாதம் 5 முறை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. ஆனால், கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.களில் மாதம்… Continue reading ஏ.டி.எம். சேவைக்கு கட்டணம்: ராமதாஸ் கண்டனம்

இந்தியா, வணிகம்

ஆன்லைன் ஷாப்பிங் 7 மடங்கு வளர்ச்சி பெறும் :ஆய்வு

இந்தியாவின் ஆன்லைன் ஷாப்பிங் வணிகம் இன்னும் 7 ஆண்டுகளில் 7 மடங்கு வளர்ச்சி பெற்று 5 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயை தொடும் என தெரியவந்துள்ளது. இ டெய்லிங் இந்தியா என்ற அமைப்பின் நிறுவனர் ஆஷிஷ் ஜலானி இதைத் தெரிவித்துள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் இணையதளம் மூலம் பொருட்களை வாங்குவோர் எண்ணிக்கை வெகுவாக பெருகும் என்றும் அவர் தெரிவித்தார். இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவை இந்தியா முந்தும் என கூகிள் நிறுவனம்… Continue reading ஆன்லைன் ஷாப்பிங் 7 மடங்கு வளர்ச்சி பெறும் :ஆய்வு

வணிகம்

5 ஆண்டுகளுக்குப் பிறகு டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.37 குறைந்தது!

டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை மத்திய அரசு சனிக்கிழமை நீக்கியது. சர்வதேச நிலவரத்துக்கேற்ப இந்தியாவில் டீசல் விலை நேற்று நள்ளிரவு, லிட்டருக்கு ரூ. 3.37 குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "சனிக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றார். மத்திய அரசின் இந்த முடிவைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் நிலவும் விலைக்கேற்ப இந்தியாவில் டீசல் விலையை இனிமேல் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்… Continue reading 5 ஆண்டுகளுக்குப் பிறகு டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.37 குறைந்தது!

வணிகம்

நோக்கிய தொழிற்சாலையை மூடும் முடிவு: கேள்விக்குறியாகும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நிலை

சென்னையிலுள்ள நோக்கியா செல்போன் தயாரிப்பு ஆலையை நவம்பர் முதல் தேதியிலிருந்து மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனத்தின் உலகளாவிய செல்போன் தயாரிப்பு மற்றும் அது தொடர்பான சேவைகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு விற்பதாக கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிவித்தது. இந்த விற்பனை ஒப்பந்தம் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் நிறைவேறியது. ஆனால், நோக்கியா நிறுவனத்துக்கு எதிராக வருமான வரித் துறை தொடுத்திருந்த வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால், சென்னை அருகே அமைந்த நோக்கியா… Continue reading நோக்கிய தொழிற்சாலையை மூடும் முடிவு: கேள்விக்குறியாகும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நிலை

கல்வி - வேலைவாய்ப்பு, வணிகம்

அடுத்த 3 ஆண்டுகளில் இணைய வணிகத்தில் ஒன்றரை லட்சம் வேலை வாய்ப்பு!

அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் இணைய வணிகத்தில் குறைந்தது 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என அன்டல் இன்டர்நேஷனல் நெட்வொர்க் நிறுவனத்தின் இந்தியக் கிளை மேலாண் இயக்குனர் ஜோசப் தேவேஷியா தெரிவித்துள்ளார்.  அடுத்த 3 ஆண்டுகளில் 25 சதவிகித வளர்ச்சி ஏற்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இத்துறை கிட்டத்தட்ட 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக உள்ளது எனவும், 2016ம் ஆண்டு வாக்கில், இது… Continue reading அடுத்த 3 ஆண்டுகளில் இணைய வணிகத்தில் ஒன்றரை லட்சம் வேலை வாய்ப்பு!