சினிமா

சண்டமாருதத்தில் புதிய தோற்றத்தில் மீரா நந்தன்!

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டு இரட்டை வேடத்தில் சரத்குமார் நடிக்கும் திரைப்படம் சண்டமாருதம். அதுவும் கதாநாயகனாக மாறிய பின்பு முதன் முதலாக சரத்குமார் ஒரு கொடூரமான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ஒன்றுகொன்று உருவ ஒற்றுமை, அண்ணன் – தம்பி, அப்பா – பிள்ளை போன்ற வழக்கமான இரைட்டை வேடங்களில் இல்லாமல் இரு வேறு வித்தியாசமான வில்லன் – கதாநாயகன் வேடங்களை ஏற்றிருக்கிறார். இது மட்டுமின்றி இப்படத்தில் அவர் கதாசிரியராகவும் அறிமுகமாகிறார். திரைக்கதை வசனத்தை எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதுகிறார். … Continue reading சண்டமாருதத்தில் புதிய தோற்றத்தில் மீரா நந்தன்!

சினிமா

மீண்டும் சரத்குமார் – A.வெங்கடேஷ் கூட்டணி!

சென்னையில் ஒரு நாள், புலிவால் போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம், தனுஷ், காஜல் அகர்வால் நடிக்கும்  படத்தையும், விக்ரம் பிரபு நடிக்கும் படத்தையும் தயாரிக்க உள்ளது. இந்நிறுவனம் தற்போது சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் “சண்டமாருதம்” என்ற படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. “எதிரியை எதிரியா பார்த்து பழக்கமில்லை எனக்கு, எரிச்சித்தான் பழக்கம்” என்கிற கொள்கையுடைய அழுத்தமான வில்லன் கதாபாத்திரம் ஏற்கிறார் சரத்குமார். “புயல், சுனாமி போன்றவற்றையும் தாண்டி… Continue reading மீண்டும் சரத்குமார் – A.வெங்கடேஷ் கூட்டணி!

சினிமா

முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆரம்பித்த தயாரிப்பு நிறுவனம்!

தமிழ்த் திரையுலகில் மூன்று முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களான இயக்குனர் சுசீந்திரன், ஒளிப்பதிவாளர் மதி, கலை இயக்குனர் ராஜீவன் மூவரும் இணைந்து புதிய திரைப்படத்  தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளனர்.   ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் சுசீந்திரன். இவரது சிறந்த கமர்ஷியல் படங்களுக்கு உதாரணம் ‘நான் மகான் அல்ல, பாண்டிய நாடு’. ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தின் மூலம் ஒரு தேசிய விருதையும் தமிழகத்திற்கு பெற்றுத் தந்தவர். கடந்த ஆண்டு… Continue reading முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆரம்பித்த தயாரிப்பு நிறுவனம்!

கோலிவுட், சினிமா, சினிமா இசை

’கொஞ்சம் நடிங்க பாஸ்’ ஆதவனின் சினிமா எண்ட்ரி!

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வருபவர்களில் லேட்டஸ்ட் வரவு ஆதித்யா சேனலில் ’கொஞ்சம் நடிங்க பாஸ்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ஆதவன். ‘இருக்கு ஆனா இல்ல’ என்கிற த்ரில்லர் படத்தில் காமெடி கேரக்டரில் நடிக்கிறார் ஆதவன். இந்தப் படத்தில் புதுமுகங்கள் விவாந்த் மற்றும் மணீஷா ஸ்ரீ கதை நாயகர்களாக நடிக்கிறார்கள். ஒய்.ஜீ. மகேந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் துபாயில் நடைபெற்றது.